முயலுக்கு மூணே கால்

”இந்த சுந்தரம் இருக்கானே ரொம்பப் பிடிவாதக்காரன். தான் பிடிச்ச முயலுக்கு மூணுகால்ன்னா மூணு கால்தான், கடைசி வரைக்கும் மாத்திக்க மாட்டான். விதண்டாவாதம் பன்ணிகிட்டே இருப்பான்”

“அதெப்படி உனக்குத் தெரியும்?”

 “அனுபவம்தான்”

 “என்ன அனுபவம்?”

 “அவன் கூட எதைப் பத்தியாவது விவாதம் பண்ணியிருக்கியா?”

 “இல்லையே?”

 “நான் பண்ணியிருக்கேன். நேத்து பாரு, முட்டாள்தனம் வேறே, அறியாமை வேறேன்னு சொல்றேன், ஒத்துக்கவே மாட்டேங்கிறான்”

 “ஈஸ் இட்? ரெண்டும் ஒண்ணுதான்னு சொல்றானா?”

 “ஆமாம். அறியாமைங்கிறது முட்டாள்தனத்தோட ஆரம்பமாம். செடிதானே மரமாகுது, செடி வேறே மரம் வேறயான்னு விதண்டவாதம் பண்றான்”

 “அதுக்கு நீ என்ன சொன்னே?”

 “அதெப்படிடா அதுவும் இதுவும் ஒண்ணாகும், மரம்ங்கிறது செடியோட வளர்ச்சிடா, முட்டாள்தனம் அறியாமையின் வளர்ச்சியான்னு கேட்டேன்”

 “அருமை, அதுக்கு அவன் என்ன சொன்னான்?”

 “ஆமாம்டா, அறியாமை இருக்குன்னு தெரிஞ்சி அதைப் போக்கிக்கிட்டா அப்பவே அறியாமை காணாமப் போயிடும். போக்கிக்காம இருக்கிறதும் யாராவது சொன்னாலும் ஒத்துக்காம, புரியாம அப்படியே தொடர்வதும்தானே கடைசியில முட்டாள்தனமா வந்து முடியுதுன்னான்”

 “சரியாத்தான் சொல்லியிருக்கான். நீ என்ன சொன்னே?”

 “அறியாமை இருக்குன்னு அடையாளம் கண்டுகிட்டாலே அடுத்தது அதைப் போக்கிக்கிற முயற்சிதானே. அறியாமை இருக்கிறதே தெரியாமப் போனாத்தான் பிரச்சினைன்னேன்”

 “ம்ம்ம்ம்”

 “அப்படின்னா தான் ஒரு செடின்னு தெரிஞ்சாத்தான் எல்லாச் செடியும் மரமாகுமா? அல்லது தெரிஞ்சாலும் தெரியல்லைன்னாலும் மரமாயிடுமான்னு கேட்டான்”

 “அடேடே.. அப்புறம்?”

 “எல்லாச் செடியும் மரமாத்தான் போகுது. ஆனா எல்லா அறியாமையும் முட்டாள்தனமா ஆகிறதில்லைன்னேன்”

 “சரியாத்தான் இருக்கு. அதுக்கென்ன சொல்றான்?”

 “எல்லாச் செடியும் மரமா ஆகுதுன்னா ஏன் கொத்தமல்லி மரம், புதினா மரம், முளைக்கீரை மரம், நெல்லு மரம், உருளைக் கிழங்கு மரம், முட்டைக் கோஸ் மரம், வெங்காய மரமெல்லாம் இல்லைங்கிறான்”

 “ஹா.. ஹா… ஹா “

 “என்ன ஹா.. ஹா.. ஹா? புடிச்ச முயலுக்கு மூணே கால்ன்னு பேசறான்னு சொல்றேன். வெட்டி விவாதம் பண்றான்னு சொல்றேன். இதுல சிரிப்பு என்ன வேண்டியிருக்கு?”

 “நான் சிரிச்சது வேறே விஷயத்துக்கு”

 “எதுக்கு?”

 “எவ்வளவு நேரம் பேசினே?”

 “ஒரு மணி நேரம்”

 “ஒன் அவர் பேசியும் நீ சொன்னதை அவன் ஒத்துக்கல்லை?”

 “ஆமாம்ப்பா.. அதான் பிடிவாதக்காரங்கிறேன்”

 “அவன் சொன்னதை நீ ஒத்துக்கிட்டியோ?”

 “இல்லையே?”

 “அப்ப நீ பிடிவாதக்காரன் இல்லையா?”

Advertisements

4 comments

  1. வணக்கம்
    அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்
    தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி விபரம் இங்கே.http://2008rupan.wordpress.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  2. அன்பின் ஜவர்லால் – நல்லாவே இருக்கு – ஒருத்த சொன்னத மற்றவர் ஒத்துக் கொள்ளாமல் ரெண்டு பேரும் பிடிவாதம் பிடிச்சா என்ன பண்றது – மூணாவ்து மனுசன் வந்து ரெண்டு பேருமே பிடிவாதக் காரன்னு சொல்லி தீர்ப்பு சொன்னது சரிதான் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s