அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு!!

மஹாமகத்தன்று கும்பகோணம் போக முடியாதவர்கள் எல்லாரும் மாசி மாசத்தின் கடைசி நாளான கடந்த ஞாயிற்றுக் கிழமை முற்றுகை இட்டார்கள்.

 எந்தப் பெரியக் கூட்டத்தைச் சொன்னாலும் மஹாமகக் கூட்டம் என்று வர்ணிப்பதைக் கேட்டிருக்கிறேன். ஃபிராங்க்லி நான் பார்க்கும் முதல் மஹாமகக் கூட்டம் இது. விவேக்கின் திருமலை படத்துக் காமெடி போல எங்கே போனாலும் போலீஸ்காரர்கள் திருப்பி விட்டார்கள். வண்டிகளை நிறுத்த முடியவில்லை, நிறுத்தினால் எடுக்க முடியவில்லை. ஹோட்டல்களில் சாப்பிட இடம் கிடைக்கவில்லை.

ஆப்பர்ச்சூனிட்டியைப் பயன்படுத்தி ரோட்டோரங்களில் பிளாஸ்டிக் மக், துவாலை, ஜட்டி என்று வர்ஜ்யா வர்ஜ்யமின்றி ஏதேதோ விற்றார்கள்.

ஒரு இடத்தில் திருப்பி விடப்பட்டு ஊர்ந்து ஊர்ந்து ஒரு மணி நேரம் போய் ஒரு சாலையின் கடைசியில் வண்டி போக முடியாத மாதிரி கர்டர் அமைத்திருந்தார்கள். சிக்கினோம்! பின்னாலும் வர முடியாது, முன்னாலும் போக முடியாது….

இந்த மாதிரி சிச்சுவேஷனில் அந்த சாலையின் நுழைவு, வெளியேற்றம் இரண்டிலும் கர்டர் அமைக்க வேண்டாமோ? போக்குவரத்துத் துறை ஏன் இப்படிக் கோமாளித்தனம் செய்கிறது?

பொற்றாமரைக் குளம் அருகே ஜாம் ஆனதில் ஒரு வண்டியிலிருந்து ஐந்தாறு பேர் இறங்கிப் போய் முழுக்குப் போட்டுவிட்டு வந்து விட்டார்கள்! வண்டியில் நடந்த உரையாடல் :

“ஏய்.. என்னய்யா இது? இப்படி சொத சொதன்னு வண்டிக்குள்ள வந்தா வண்டியெல்லாம் சகதி ஆயிடாதா?”

 “கோய்ச்சிக்காத மாப்ளே… அப்புடியே அவுக்காம பிளிஞ்சிகிட்டுத்தான் வந்தோம். ஜட்டிதான் ஈரமா இருக்கு, என்னா பண்றதுன்னு தெரியல்ல”

“சரி.. சரி… இங்க அவுத்துட கிவுத்துடப் போறீங்க. வண்டில லேடிஸெல்லாம் இருக்காங்க”

“அவுக்காம அப்புடியே புளிஞ்சிக்கிறோம்”

“எதை? ஜட்டியவா? அவுக்காம பிளியிறீங்களா? ரிஸ்க்குய்யா”

 

5 comments

 1. அன்பு நண்பரே,

  உங்கள் பதிவில் அந்த தந்தைக்கு, வெரும் சாதி மட்டும் நிர்பந்தம் அல்ல சமூக நிர்பந்தம் கூட, அதை கிராம சூழலில் பார்தால்தான் தெரியும், அவருக்கு எபபடி எல்லாம் சுற்றுப்புர சூழலில் தொல்லை வருகின்றது என்று.

  பா.ம.க இராமதாஸ்; அவருக்கு அங்கு பத்திரிக்கையாலர்கள் மீது உள்ள கோபத்தை காட்டிவிட்டார். தம்மை பற்றியோ தம் கட்சியை பற்றியோ, பேட்டிகளை பற்றியோ அதிகம் எழுதாத ஊடகங்கள், தம்மீது ஏற்கனவே சாதிய முத்திரை குத்தி தன்னை கேவலப் படுத்தி வரும் நிலையில், இதைப் பற்றி கேட்டவுடன் நிலை தடுமாரிவிட்டார். ஒரு தலைவனுக்கு இது அழகில்லைதான். ஆனால், அவர் நிலை, ” ஒரு முதிற்வு அற்ற நிலையில் (infatuation) வரும் காதல் ஒரு நிலயற்றது. ஒரு ஆணும் பெண்ணும் சுயகாலில் நிற்ககூடிய சூழலில், உண்மையான புரிதலில் வரும் காதல் ஏற்புடையது.”

  எனக்கு தெரிந்து இது போன்ற திருமணங்கள் அவரும் நடத்தியள்ளார். (உதாரணம் பேராசிரியர் தீரன் வீட்டு திருமணம். இதன் நிமித்தமே தீரனும் அவர் தம்பியும் கட்சியை விட்டு சென்றனர்).

  எனது பார்வையில் கிராமங்களில் உள்ள சமூக கட்டமைப்புகள் உடைக்கப்பட வேண்டும், அதற்க்கு நகரங்களில் உள்ள அனைத்து வசதிகளும் கிராமங்களுக்கு சென்றடைய வேண்டும்.

  Col Diwakar (Veteran)

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s