கிங் மேக்கரா குயின் மேக்கரா?

எதிர்க் கட்சிகள் அத்தனையும் ஒரே அணியில் கூடினாலும் அ. தி. மு. க மார்ஜினலாய் வெற்றி பெரும் சாத்தியங்களே உள்ளன.

ஆனால் காங்கிரஸோடு கூட்டணி அறிவித்ததன் மூலம் தி. மு. க, பா. ஜ. க வுக்குக் கதவை மூடி விட்டது. பா. ஜ. க மாத்திரம் இல்லை, ஜி. கே. வாசன் அண்ட் கோவுக்கும் பை சொன்னது போலத்தான் அது.

மக்கள் நலக் கூட்டணி என்று ஒன்றை அமைத்ததன் மூலம் தங்களுக்கு தி. மு. க, அ. தி. மு. க இரண்டும் ஒப்புதல் இல்லை என்று வை. கோ அண்ட் திருமா சொல்லி விட்டார்கள். கம்யூனிஸ்டுகளும் டிட்டோ.

பா. ம. க என்ன நினைப்பில் தனித்து நிற்கிறது என்றே தெரியவில்லை. எங்களுக்கு யார் தயவும் தேவை இல்லை என்று சற்று இரக்கம் உண்டாக்கும் தொனியில் அன்புமணி கூவுகிறார். யாருக்காவது அவர்கள் தயவு தேவையா என்பதையும் எண்ணிப் பார்ப்பது நல்லது.

ஒருக்கால் தி. மு. க வோடு கூட்டணியில் வேறு கட்சி இணையலாம் என்றால் அது தே. மு. தி. க மாத்திரமே.

தே. மு. தி. க வுக்குத் தான் எந்தப் பக்கம் போகிறோமோ அந்தப் பக்கம் வெற்றி பெறும் என்கிற நினைப்பு சர்வ உறுதியாக இருப்பது தெரிகிறது. அதனால்தான் கிங்கா, கிங் மேக்கரா என்றெல்லாம் பேச்சு! பிரேமலதாவே பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டால் அவர்கள் குயின் மேக்கராய்த்தான் ஆக முடியும் என்று தோன்றுகிறது. பண்ருட்டி இல்லாத தே. மு. தி. க வெறும் மூச்சு விடும் உடம்புதான். Brain Dead.

கிங்கா, கிங் மேக்கரா என்கிற மாதிரி பேராசைகள் இருந்தால் கூட்டணி ஏற்படாது.

கூட்டணி ஏற்படா விட்டால் லாபம் தே. மு. தி. கவுக்கு இல்லை. அ. தி. மு. க வுக்குத்தான். நஷ்டம் தி. மு. க வுக்கு இல்லை, மக்களுக்குத்தான்.

அ. தி. மு. க ஏன் மாற வேண்டும் என்று கேட்பவர்களுக்கு என் பதில், இம்முறை அவர்கள் தப்பும் செய்யவில்லை, ரைட்டும் செய்யவில்லை. தப்பு பண்ணால் கூடப் பரவாயில்லை, ஏதாவது செய்கிற அரசாங்கம் வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது மக்களுக்கு.

 

 

 

Advertisements

3 comments

  1. “தே. மு. தி. க வுக்குத் தான் எந்தப் பக்கம் போகிறோமோ அந்தப் பக்கம் வெற்றி பெறும் என்கிற நினைப்பு சர்வ உறுதியாக இருப்பது தெரிகிறது.”

    எந்தப்பக்கம் போவது என்று தடுமாறிக்கொண்டு இருப்பவரை ஆளாளுக்கு உசுப்பேத்தி கிங் / கிங் மேக்கர் என்று உளறவைத்து விட்டார்கள். அவர் தன்னாலே தலை கிறுகிறுத்துப் போய் தள்ளாடிக்கொண்டு இருக்கிறார் என்பதே உண்மை நிலை.

  2. //அ. தி. மு. க ஏன் மாற வேண்டும் என்று கேட்பவர்களுக்கு என் பதில், இம்முறை அவர்கள் தப்பும் செய்யவில்லை, ரைட்டும் செய்யவில்லை. தப்பு பண்ணால் கூடப் பரவாயில்லை, ஏதாவது செய்கிற அரசாங்கம் வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது மக்களுக்கு.// இது தான் சார் உண்மை நிலவரம். காங் கூட்டணியால் தி.மு.க. வராது என்பது உறுதி ஆகி விட்டது. இதுவும் உண்மை.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s