கவிதைகள்

புதுக்கவிதைகள்,ஹைக்கூக்கள்

ஹைக்கூ வாங்கலையோ ஹைக்கூ

மழைக்கு ஒதுங்கியதில்லை

எங்கள் பள்ளியில்

கூரை இல்லை

மழையில் நிற்கிறாய்

பொறாமை

மழைத்துளி மேல்

முதலீட்டைத் தின்றால்தான்

விற்பனை தொடரும்

இட்லிக் கடை

மெளசுக்கு மவுசு கணிணியில்

மெளசால் ரவுசு

கழனியில்

மின்னல் கண்டதும் இடிப்பது

வானத்தில் மட்டுமா

பஸ்ஸிலும்தான்

ஹைக்கூகம்

வயிறு காயுது

வேலைக்குப் போகக் காயவில்லை

சேலை

**************************************************************************

வாள்கொம்புடன் குதிக்கிறாள்

காய் பறிக்க ஆசை

அவளுக்கும்

 ************************************************************************

வாளியைக் காலி செய்ததும்

வானத்துக்குப் போனது

நிலவு

 ************************************************************************

ஆளின்றி ஆடும் ஊஞ்சல்

பூந்தொட்டிக்குப் பின்னால்

பூனை

 **************************************************************************

தலைப்பைக் காணோம்

காற்றின் கவர்ச்சிக் கவிதை

சேலையில்

 ************************************************************************

ஹல்வா இனிதென்பர் ஹைக்கூ கேளாதவர்

முடிவு தெரிந்த த்ரில்லர்-எனினும்
படிக்கச் சலித்தவர் இல்லர்
பெண்

************************************************************************************************

சுருதியும் பிருகாவும் பின்னுவான்
சுத்தமாய்ப் பிடிக்காத வித்துவான்
கொசு

************************************************************************************************

டெக்ஸ்சரும் டிசைனும் நயம்
உடுத்திக் கொள்ள பயம்
பாம்பு

*************************************************************************************************

நீந்தவிட்டுப் பார்த்தாலும் அழகு
நேற்றைய குழம்பானாலும் இனிது
மீன்

*************************************************************************************************

சத்தமே இன்றிச் சல்லாபம்
சயன்ஸ் தந்த உல்லாசம்
எஸ்எம்எஸ்

மெளனத்தைக் கவியாக மொழிபெயர்த்தால்….

எல்லாருக்கும் தெரிந்த மொழி
எதுவென்று யாரைக் கேட்டாலும்
மெளனம்.

********************************************************************************************************

மெளனமாயிருந்தால் முட்டாளென்று சந்தேகித்தார்கள்
பேச ஆரம்பித்தேன் – இப்போது
யாருக்கும் சந்தேகமில்லை

********************************************************************************************************
மெளனமும் ஒரு மொழிதானாமே?
அதிலும் உண்டா
இலக்கணப் பிழைகள்?

********************************************************************************************************
வருத்தம் தருவது வார்த்தைகள்தான்
வருத்தமே இதுவரை இல்லை – என்
மெளனங்களால்

********************************************************************************************************
பேசக் கிடைத்த வாய்ப்புகளை
விட்டதில் – கிடைத்தவை
மெளனத்தின் வெற்றிகள்

********************************************************************************************************
பேசினால் திரித்துக் கூறுவார்கள்
மொழிபெயர்ப்பில் தவறே வராதது
மெளனம்

********************************************************************************************************
காதலில் மட்டும் சொற்களை விட
தப்பர்த்தம் அதிகமாக வருவது
மெளனங்களில்தான்

********************************************************************************************************
பெண்களுக்கு உங்களைப் பிடிக்கும்
நீங்கள் கவனிப்பதாய்க் காட்டும்
மெளனம்

********************************************************************************************************
இதயத் துடிப்பென்ற தாளத்தில்
இனிய சங்கீதம்
மெளனம்

********************************************************************************************************
வாதங்களை ஜெயித்து விடுகிறார்கள்
எப்போதுமே எனக்குத்தான் வெற்றி
மெளனத்தில்

புரட்சிக் கவியும் புரட்சி நடிகரும்

புரட்சித் தமிழன், புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி, புரட்சிக் கலைஞர் என்று நிறைய புரட்சிகள் வருவதற்கு முன்னர் ஒருவரை புரட்சிக் கவிஞர் என்று சொன்னோமே, அவரை நினைவிருக்கிறதா?

ஒரு அழகான பூங்காவைப் பார்க்கிற போது ஒரு கவிஞர் என்ன பாடுவார்?

பூக்கள், தென்றல், வண்டுகள், வாசனை, காதலன், காதலி, மாலை, மயக்கம், காதல், காமம் இன்னும் என்னென்னவோ ………..

பாரதிதாசன் என்ன பாடினார் தெரியுமா?

சித்திரச் சோலைகளே உம்மை
நன்கு திருத்த இப்பாரினிலே
முன்னர் எத்தனைத் தோழர்கள்
ரத்தம் சொரிந்தனரோ?

அழகின் பின்னால் இருக்கும் உழைப்பைப் பார்த்த முதல் கவிஞன்!

புரட்சிக் கவியின் இந்தக் கவிதையை தன படத்தில் உபயோகித்தவர் புரட்சி நடிகர்.

படம், நான் ஏன் பிறந்தேன்.

வாளுக்கும் பேனாவுக்கும் என்ன வேறுபாடு?

