இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா?

இட ஒதுக்கீடு என்பது விவாதத்துக்கு அப்பாற்பட்டது என்பது மாதிரியான மனப்பாங்கு சற்றுக் குறைந்திருக்கிறது.

நேற்று இண்டியா டுடே செய்தி அலைவரிசையில் கரண் தாப்பர் ஒருங்கிணைப்பாளராய் இருந்து நடத்திய விவாதம் சுவாரஸ்யமான விஷயங்களைத் தொட்டது. ஒதுக்கீடு பெற்றவர்கள் வசதி அடைந்து விட்டார்களா என்பதும் அவர்கள் தொட்டுப் பார்த்த சங்கதிகளில் ஒன்று. ஏழை பிராமணர்களுக்கும், ஷத்ரியர்களுக்கும் கூட ஒதுக்கீடு தரப்படலாமே என்றார் தாப்பர்.

 நல்ல சிந்தனை. ஆனால்,

 அங்கே எனக்கொரு சின்ன அபிப்ராய பேதம். இட ஒதுக்கீடு பொருளாதார மேம்பாட்டுக்கு மாத்திரம் தரப்பட்டது அல்ல. பொருளாதார மேம்பாட்டின் வழியே சமூக அங்கீகாரம் பெற்றுத் தருவதுதான் முக்கிய நோக்கம் என்று கருதுகிறேன். அந்த அங்கீகாரம் இன்னும் முழுமையாய்க் கிடைக்கவில்லை என்றும் கருதுகிறேன்.

கிடைக்கவில்லை என்பதுதான் சமீபத்தில் நடந்த கொலையும் சொல்லும் உண்மை. சம்பந்தப்பட்ட பெண்ணின் தகப்பனார்தான் கொலைக்குக் காரணம் என்று பரவலாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவர் தானே முன்வந்து சரண் அடைந்திருக்கிறார். அவர் முகத்தில் ஆத்திரமோ, அவமானமோ, ஏமாற்றோ இல்லை. அவரை ஆதிக்க சாதிக்காரர் என்று குறிப்பிடுவதே தவறோ என்று கூடத் தோன்றுகிறது. வெறும் ஜாதியை மாத்திரம் வைத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்த முடியுமோ?

எந்த ஜாதிக்காரராக இருந்தாலும் பணக்காரராக இருந்தால்தான் ஆதிக்கம் செலுத்த முடியும். அவரைப் பார்த்தால் அப்படி ஒன்றும் வசதியானவராய்த் தெரியவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து பா. ம. க வின் ராமதாஸ் ஏன் கருத்துக் கூற மறுத்திருக்கிறார்? நடந்த கொலையில் அரசியல் தலையீடு உண்டா என்கிற கோணத்திலும் போலிஸார் பார்க்க வேண்டும் என்று கருதுகிறேன்.

ஆரம்பித்த இடத்துக்குத் திரும்ப வருவோம். விவாதத்துக்கு அடிப்படைக் காரணம் ஆர். எஸ். எஸ் ஸின் சுரேஷ் ஜோஷி தெரிவித்த கருத்தே. அவரது கருத்து இட ஒதுக்கீடு நிறுத்தப்பட வேண்டும் என்பதாக இருப்பது போல விவாதித்தவர்கள் பேசினார்கள்.

இட ஒதுக்கீட்டால் பலன் பெற்று விட்ட குடும்பங்கள், தங்களைக் காட்டிலும் கீழான நிலையில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை தந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

எனக்கும் இது ஓரளவு சரிதான் என்றே தோன்றுகிறது. ஏன் ஓரளவு என்று சொல்கிறேன் என்றால், அவர் குறிப்பிடும் குடும்பங்களுக்கு சமூக அங்கீகாரமும் கிடைத்திருக்குமானால் அவர்கள் விட்டுக் கொடுக்கலாம்.

சமூக அங்கீகாரத்தைப் பொருளாதார மேம்பாட்டின் மூலம் மாத்திரம் பெற்றுவிட முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது. மக்களின் மனப்பாங்கு மாற வேண்டும். மக்கள் என்று நான் குறிப்பிடுவது தாழ்த்தப்பட்டவர்கள், தாழ்த்துபவர்கள் இரு சாராரையுமே.

விவாதங்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. மாறுதல்கள் மெல்ல உருவாகலாம்.

 

6 comments

 1. எனக்கென்னவோ, இட ஒதுக்கீடு, முன்னேறிய வகுப்பினரிடையே அதீத உஷார்தனத்தையும், சாதாரணத்தை விட அதிகமான உழைப்பையும், செயல்பாட்டையும் ஊக்குவிக்கிறது என்று தோன்றுகிறது. இதற்கு எதிர்மறையாய், இட ஒதுக்கீட்டினால் பயன்பெறும் சமுதாயங்களில் சற்று சோம்பேறித்தனத்தை (laidback attitude) ஊக்குவிக்கிறது.

