வல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா?

அரசனைப் பார்த்த கண்ணுக்கு புருசனைப் பார்த்தா என்னமோ மாதிரி இருக்குமாம் என்பார்கள் பெருசுகள். அந்த என்னமோவில் வருவது என்ன வார்த்தை என்று மனதில் உறுதி வேண்டும் படத்து விவேக் போல மண்டையை உடைத்துக் கொண்டதுண்டு.

அது போல அண்ணா நூற்றாண்டு நூல்நிலையம் வந்த பிறகு கன்னிமாரா நூல்நிலையம் எனக்கு அந்த என்னமோவாக ஆகியிருந்தது. பல காலம் கழித்து நேற்றுத்தான் போயிருந்தேன். தமிழ் இலக்கியங்கள் பகுதியையும் ஏஸி பண்ணிவிட்டார்கள். தவறாமல் ஏஸி போடுகிறார்கள்.

சொ. விருத்தாச்சலம் எனப்படும் புதுமைப் பித்தன், கு. ப. ரா எனப்படும் ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி இவர்கள் மூவரையும் தமிழ் இலக்கியத்தின் டிரெண்ட் செட்டர்கள் என்பார்கள். (புதுமைப்பித்தனின் எழுத்தில் என்ன விசேஷம் என்பது என் சிற்றறிவுக்குப் புரிகிறதில்லை)

அதற்கடுத்த தலைமுறையில் தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், லா. ச. ராமாமிர்தம் இவர்களைச் சொல்லலாம்.

அதையடுத்து வந்த தலைமுறை தமிழ் இலக்கியத்தின் பொற்காலம். இப்படி எண்ணிக்கையில் அடக்கி விட முடியாத அளவுக்கு நல்ல எழுத்தாளர்கள் வந்தார்கள். வல்லிக் கண்ணன் அவர்களில் ஒருவர். மணிக்கொடிக் காலம் தொடங்கி மாத நாவல்கள் காலம் வரையிலான ஏராளமான எழுத்தாளர்களைப் பற்றி வல்லிக் கண்ணன் எழுதியிருக்கும் ’தமிழ் உரைநடை வரலாறு’ என்கிற புத்தகத்தை நேற்று வாசித்துக் கொண்டிருந்தேன்.

பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களையும் சிலாகித்துத்தான் எழுதியிருக்கிறார். சுஜாதா ஒருவர்தான் விதிவிலக்கு. அவரைக் குறித்து எழுதுகையில் மெலிதான எரிச்சல் வெளிப்படுகிறது.

‘…….கதாபாத்திரம் ஒன்றிடம் பேசுகிறவர் “எப்படி சார் எல்லாத்தையும் தெரிஞ்சி வச்சிருக்கீங்க?” என்று கேட்பது போல் ஒரு இடத்தில் எழுதுகிறார். தான் எழுதும் போதும் இப்படி எல்லாரும் கேட்க வேண்டும் என்பதற்காகவே எழுதுவது போல பல விஷயங்கள் எழுதுவார்….’ என்று எழுதுகிறார். ஆன் தி அவுட் செட் இது பாராட்டு போலத்தான் இருக்கிறது.

கு. ப. ரா பற்றி எழுதும் போது அவர் சொல்வதைக் கவனியுங்கள் :

‘….. தனது பேரறிவையும் ராசிக்கியத்தையும் (ராசிக்கியம் என்றால் என்ன? – ஜவர்லால்) வெளிப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் கு. ப. ரா எழுதவில்லை. வாசகனை மிரட்ட வேண்டும், குழப்ப வேண்டும், திகைக்க வைக்க வேண்டும் என்பது போன்ற உயர்ந்த நோக்கம் எதுவும் அவருக்கு இருந்ததில்லை….’

மேற்சொன்ன வாக்கியங்கள் கு. ப. ராவை சிலாகிக்கச் சொன்னதை விட வேறு யாரையோ ரேக்குவதற்குச் சொன்னது என்பது தெளிவு இல்லையா?

இப்போது சுஜாதா பற்றி சொன்னதை மீண்டும் வாசியுங்கள்

Advertisements

3 comments

  1. மிகவும் தெளிவாக புரிகிறது,
    கு ப ரா வின் எழுத்து பற்றி எழுதுவதற்கு பதில், சுஜாதாவை பற்றி எழுதிஉள்ளார்.

  2. நண்பரே,

    வல்லிக்கண்ணனுக்கு சுஜாதாவைப் பிடித்தே ஆகவேண்டும் என்ற காட்டாயம் எதுவுமில்லையே. எனக்கொன்றும் இது விமர்சனம் செய்யப்படவேண்டிய செயலாகத் தெரியவில்லை. மேலும் சுஜாதா பற்றி அவர் சொல்லியிருப்பது உண்மைதான். தனக்கு இத்தனை தெரியும் என்று தனது கதாபாத்திரங்கள் மூலமாகவே வாசகனுக்கு தெரிவிப்பது சுஜாதாவின் நடை.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s