மனிஷங்க வேண்டியிருக்கு பாவம்!

Dog

”அசோக்.. அங்கிளுக்கு உக்கார இடம் வேணும் எழுந்திரு” என்றான் பாலு.

 ஒரு தரம் நிமிர்ந்து பார்த்து விட்டுத் தன்பாட்டுக்க நாற்காலியில் உட்கார்ந்திருந்தது அந்த நாய்.

 “வர வர ரொம்ப மோசமாப் போய்கிட்டு இருக்கே. நீ இப்போ எழுந்திரிக்கல்லைன்னா நான் வெளியே போறேன்” என்று எழுந்து வாசல் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

 நாய் வேண்டா வெறுப்பாக எழுந்து உள்ளே போனது.

 “வர வர இவன் பிடிவாதம் ஜாஸ்தியாப் போச்சு. எழுப்பி விடறதுக்கு என்ன பாடு பட வேண்டியிருக்கு. பகல்லே நாற்காலியை விட்டு எழுந்திரிக்கிறதில்லை. ராத்திரியில வாசல்ல படுக்கிறதில்லை. வீட்டுக்குள்ளதான் படுப்பானாம்” பாலு செல்லமாக அலுத்துக் கொண்டான்.

 இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. சங்கடத்தைப் புன்னகையால் மறைத்துக் கொண்டேன்.

 “இவனுக்கு எப்பவும் யாராவது பக்கத்துல இருந்துகிட்டே இருக்கணும். அதனாலதான் நாங்க எங்கேயுமே போக முடியல்லை” என்றவன்,

 “உக்காரு” என்றான் நாய் காலி செய்த நாற்காலியைக் காட்டி.

 நல்ல வேளையாக அப்போது பார்த்து மொபைலில் ஒரு கால் வந்தது. எடுத்து யார் என்று கூடப் பார்க்காமல்,

 “ஓ.. சாரி. மறந்தே போய்ட்டேன். ஒரு பதினஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ண முடியுமா? வந்து கிட்டே இருக்கேன்” என்று சொல்லி கட் செய்தேன்.

 “உன் பையனை எலெக்ட்ரிக் டிரெயின்ல பார்த்தேன். அட்ரஸ் சொன்னான். பாத்து பல வருஷம் ஆச்சே, பார்த்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன். இன்னொரு அப்பாயிண்ட்மெண்ட் இருக்குங்கிறதை மறந்தே போனேன். வரட்டுமா?” என்றபடி வாசல் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

 “ஒரு காபி கூட சாப்பிடாமப் போறியே..”

 “அதனால என்ன.. இருக்கட்டும். இன்னொரு சமயம் பார்த்துக்கலாம்” என்று வெளியில் வந்தேன்.

 போர்டிகோவில் நாய் அசுத்தம் பண்ணியிருந்தது.

 “நாயை வெளியே கூட்டிப் போய் பழக்கல்லை போலிருக்கு”

 “நோ.. நோ.. பொதுவா இப்படிப் பண்ண மாட்டான். ரெண்டு நாளா அவனுக்கு உடம்பு சரியில்லை. காலைல மழை வேறே பெய்ஞ்சது இல்லையா?”

 “ஓ.. சரி.. சரி. நாளைக்கு வேலைக்காரி வந்து கிளீன் பண்ணிடுவா போலிருக்கு”

 “நோ.. நோ.. வேலைக்காரி இதெல்லாம் பண்ண மாட்டா. நாங்களே பண்ணிடுவோம்”

 “ரொம்பப் பொறுமைடா”

 “சீச்சீ.. பொறுமைன்னு எல்லாம் சொல்லாதே. அதை எங்க வீட்டுக் குழந்தை மாதிரிதான் வளர்க்கறோம்”

 “கரெக்ட்டு.. வீட்டுக்குள்ளதான் படுக்குதுன்னு வேறே சொன்னே இல்லே?”

 “ஆமாம். பாவம்.. மனிஷங்க வேண்டியிருக்கு அதுக்கு. எப்படித் தனியா படுக்க விடறது?”

 ”வாஸ்தவம்தான். மனிஷங்க வேண்டியிருக்கிறப்போ எப்படி வெளியில படுக்க விடறது! போகட்டும், அம்மா அப்பா நல்லா இருக்காங்களா?”

“அம்மா பொய்ட்டா. அப்பா மட்டும்தான் இருக்கார்”

 “எங்கே வீட்ல காணும்?”

 “ஹோம்ல இருக்கார்”

 “யாரு ஹோம்ல?”

 “பெரம்பூர்ல.. ஓல்ட் ஏஜ் ஹோம்ல இருக்கார்”

 “என்னாச்சு?”

 “வயசாயிடிச்சு. சாப்பிட, தண்ணி குடிக்க, மருந்து சாப்பிடன்னு யாராவது ஒருத்தர் கூடவே இருக்க வேண்டியிருக்கு. டாய்லெட்டுக்கு அழைச்சிகிட்டுப் போக வேண்டியிருக்கு. சில சமயம் வேஷ்டியிலயே போயிடறார்”

 “ப்ச்….. கஷ்டம்தான்; யாராவது ஒருத்தர் கூடவே இருக்க வேண்டியிருந்தா எப்படி வீட்ல வச்சிக்கிறது! அதான் கொண்டு விட்டுட்டே போலிருக்கு. சரி, நான் புறப்படட்டுமா?” என்றபடி கிளம்பினேன்.

 ***

Advertisements

10 comments

  1. அன்பின் ஜவர்லால் – என்ன செய்வது – இது மாதிரி மனிதர்களும் இருக்கிறார்கள் – பெற்றவர் முதியொர் இல்லத்தில் – வளர்பு நாய் படுக்கை அறையில் – ம்ம்ம்ம் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  2. வருத்தமான விஷயத்தை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கீங்க. இதே மாதிரிதான் இவர் பிள்ளையும் இவரை நடத்துவான் என்பதை இவர் ஓல்ட் ஏஜ் ஹோம் போனதும் உணருவாரா?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s