காதலர் தின மறு ஒளிபரப்பு!

கலை இலக்கிய உலகத்தின் காட் பார்ட்டிக்கிள் – காதல்.

காதலை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படங்களும் எழுதப்பட்ட இலக்கியங்களும் பல வருடங்களாக விற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு இது தொடரக் கூடும். காதலின் விஞ்ஞானத்தைக் கொஞ்சம் பார்த்தோமானால், அதற்குத் தரப்படுகிற இலக்கிய அந்தஸ்து பைத்தியக்காரத்தனமாக நமக்குத் தோன்றலாம்.

விஞ்ஞானம் காதலை மூன்று நிலைகளாகப் பிரிக்கிறது.

 1.  காமம்
 2. கவர்ச்சி
 3. பிணைப்பு

காமம் என்கிற நிலை இக்னிஷன் கீ போட்டு ஒரு எஞ்சினை ஸ்டார்ட் செய்வது போல. எஞ்சினே ஸ்டார்ட் ஆகவில்லை என்றால் ஃபர்ஸ்ட் கியராவது செக்கண்ட் கியராவது. ஸ்டார்ட் ஆக கொஞ்சம் எரிபொருள், கொஞ்சம் ஆக்ஸிஜன் இரண்டும் தேவை.

காமத்துக்கு இந்த எரிபொருளாகவும், ஆக்ஸிஜனாகவும் இருப்பது டெஸ்டோஸ்டெரோன் அல்லது (பெண்ணாக இருந்தால்) ஈஸ்ட்ரோஜென். (testosterone and oestrogen) இது இல்லாமலோ குறைவாகவோ இருக்கிற போது ஒன்று, எஞ்சின் ஸ்டார்ட் ஆவதே இல்லை; அல்லது ரொம்ப சிரமப்பட்டு சோக் போட்டு, ஹீட்டர் போட்டு திரும்பத் திரும்ப கிராங்க் செய்து ஸ்டார்ட் பண்ண வேண்டியிருக்கும். டெஸ்டோஸ்டெரோன் சுரப்பது நிற்கும் போது ஆண்களிடம் கொஞ்சம் பெண் தன்மைகள் தலையெடுக்கின்றன. ஐம்பது வயதைக் கடந்த பல ஆண்கள் பனியன் இல்லாமல் இருக்கிற போது முகத்தை மறந்து விட்டால் ஆபாசப் படப் போஸ்டர் நினைவு வருகிறது.

ஈஸ்ட்ரோஜென் நின்ற பெண்கள் சிலர் பேசும் போது டி.எஸ்.பாலைய்யா பேசுவது போல் இருக்கிறது.

அடுத்த நிலை கவர்ந்திழுக்கப்பட்டு வேறு சிந்தனையின்றி அதிலேயே ஆழ்தல். இது நடக்க, ஆட்ரினாலின், டோபாமைன், செரோடோனின் முதலிய வஸ்துக்கள் தேவை. (adrenaline, dopamine and serotonin)

ரத்தத்தில் ஆட்ரினாலின் அளவு அதிகரிக்கும் போது தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது. இதயம் படபடக்கிறது, நாக்கெல்லாம் உலர்ந்து போகிறது. சிந்தையிலிருந்து செயலுக்குத் தயாராகும் நிலை இது. இதை நீ செய்துதான் ஆக வேண்டும் என்று மனம் வற்புறுத்தும் போது உடல் ரியாக்ட் செய்கிற விதம் என்று சொல்லலாம். காதல் இல்லையேல் சாதல் என்கிற மனப்பக்குவம் ஆட்ரினலின் விளையாட்டு.

காக்கெய்ன் என்கிற போதைப் பொருள் சாப்பிடும் போது மூளையில் டோப்பாமைன் அதிகரிப்பதாகச் சொல்வார்கள். அதே நிலை இந்தக் காதல் என்று சொல்லப்படும் சமாச்சாரத்தாலும் நிகழ்கிறது. டோப்பமைனால் உணர்வு மட்டுமல்ல அறிவும் இந்த ஸோ கால்ட் காதலுக்கு அடிமைப்பட்டுப் போகிறது. அறிவு வேறு உணர்வுகள் வேறு என்பது இங்கே செல்லுபடியாகவில்லை. காதல் பரிமாற்றங்கள் டிரான்ஸாக்‌ஷனல் அனாலிஸிஸுக்குப் புறம்பானவை. எரிக் பெர்னே காதல் வயப்பட்டிருக்கவே மாட்டார் என்று தோன்றுகிறது. சாப்பாடு பிடிக்காதது, தூக்கம் வராதது, சின்னச் சின்ன பரிமாற்றங்கள் ஏகப்பட்ட சந்தோஷம் தருவது, எப்போதும் கம் ஆன் ஐ ஆம் ரெடி என்கிற எனர்ஜி லெவலில் இருப்பது இதெல்லாம் டோப்பமைனால்தான்.

நரம்பு மண்டலத்தில் காணப்படும் செரோடொனின் என்கிற வஸ்து வேறெந்த சிந்தையில் இருந்தாலும் அங்கே காதலைக் கொண்டு குறுக்கிட்டு எண்ணங்களை திசை மாற்றுகிறது. கண்ணில் பார்க்கிற, காதில் கேட்கிற எல்லாவற்றின் பேரடைமையும் மனதில் இருக்கும் சிந்தை மாற்றுகிறது.