  இட ஒதுக்கீடு என்பது தேவைக்கும் அதிகமாகக்கூட இருக்கலாம், ஆனால் தேர்வில் வெற்றிபெற, அதிக மதிப்பெண் பெற உதவியாய் இருக்கவேண்டுமேயொழிய (உதாரணம்: இலவச புத்தகங்கள், தங்குமிடம், கல்விக்கட்டணம் தள்ளுபடி, ட்யூஷன் வகுப்புகள், படிப்பு/வேலைவாய்ப்பு முகாம்கள், உதவித்தொகை), தேர்வில் வெற்றிபெற்றதனால் அடையும் பயனை நேரடியாக அளிப்பதாய் இருக்கக்கூடாது என்பது என் வாதம். தேர்வு அனைவருக்கும் பொதுவானதாய் இருக்க வேண்டும். ஒரே வினாத்தாளில் இரு கேள்விகளைக் கேட்டுவிட்டு, கடினமான வினாவினை ஒரு சாராரும், எளிதான விடையை மற்றொரு சாராரும் எடுத்து விடையளிக்க வேண்டும் என்று நிர்பந்திப்பது எவ்வளவு நகைப்புக்கு உரியதோ, அதுதான் இன்றைய இட ஒதுக்கீட்டின் நிலை என்பது என் கருத்து.

  மேலும், இதுவரை செயல்படுத்தப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடு முறை எவ்வளவு நன்மை பயன்றுள்ளது என்பது ஆராய்ந்து, அதற்கேற்றார்போல் இட ஒதுக்கீடு முறை (நன்மை பயக்கவில்லையெனில்) செயல்பாட்டு முறைகளையோ, (நன்மை பயன்றுள்ளதெனில்) பயனாளர்களையோ மாற்றி அமைத்தல் மிக மிக முக்கியம். இது நடக்காதது தான் அந்த ஆர்.எஸ்.எஸ். தலைவரின் ஆதங்கம் (குறிப்பு: நான் அநேக விஷயங்களில் ஆர்.எஸ்.எஸ்.-ஸை தீவிரமாக எதிர்ப்பவன்).

  மேலும், இட ஒதுக்கீடு என்பது, சமுதாயத்தின் ஒரு சிறிய பகுதிக்கு அளிக்கப்படுகையில் தான் நியாயமாகப்படும். 69 சதவீதமெல்லாம் தரப்படுகையில், உங்களைப்பற்றி தெரியவில்லை, எனக்கு மிக மிக வினோதமாகவும் அநியாயமாகவும் படுகிறது. இது இட ஒதுக்கீட்டு பயனாளிகள் மற்றும் பயன்பெறும் சமூகங்களின்மேல் பிறருக்கு ஒரு வெறுப்புத்தன்மையை வளர்க்கிறது. சாதிகளால் தோன்றும் பிரிவினை ஒழியவேண்டும் என்ற நோக்கத்திற்கு இது முற்றிலும் எதிரானது.

  பலர் நினைப்பது போல இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் முறை நேரிடையானது அல்ல. பார்க்க: https://en.wikipedia.org/wiki/Reservation_policy_in_Tamil_Nadu#Present_practice
  ஒருவர் 90 மதிப்பெண் பெற்றார் என வைத்துக்கொள்வோம். Open Competition cutoff 89, MBC cutoff 80 மதிப்பெண்கள். Open Competition சாளரத்தில் அவருக்கு சிவில் கிடைக்கும். MBC சாளரத்தில் அவருக்கு கம்ப்யூடர் சைன்ஸ் கிடைக்கும் என்று வைத்துக்கொள்ளலாம். தன்னைபோன்ற இன்னொரு MBC மாணவரை ஏற்றி விட வேண்டும் என்று எண்ணினால், அவர் சிவில் எடுத்து Open Competition கீழ் வரும் சீட்டை உபயோகித்து, MBC சாளரத்தில் வேறொரு MBC மாணவர் பயனடைய வழிவகுப்பார். ஆனால், நடைமுறையில், அவர் வெகு நிச்சயமாய் கம்ப்யூடர் சைன்ஸ் எடுத்து, சுயநலமாய்த்தான் செயல்படுவார். இது நம் இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் முறையில் உள்ள பெரிய ஓட்டை.

  அன்புமணி ராமதாஸ் சில மாதங்கள் முன்பு ஸ்டாலினுக்கு பதிலளிக்கையில் நான் அறிந்தது: MBC சாளரத்தில் இருந்தாலும், அவர் பெற்ற (உயர்ந்த) மதிப்பெண்ணுக்கு Open Competition படியே சென்னை மருத்துவக்கல்லூரியில் இடம் பெற்றார். பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாவட்டத்திலேயே முதல் மாணாக்கராய் வெற்றி பெற்றார். அவர் தந்தை ஒரு மருத்துவர். இவரது குடும்பம் மிகச்செழிப்பான குடும்பம். இவர் மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல ஆண்டுகள் இருந்திருக்கிறார், இருக்கிறார். இவரது மக்களுக்கும், வழித்தோன்றலுக்கும் – ‘நீங்கள் இட ஒதுக்கீட்டின் லட்சிய அளவைத்தாண்டி மிக மிக அதிகமான சமூக அங்கீகாரம் பெற்று விட்டீர்கள், அதனால் உங்களுக்கு அச்சலுகைகள் இனிமேல் கிடையாது’ எனச் சொல்ல வழி இல்லாதவரை, என்னைப்போன்றோர் இட ஒதுக்கீட்டை கரித்துக்கொட்டிக்கொண்டுதான் இருப்பர்.

   1. இவ்வளவு கருத்துக்கள் இருந்தும் உங்களுக்கு அதன் நீளம் தான் மறுமொழி இடும் அளவிற்கு கவனத்தை ஈர்த்திருக்கிறதே. சூப்பர் சார் நீங்க! 🙂

  1. அதாவது…. நீங்க இத ஒரு பதிவாகவே போடக்கூடிய அளவுள்ள [ இங்கு, அளவு = content & விஷய தானம் ] விஷயத்தை பின்னூட்ட மறுமொழியாகவே அளித்து விட்டீர்களே……

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s