கடவுள் ஏன் காக்க வைக்கிறான்?

வைகுண்ட ஏகாதசி என்பதால் வழக்கமாய் ஃப்ரீயாகச் சந்திக்கிற அனுமாரையும், ராமனையும் கொஞ்சம் காத்திருந்துப் பார்க்க வேண்டியதாயிற்று நேற்று.

 வரிசையில் எனக்கு முன்னால் நின்றிருந்த ஒரு பெரியவர் யார் குறுக்கே புகுந்தாலும் ‘போங்க.. போங்க’ என்று அனுமதித்துக் கொண்டிருந்தார்.

 கோயிலாக இருந்தாலும் சரி, வேறெந்த இடமானாலும் சரி. வரிசையில் குறுக்கே பூர்கிறவர்களைக் கண்டால் எனக்கு அசாத்திய எரிச்சல் வரும். வயசில் ரொம்ப மூத்தவர் என்பதால் எரிச்சலை அடக்கிக் கொண்டு,

 “சார், இப்படி வர்ரவங்களையெல்லாம் விட்டுகிட்டிருக்கீங்களே, தரிசனம் முடிச்சி வீட்டுக்குப் போகிற எண்ணமே இல்லையா?” என்றேன்.

 “தம்பி.. பெரிய மனிஷங்களை மணிக்கணக்கா கியூவில நின்னு பாக்கிறவங்களைத் தெரியுமா உங்களுக்கு?” என்றார்.

 “தெரியும்”

 “ஒரு வணக்கம், இல்லைன்னா ஒரு புன் சிரிப்பு, இல்லைன்னா கொஞ்சம் நன்கொடை அல்லது கொண்டு வந்த புகார் மனுவை வாங்கிக்கிறதுன்னு சட் சட்டுன்னு டிஸ்போஸ் பண்ணிகிட்டே இருப்பாங்க தெரியுமா?”

 “ஆமாம்”

 “ஆனா சில குறிப்பிட்ட ஆசாமிகளை மட்டும், ஏய்.. சுப்புணி நீ கொஞ்சம் வெய்ட் பண்ணுன்னு நிக்க வைப்பாங்க”

 “ஆமாம்”

 “எல்லாரும் போனப்புறம் வாடா சுப்புணி உக்காருன்னு உக்கார வச்சி பொறுமையாப் பேசுவாங்க”

 “ஆமாம் சார்”

 “அப்படிப்பட்ட ஆட்கள் யாரு?”

 “ரொம்ப நெருக்கமானவங்களா இருப்பாங்க”

 ”நீங்களும் நானும் தனக்கு ரொம்ப நெருக்கம்ன்னு ராமன் நினைக்கிறான் சார், புரியல்லையா உங்களுக்கு?”

 இதற்கப்புறம் நான் எப்படிக் கோபப்பட முடியும்?

Advertisements

4 comments

  1. அது ஏங்க உங்க இதயம் மட்டும் பேத்துகிறது??? எங்களுக்கெல்லாம் பேத்தறதில்லையே?? ரொம்ப நாளா டவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு!

  2. force fit செய்திருக்கிறீர்கள்.
    காத்து நிற்கும் பரிதாபம் நாமே ஏற்படுத்திக்கொள்வது. அதையும் கடவுள் மெலேயே பழியாகப் போட்டு அதையும் வலுவில் நியாயப்படுத்தி..

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s