பத்தரை மாற்று(மா) தங்கம்?

பத்தரை மாற்றுத் தங்கம் என்கிறோமே அது என்ன measure?

தங்கத்தின் தரத்துக்கு இத்தனை கேரட் என்கிற கணக்கு இருக்கிறது. மாற்று என்கிற சொல் எப்படி வந்திருக்கும்?

எனக்குத் தமிழாசிரியராக இருந்த பி. சோமசுந்தரம் என்பவர் அதற்கு ஒரு வேடிக்கையான விளக்கம் சொல்வார்.

“தங்க வேலை செய்யற பத்தர்கள் எல்லாரும் பொதுவா ரொம்ப நல்லவங்கடா. தொழில் தர்மம் இல்லாதவங்க அந்த வேலையைச் செய்ய முடியாது. அவங்க எல்லாருமே ரொம்ப நாணயமானவங்க. அதனாலதான் நம்ம ஊர்ல பத்தர் கடைங்க எல்லாம் நாணயக்காரத் தெருவுல இருக்கு. அப்படிப்பட்ட நாணயமான பத்தரை மாற்றிவிடுகிற அளவு அழகாவும், தகதகப்பாவும் இருக்குமாம், அதனால பத்தரை மாற்றுத் தங்கமாம்” என்பார்.

“சார், இதுக்கு வேற மாதிரி கூட விளக்கம் சொல்லலாமே” என்றேன்.

“என்னது சொல்லு?” என்றார்.

“திருடணும்ன்னு சின்ன சபலம் வந்தாக் கூட அவங்க மனசை மாற்றிடும். அதனாலதான் பத்தரை மாற்றுத் தங்கம்ன்னு சொல்றாங்க. ஏன்னா பத்தரை மாற்றுத் தங்கம்ன்னு அழகானவங்களைச் சொல்லல்லையே, நல்ல குணம் உள்ளவங்களைத்தானே சொல்றோம்”

இதைக் கேட்டதும் பி.சோ என்னை உற்றுப் பார்த்து விட்டுச் சொன்னது,

“பரிமேலழகர் மாதிரி நீ ஒரு நரிமேலழகரா வருவேடா”

Advertisements

2 comments

  1. ஒரு சொலவடை இருக்கு. எங்க ஊர் (புதுக்கோட்டை-காரைக்குடி) வட்டாரத்தில் மட்டுமா, இல்லை யுனிவர்சலா-ன்னு தெரியல: ‘அவுங்க அம்மாவுக்கே தாலி செய்யனும்னாலும், தங்க ஆசாரிங்க ஒரு குண்டுமணியாவது எடுக்காம இருக்க மாட்டாங்க’. இதுக்கும் ‘பத்தரை மாத்துத் தங்க’த்துக்கும் வித்தியாசம், முன்னது ஆசாரிங்களப் பத்தினது, பின்னது தங்கத்தப் பத்தினது.

    எனக்கென்னவோ, பத்தரை மாத்துத்தங்கம் என்பது தங்கத்தின் non-reactivity காரணமாய் அமைந்த குணம் மாறாத்தன்மை-யக் குறிக்குது-ன்னு தோனுது.

  2. பத்தர் என்றால் பொற்கொல்லர். மாற்று என்றால் தரத்தின் அளவுநிலை. ஒருமாற்று குறைவு என்றால் ஒரு படிநிலை தரத்தில் கீழ் என்று பொருள். ஆணிப்பொன் என்றால், மற்ற எல்லா பொன்னையும் ஒப்பிட்டுப்பார்த்துத் தரம் நிறுவும் அடிப்படையான உயர்த்ரப்பொன். பத்தர் வைத்திருக்கும் ஆணிப்பொன்னையே மாற்றும் (மாற்றிக்கொள்ள வைக்கும்) உயர்தரம் மிக்கதான அரிய பொன் என்றுபொருள். ”மாற்றுயர்வு வேதை” என்றால் பொன்னை உயர்வகைப்பொன்னாகக் காட்டச்செய்யும் மருந்து. மாற்றுயர்பொன் என்றால் உயர்தரமான பொன்.

    மாற்று என்னும் சொல்லுக்கு வலிமை என்றும் ஒரு பொருள் உண்டு. ”எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ” என்னும் புகழ்பெற்ற திருப்பாவைப் பாடலில் ”மாற்றாரை மாற்றழிக்க வல்லானை” என்னும் சொல்லாட்சி வரும். அங்கே மாற்று என்பது வலிமை, வல்லமை, உறுதி போன்ற பொருள்கள் கொள்ளும். இங்கே பொன்னின் தரத்தைக் குறிக்கும்.

    -செ. இரா. செல்வக்குமார்

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s