ஜெயகாந்தனின் சமாளிஃபிகேஷனா இது?

ஜெயகாந்தன் தீவிர கம்யூனிஸ்ட்டாக இருந்த காலம் உண்டு.

 அப்போதும், அங்கிருந்து விலகிய பிறகும் கூட சோவியத் யூனியன் குறித்து மிகுந்த உயர்வான அபிப்ராயங்களைக் கொண்டிருந்தவர். சோவியத் யூனியன்தான் உலகுக்கே வழிகாட்டி என்று சொன்னவர் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய காலம் வந்தது. அப்படி மாற்றிக் கொள்ள வேண்டியதற்குக் காரணம் சோவியத் யூனியனில் நிகழ்ந்த மாறுதல்களே.

 ஆனால் தன் நிலைப்பாட்டு மாறுதலை அவர் விளக்கும் போது பொத்தாம் பொதுவில் சோவியத் மீது பழி போடவில்லை. அவர் சொன்ன விளக்கமும் சுவாரஸ்யமானது.

 “………………. மறுக்கவில்லை. ஆனால் அதைப் பொய்யென்று காலம் நிரூபித்து விட்டது. அப்படியானால் நான் என் விருப்பத்தைச் சொன்னேன் என்றுதானே புரிந்து கொள்ள வேண்டும்?”

 இதை உலக மகா சமாளிஃபிகேஷன் என்றும் எடுத்துக் கொள்ளலாம். வேறு மாதிரியும் எடுத்துக் கொள்ளலாம்.

 தக்கார் தகவிலார் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப் படும்

 என்கிற குறள் மீது மிகுந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டவர் ஜெயகாந்தன் என்பதைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பதிவு செய்திருக்கிறார். ஒரு நிகழ்வோ அல்லது மனிதரோ அல்லது அமைப்போ சம காலத்தில் உண்டாக்கும் தாக்கங்களை விட தங்களுக்குப் பின்னால் நெடுங்காலம் இந்தச் சமூகத்தால் எப்படி அறியப்படுகிறார்கள் என்பதை வைத்தே தகுதிகள் முடிவு செய்யப்பட வேண்டும். காலம் அதைப் பொய்யென்று நிரூபித்து விட்டது என்று சொல்லும் போது ஜெயகாந்தன் இதைத்தான் உணர்த்துகிறார்.

 Desire, Goal, Achievement இந்த மூன்றுக்கும் ஒரு சுவாரஸ்யமான தொடர்பு உண்டு. ஒன்றைச் சாதிக்க முதல் தேவை Desire. ஒரு இலக்கை நிர்ணயிக்கிறோம். அந்த இலக்கை அடைந்து விட்டால்தான் அதை இலக்கு – Goal என்று சொல்ல முடியும். இல்லாவிட்டால் அது வெறும் Desire தான்.

 A desire becomes a goal only when it is reached; else, it is just a desire என்று அவர் சொல்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

Advertisements

3 comments

 1. ஆசை இலட்சியம் வெற்றி என்பதற்கு
  சுருக்கமான அருமையான விளக்கம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

 2. அவர் உண்மையை உள்ளபடி ஒப்புக் கொண்டிருக்கலாம். ஆனால் ஏன் இவ்வளவு சொல் விரயம் எனத் தெரியவில்லை.
  ஆனாலும் எனக்குப் பிடித்த எழுத்தாளர். அதிலும் அவர் ஆரம்ப எழுத்து மிக வீரியம் மிக்கது.
  பின் “ஹர ஹர சங்கர” என நமத்துப் போனதில் வருத்தமே!

  //ஆசை இலட்சியம் வெற்றி என்பதற்கு
  சுருக்கமான அருமையான விளக்கம்//
  ரமணி அவர்களை வழி மொழிகிறேன்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s