கடவுளே, எனக்கு நரகமே கொடு
என்னால் தாங்க முடியாதது
தனிமை

__________________________________________________________

என் பின்னால் வரும் சோம்பேறிகள்
என்னைக் கடந்து விட்டால்
அவசரக்காரர்கள்

__________________________________________________________

ஜிப்பைப் போட மறப்பது
மறதி-திறக்கவே மறப்பது
முதுமை

__________________________________________________________

ஒரே சமயம் ஓராயிரம் கழுத்தை
அறுக்க வல்லது
பேனா

__________________________________________________________

மனதைத்தேற்ற மருத்துவர் சொன்னது
நிச்சயம் பரம்பரை நோயல்ல
மலட்டுத்தன்மை

__________________________________________________________

வெற்றி பெற்ற ஆணுக்குப் பின்
ஒரு பெண் – அவளுக்குப் பின்னால்
மனைவி

குசும்பு ஹைக்கூ

உயிர் போனாலும் பிரியேன்
மயிர் கலைகிறது
கையை எடு.
__________________________________________________________________________________
ஆயிரம் கை மறைத்தாலும்
ஆதவன் மறையாது
நகர்ந்து கொள் நயன்தாரா தெரியலை
__________________________________________________________________________________
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
ஆனது ஆகட்டும் அஞ்சாது போ
அரசாங்க ஆஸ்பத்திரிக்கு
__________________________________________________________________________________
மரணம்தான் நம்மைப் பிரிக்கும்
மனைவி பார்த்து விட்டாள்
மறைந்து கொள்
__________________________________________________________________________________
கற்பின் சிறப்பைக் கூற
காண்டம் காண்டமாக எழுதினீர்கள்
காக்க ஒரு காண்டம் போதும்!
__________________________________________________________________________________
பிறன்மனை நோக்காதோர்
பழனி வைத்யர் சார்ந்தோர்
பேராண்மையில் இழுக்கு!
__________________________________________________________________________________

கவிதையின் விதையில் ஒரு கதை

கவிதை என்கிறது தமிழ்லே ஒரு சுவாரஸ்யமான வார்த்தை.

இந்த வார்த்தையிலேர்ந்து கவி, விதை, கதை, தை என்கிற வார்த்தைகளை உருவாக்கலாம்.

கவிதைங்கிறது ஒரு பயிர் மாதிரி.(அதனால்தான் கண்டவர்களும் மேய்கிறார்களோ?). அதை விதைக்கணும் ன்னா விதை தேவை. கவனமா விதைச்சி வளர்க்க ஒரு கவி(ஞர்) தேவை.

விதைன்னு நாம சொன்னது ஒரு கதையே சொல்ற அளவுக்கு தகுதியான சிறப்பான விஷயமா இருக்கணும். இவ்வளவும் சேர்ந்தா, தை இலே அதை அறுவடை பண்றப்போ நல்ல வளமான பயிரா இருக்கும்.

என்னுடைய இந்தக் கவிதையைப் பாருங்கள் :

அவளை விட far higher என்று வந்தேன்
நீ ஒரு For Hire என்று அறிந்து நொந்தேன்

இந்த இரண்டு வரியில் ஒரு கதை இருக்கிறதா இல்லையா?

இல்லை என்று சொல்கிறவர்கள் பாக்யராஜின் சின்ன வீடு படம் பார்க்கவும்.

அடியே, இன்றேனும் வருவாயா?

Adiye

நேற்றிரவு தூக்கமில்லை
நாளெல்லாம் உன் நினைவே
வழிமேல் விழியாக
வேதனையுடன் காத்திருக்கேன்
ஏன் வரவில்லை
என் மேல் கோபமா?
உடம்பு சரியில்லையா
ஊரிலேயே இல்லையா?
காத்திருப்பதில் ஆத்திரமில்லை
கடைசியிலேனும் வந்தால் சரி
உன்னை அடைய எத்தனை காத்திருப்பு
என்னென்ன கஷ்டங்கள்
இன்னொருத்தியை
எண்ணிக் கூடப் பாரேன்-நேற்று
மாத்திரம்தானே லீவு-
பாத்திரம் தேய்க்கணும்
இனியும் தாமதியாது வந்துவிடு
முனியம்மா…

முடியல!

பென்ஷன் வாங்க ஆரம்பிச்சா
டென்ஷன் இருக்காதுன்னு நினைச்சேன்
டென்ஷன் இல்லைன்னு
மேன்ஷன் பண்ணிப் பண்ணியே
டென்ஷன் பண்றாங்க

சும்மாத்தான் சொல்றாங்களோன்னு பாத்தா
சும்மாதானே இருக்கேன்னு
சும்மா சும்மா வேலை கொடுத்து
சும்மா இருக்கேனான்னு பாக்கறாங்க

ஒண்ணொண்ணாப் பண்ணாலும்
ஒண்ணும் பண்ணாம இருக்கிறவனுக்கு
ஒண்ணொண்ணும் பண்ண இத்தனை நேரமான்னு
ஒண்ணா கத்தறாங்க

ரெண்டு காதும் கேட்டாலும்
ரெண்டு ரெண்டு தரம் சொல்லி
ரெண்டுங்கெட்டான் ஆக்கறப்போ
ரெண்டு போடலாமான்னு வருது

முடியலைன்னு சொன்னா வேலை
முடியலையா பண்ண
முடியலையான்னு கிண்டல்-
முடியல்லப்பா இவங்களோட!