மஹாசக்தியே வந்து பிறந்தாலும்….

“என்னென்ன காரணத்துக்கோ அவதாரம் எடுத்து அலுப்பா இருக்கு. பூலோகத்தில் ஒரு சாதாரணப் பெண்ணாப் பிறந்து கொஞ்ச காலம் வாழணும் போல இருக்கு” என்றார் சக்தி.

பரமேஸ்வரன் பதிலேதும் சொல்லவில்லை. லேசாகப் புன்னகை மட்டும் செய்தார்.

“இந்தப் புன்னகைக்கு என்ன அர்த்தம்?”

“புன்னகைக்கு எதுக்கு அர்த்தம் இருக்கணும்? புன்னகையே வேறே ஏதோ ஒண்ணின் அர்த்தம்தானே?”

“அர்த்தமே புரியல்லை, ஆகவே கட்டாயம் இது எதோட அர்த்தமோ அது எனக்குப் புரியப் போகிறதில்லை. நான் பூலோகத்தில் பிறக்க இருப்பதில் உங்களுக்கு ஆட்சேபமில்லையே?”

“என் ஆட்சேபத்தை மீறி நீ போனதில்லையா?”

“உண்டு, ஆனால் அது உங்களை மீற வேண்டும் என்பதற்காக அல்ல. மனைவியர் மீது ஆண்கள் அனாவசியமான ஆதிக்கம்………”

“ஓ.. மேன். இதைப் பலமுறை கேட்டாகி விட்டது. உன்னுடைய ஆட்டிட்ட்யூட் காரணமாய் இப்போது பூலோகத்தில் எந்தப் பக்கம் போனாலும் பெண்கள் மேல் சாவனிஸம் பேசுகிறார்கள் “

“இதோ.. இப்படிப் பெண்களைப் பேசக் கூட அனுமதிக்காத ஆட்டிட்யூட்தான் அதற்குக் காரணம். சரி, என்னுடைய சார்ஜையும் சேர்த்து ஹேண்டில் பண்ணுவீர்களா, எனி அப்ஜெக்‌ஷன்ஸ் ஆர் ப்ரெஜுடிஸஸ்?”

”மனிதப் பிறவி என்பது ஆஃப்டர் ஆல் நம் கணக்கில் அதிக பட்சம் இரண்டு மாதங்கள். நீ புறப்படு, ஐ ஹேவ் நோ அப்ஜக்‌ஷன்ஸ் வாட் ஸோ எவர். எந்த ஊர்?”

“பழகின ஊர்தான், மதுரை”

“என்னுடன் பழகின ஊரா?”

பரமேஸ்வரனின் மொக்கைக்கு ஒரு வாய்ச் சுளிப்பை விடையாகக் கொடுத்து விட்டு பார்வதி புறப்பட்டார்.

பரமேஸ்வரன் வாட்சைப் பார்த்தார். மணி பத்து. பார்வதி இப்போது கருவாக உருவானால் ஜனிப்பதற்கு இன்னும் ஒன்றேகால் மணிநேரம் ஆகலாம். மொபைல் அடித்தது.

எமன்.

“எமா, ஒரு ஒண்ணரை மணி நேரம் கழிச்சி வர்ரேன். பூமியில் இன்னைக்குப் பிறக்கப் போற ஒரு உயிருக்கு ஆசி வழங்கி ஆல் தி பெஸ்ட் சொல்லிட்டு வரணும்”

“ஓ.. மேடம் அவதாரம் எடுக்கறாங்களா? யாரை சம்ஹாரம் பண்ண?”

“சம்ஹாரம் பண்ண ஏகப்பட்ட பேர் இருக்காங்க. ஒரு அவதாரத்தில் அவ்வளவு பேரையும் தீர்த்துக் கட்டணும்ன்னா அணுகுண்டாத்தான் அவதாரம் எடுக்கணும்”

“வாஸ்தவம்தான். அதுக்கு அமெரிக்காக்காரன் கிட்டே பர்மிஷன் வாங்கணுமே” என்று அறுத்து விட்டு எமன் ஃபோனை வைத்து விட்டான்.

முற்பகல் செய்யின் முற்பகலே விளையும் போலிருக்கு. நான் போட்ட மொக்கை எனக்கே ரிட்டர்ன் ஆகுதே என்று நினைத்தபடி கொஞ்சம் டென்ஷனாக, பதினொன்றேகால் ஆகக் காத்திருந்தார். ஏதாவது யோசனையில் மறந்து விட்டால் என்ன செய்வது என்று மொபைலில் ரிமைண்டரும் போட்டு வைத்தார்.

மொபைலில் ரிமைண்டர் அடிக்கும் போது பார்வதி உள்ளே வந்து கொண்டிருந்தார்.

“என்ன ஆச்சு? ஐடியாவை டிராப் பண்ணிட்டியா?” என்றார் ஆச்சரியமாக.

“ப்ச்.. முடிஞ்சது” என்றார் பார்வதி.

வாயிலிருந்து கள்ளிப் பால் வழிந்து கொண்டிருந்தது. ஜனிக்கப் போகும் ஊர் மதுரை என்று சொன்னது ஞாபகம் வந்தது.

Advertisements

10 comments

  1. உசிலம்பட்டினு எழுதி இருந்தா ஒரு வேளை சரியா இருந்திருக்குமோ? மதுரைனு எழுதினது சரியா இல்லை. மதுரையிலே இந்தக் கள்ளிப்பால் விடும் வழக்கமெல்லாம் இல்லை.:))))மீனாக்ஷி பிறந்த ஊரிலே பெண்களுக்குக் கள்ளிப்பாலா? பொருந்தலை! 😦

    @அப்பாதுரை, மதுரைப் பக்கம் உசிலம்பட்டி கிராமப் பகுதிகளில் பெண் குழந்தைகளைக் கள்ளிப்பால் விட்டுக் கொல்வதாகச் செய்திகள் பரவியுள்ளன. இதில் ஓரளவு உண்மையும் உண்டு. அதை வைத்துத் தான் இந்தக் கதை பின்னி இருக்கிறார்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s