கேஜ்ரிவாலின் எளிமையும் கிடாரங்காய் ஊறுகாயும்

அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு சின்ன வீடு தேடும் படலம் பற்றிய செய்தியை நண்பர் engalblog  Sriram Balasubramaniam  பகிர்ந்திருந்தார்.
எனக்கு நேர்ந்த அனுபவம் ஒன்று ஞாபகம் வந்தது.
இல்லத்தரசியின் தோழி ஒருவர் வீட்டுக்குப் போயிருந்தோம். ’ராத்திரி உணவுக்கு என்ன பண்ணட்டும்?’ என்று கேட்டார் தோழி.
‘ரசம் சாதம், சுட்ட அப்பளம், தயிர் சாதம், ஊறுகாய்’ அவ்வளவுதான் என்றேன்.
சொல்லி விட்டு என் எளிமையை நானே ஒரு தரம் பெருமிதமாக வியந்து அட…க்கமாகச் சிரித்தேன்.
அக்கடா என்று டிவி பார்த்துக் கொண்டிருந்த கணவரை மூஞ்சூர் மாதிரி சப்தம் செய்து உள்ளே அழைத்தார் தோழி. கரகாட்டக்காரன் செந்தில் கவுண்டமணி காதில் சொல்வது போல ஏதோ சொன்னார். அவர் சட்டையை மாட்டிக் கொண்டு ஸ்கூட்டரைக் கிளப்பிக் கொண்டு ஓடினார்.
முக்கால் மணி நேரம் ஆயிற்று.
ஒரு பையை வேட்டிக்குள் மறைத்து அசட்டுச் சிரிப்புடன் கிச்சனுக்கு எடுத்துப் போனார் அந்தக் கணவர். கொஞ்ச நேரத்தில் தோழி வந்து கையைப் பிசைந்து கொண்டு,
’அப்பளம் கிடைச்சிரிச்சு, ஊறுகாயும் வாங்கியாச்சு. குக்கர் வச்சிடறேன். புழுங்கரிசி சோறு பரவாயில்லையா? தயிர் கிடைக்கல்லைங்க’ என்றார்.
‘அடக் கிரகமே இதுக்கா அவரை விரட்டினீங்க? உங்களுக்கு சிரமம் தரக் கூடாதுன்னுதான் இதெல்லாம் கேட்டேன். வீட்ல என்ன இருக்கு?’ என்றேன்.
‘சப்பாத்தியும் குருமாவும் இருக்குங்க’ என்றார்.
Advertisements

9 comments

 1. ஹாஹாஹாஹா, நல்லவேளை கிடாரங்காய் ஊறுகாய் கேட்டீங்க! மாவடு கேட்டிருந்தால் என்ன ஆறது? ஹிஹிஹி, நானெல்லாம் என்ன சாப்பிடறீங்கனு கேட்கவே மாட்டேன். இருக்கிறதைப் போட்டு வாயை அடைச்சுடுவேன். இது எப்பூடி இருக்கு?????

 2. மிகப்பொருத்தமான உதாரணம் ஜவஹர்.
  சில சமயம் நாம் மிகவும் எளிமை என்று
  நினைக்கும் விஷயங்களே மற்றவர்களுக்கு
  பெருத்த சுமையாகி விடுகிறது.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 3. i have subscribed your page through my gmail. I got your post today. In the message there was a link. ” translate” . Clicking on that, i got the post translated in ENGLISH. Attached for your information; Neengalum sirikkalam.

  “Arvind Kejriwal looking for a house to the little friend of foil engalblog message Balasubramaniam Sriram shared.
  I seem to remember something that has been experienced.
  Someone had gone to a friend’s house housewife. ‘What’s for dinner that night it was?’ Asked the friend.
  ‘Rice soup, baked papad, curd rice, pickles,’ That’s all I said.
  For simplicity, I wondered off by saying I am proud of the quality of sleep Oh … and smiled.
  Akkata husband was watching TV on loud muncur model girlfriend invited inside. Karagattakaran says Senthil kavuntamani overheard saying something like. He hung up his jacket and fled with the scooter club.
  It took three quarters of an hour.
  Simpered and smiled, and went to the kitchen to take a bag hidden vettikkul the husband. With hand, knead in a little friend,
  ‘Kitaicciriccu papad, pickle vankiyaccu. Vaccitaren cooker. Pulunkarici rice okay? Yogurt kitaikkallainka said.
  ‘Oh kirakame itukka virattininka him? You’ve heard all this trouble to kutatunnutan. What’s in the house? ‘ I said.
  ‘Flat bread priests irukkunka said.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s