கீரை விற்கிற ஆயா “கீரை வேணுமா?” என்று கேட்டால் “இப்ப வேணாம் எல்லாரும் பார்க்கறாங்க” என்று பதில் சொல்ல வைக்கிறது. பேண்ட்டை மடித்துக் கட்ட முயல்வது, வேஷ்டியில் ஸிப்பைத் தேடுவதெல்லாம் நடக்கிறது.

கவனியுங்கள்; டெஸ்டோஸ்டெரோன் சுரக்க ஆரம்பித்ததும் நரம்புகளில் செரோடொனினையும், மூளையில் டோப்போமைனையும், ரத்தத்தில் ஆட்ரினாலையும் அனுப்பி சிந்தை, உணர்வு, செயல்பாடு எல்லாவற்றிலும் காதலின் ஆட்சியை நிலைநாட்டுகிறது. மனிதர்களின் சாஃப்ட்வேர், ஹார்ட்வேர் இரண்டும் காதலில் சிக்கித் தவிக்கிறது.

அப்செஸ்ஸிவ் கம்பெல்ஸிவ் டிஸ் ஆர்டர் என்றொரு மனநோய் உண்டு. எதிலும் முழு முனைப்புடன் ஈடுபட முடியாமல், இடைஞ்சலான சிந்தனைகள், உணர்வுகள், தூண்டுதல்கள் உண்டாகி அதை மனதிலிருந்து விலக்க வினோதமான செயல்களைச் செய்யும் நிலைதான் இது. தூண்டப்பட்ட செயல்களைச் செய்யும் வரை ஆத்திரமாக இருக்கும். சில சமயம் கொலைவெறி கூட உண்டாகும். OCD செரோடொனின் அளவு அதிகரிப்பதால் உண்டாகும் சீக்கு!

அடுத்த நிலையான பிணைப்பு, விரும்பியவருடன் கூடி இருத்தல் என்பதை ஆக்ஸிடோஸின்,    வேஸோப்ரெஸ்ஸின் ஆகிய வஸ்துக்கள் செய்கின்றன. (oxytocin and vasopressin)

ஆக்ஸிடோஸின் தாம்பத்ய உறவின் போது வெளிப்படுகிறது. எதிராளியின் ரத்தத்தில் விதைக்கப்படும் இந்த வஸ்து டிரான்ஸ்மிட்டராக அல்லது ரிஸீவராக சம்பந்தப்பட்டவருடன் பிணைத்து வைக்கிறது. குழந்தை பிறக்கும் போதும் இது வெளிப்படுகிறதாம். அதனால்தான் தாய்க்கும் குழந்தைக்கும் இருக்கும் பிணைப்பு மிகுந்த வலுவுடன் இருக்கிறது. ஆக்ஸிடோஸின் குழந்தையை தாய் வழியாக அப்பாவுடன் இணைப்பதால் சிக்னல் கொஞ்சம் வீக்காக இருக்கிறது. அப்பாவுடனான உறவு சிலோன் ரேடியோ சிக்னல் போல சற்று தளர்ந்தும், அம்மாவுடனான உறவு ரேடியோ சிட்டி மாதிரி படு ஸ்ட்ராங்காக இருப்பதும் இதனால்தான்.

வேஸோப்ரெஸ்ஸின் இந்தப் பிணைப்பை நீண்ட காலம் தொடரப் பயன்படுகிறது.

சினிமா வசனங்கள் வரும் காலங்களில் இப்படி மாறலாம்….

“உடம்புல டெஸ்டோஸ்டெரோன் சுரக்கிற ஆம்பிளையா இருந்தா எம்மேல கைவைடா பாக்கலாம்”

“மூளையில டோப்போமைனே இல்லையா? இப்படி ஜடம் மாதிரி உட்கார்ந்திருக்கியே?”

”நீயெல்லாம் ஒரு தாயா? உன் உடம்பில ஆக்ஸிடோஸின் கிஞ்சித்தும் இல்லையா?”

“ஒரு பொண்டாட்டியோட குடித்தனம் பண்ண முடியாத வேஸோப்ரெஸ்ஸின் இல்லாத ஜன்மங்கள்”

இந்தப் பதிவு இரண்டு விளைவுகளை உண்டாக்கலாம்.

முதலாவது, நிஜமான விஞ்ஞானிகளும், டாக்டர்களும் This article is causing annoyance என்று 66A வை என் மேல் பிரயோகிக்க முற்படலாம். இப்போதே சொல்லி விடுகிறேன், நான் டாக்டரோ விஞ்ஞானியோ அல்ல. ஹார்மோன்கள் குறித்து சில புத்தகங்களையும் சில வலைப் பக்கங்களையும் படித்ததால் என் சிற்றறிவுக்கு எட்டியவைகள் நான் எழுதியிருப்பவை. திருத்தங்களும், அதிகத் தெளிவும் தரும் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.

அல்லது என்னை உதைக்க வேண்டும் போல வெறி வரலாம். ஆட்ரினாலின் ஜாஸ்தியாகிவிட்டது என்று அர்த்தம். நேரத்துக்குச் சாப்பிட்டு, நிறையத் தூங்குவதும், நைட்ரோ கிளிஸரீன்  0.5 மில்லிகிராம் இருக்கும் மருந்துகள் உட்கொள்வதும் நல்ல பலனைத் தரும்.

Advertisements

4 comments

 1. அறிவியல் சார்ந்த காதல்; அருமையான படைப்பு.
  நன்றி.
  வள்ளுவரை காமத்துப்பாலின் மிஞ்சி விட்டீர்களே!
  குறள் எண்: 1108
  ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
  கூடியார் பெற்ற பயன்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s