எத்தனை முனியாண்டி வந்தாலும்…

பல வருஷங்கள் கழித்து நானும் என் நண்பனும் எங்கள் கிராமத்தில் அதிகாலை வாக்கிங் போய்க் கொண்டிருந்தோம்.

 மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு ஆள் குளத்தில் இறங்கி கைகால் கழுவிக் கொண்டான். அரச மரத்தடியில் இருந்த பிள்ளையாரிடம் வந்து மளமளவென்று ஐந்தாறு தோப்புக்கரணம் போட்டான்; தலையில் குட்டிக் கொண்டான். பிறகு பிள்ளையாரை சுற்ற ஆரம்பித்தான்.

 என் நண்பன் அவனைப் பார்த்து “என்னய்யா.. எக்ஸர்சைஸ் பண்ணியாச்சு, தலைல அடிச்சிகிட்டாச்சு. பிள்ளையார் லாட்டரில லட்ச ரூபா குடுத்துடுவாரா?” என்றான்.

 மாட்டுக்காரன் பதிலேதும் சொல்லவில்லை. சிரித்துக் கொண்டே பிள்ளையாரை சுற்றினான்.

 “எத்தனை முனியாண்டி வந்தாலும் உங்களையெல்லாம் திருத்த முடியாதுடா” என்றான் தொடர்ந்து.

 எங்க ஊர்க்காரர்கள் எல்லாருமே இதை அடிக்கடி சொல்வார்கள். அவர்களுக்கெல்லாம் முனியாண்டி ஒரு பூலோக மாமேதை.

 சுற்றி முடித்து வந்த அவன் என் நண்பனைப் பார்த்து, “ஐயா ராத்திரி எல்லாம் தூங்கி இருக்கோம். உடம்பு சோர்ந்து இருக்கும். மூளை வேலை செய்யாது. கொஞ்சம் உடல்பயிற்சி பண்ணி தலையைத் தட்டி விட்டா உடம்பும் மூளையும் ஃப்ரெஸ்ஸா இருக்குங்க” என்றான்.

 “அதை பிளே கிரௌண்ட்ல போய் பண்ண வேண்டியதுதானே?”

 “இல்லீங்க.. அரச மரக் காத்து உடம்புக்கு நல்லதுங்க. அரச மர வேர்லேர்ந்து வைத்யரு நிறைய மருந்தெல்லாம் கூட செய்யறாருங்க. இதையெல்லாம் புள்ளைங்க கிட்டே சொன்னா புரியாதுங்க. எடக்கு மடக்கா கேள்வி கேக்குங்க. ஆனா புள்ளைங்களுக்கு இந்த நல்லது நடக்கணும்ங்கிறதுக்காக பெரியவங்க இங்க ஒரு புள்ளையாரை வச்சி போய் தோப்புக்கரணம் போட்டு தலைல குட்டிக்க புள்ளையார் நல்ல புத்தி குடுப்பாருன்னு சொன்னாங்க”

 அவன் போய் விட்டான்.

 “கொஞ்சம் ஒய்வுக்கப்புறம் வேலை ஆரம்பிக்கணும்ன்னா முதல்லே வார்மிங் அப் எக்ஸர்ஸைஸ் பண்ணுவாங்க. அது மட்டுமில்லை, உக்காந்து உக்காந்து எழுந்திருக்கிறப்போ தலையில் ரத்தம் போறதும் டிரைன் ஆகிறதுமா மாறி மாறி நடக்கும். அது ஒரு பர்ஜிங் மாதிரி. தலையில் குட்டிக்கும் போது செரிப்ரல் கார்ட்டெக்ஸின் ஃப்ரண்ட் லோபில் புதுசா ரீஜெனரேட் ஆன செல்கள் வேலை செய்ய ஆரம்பிக்கும். இதைத்தான் மாட்டுக்கார வேலு சொல்லிட்டுப் போறாரு” என்றேன்.

 “யோசிக்க வேண்டிய விஷயம்தான். எத்தனையோ விஞ்ஞானிங்க இருந்தும் முனியாண்டியைத் திருத்த முடியல்லை போலிருக்கே?”

 “முனியாண்டியைத் திருத்திகிட்டிருக்கிற வேலையை விஞ்ஞானிங்க பண்ண மாட்டாங்க”

 “ஏன்?”

 “ஒரு மாட்டுக்காரனுக்கு தெரிஞ்ச சாதாரண விஷயம் முனியாண்டிக்கு தெரியல்லையே.. அவனைப் போய் திருத்திகிட்டிருக்கிறது வேஸ்ட்டுதானே!”

Advertisements

3 comments

  1. “ஒரு மாட்டுக்காரனுக்கு தெரிஞ்ச சாதாரண விஷயம் முனியாண்டிக்கு தெரியல்லையே.. அவனைப் போய் திருத்திகிட்டிருக்கிறது வேஸ்ட்டுதானே!”

    பேதைகளுக்கு தெரிந்த சாதாரண விஷயங்கள்
    மேதைகளுக்கு உறைப்பதில்லை..!

  2. அன்பின் ஜவர்லால் – பேதைகளுக்குத் தெரிந்தது அனுபவ அறிவு -மேதைகளிளுக்குத் தெரிய வாய்ப்பில்லை – நல்லதொரு சிந்தனை – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s