குறள்

வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக்

”ராமலிங்கம் உன்னைப் பத்தி என்ன சொல்றான் தெரியுமா?” என்கிற மாதிரி ஆரம்பிக்கிறவர்களை நான் என்கரேஜே செய்வதில்லை.

“அதை நான் ராமலிங்கம் கிட்டயே கேட்டுத் தெரிஞ்சிக்கறேன்” என்று உடனே ஆஃப் பண்ணி விடுவேன்.

இப்படிச் சொல்வதற்கு இருக்கும் ரொம்ப ஆத்மார்த்தமான காரணங்களை விட்டு விடுங்கள். அடிப்படையில் இது போன்ற பேச்சுக்களில் இருக்கும் கம்யூனிகேஷன் பிராப்ளம் ரொம்ப முக்கியமானது. ஒரு கம்யூனிகேஷனில் 7% தான் சொற்களின் அல்லது மொழியின் பங்களிப்பு. இடம், நேரம், சுற்றுச் சூழல், உடல் மொழி, குரலின் ஏற்றத் தாழ்வுகள், சுருதி, முகபாவம் என்று பல விஷயங்களின் தொகுப்பாகவே கம்யூனிகேஷன் அமைகிறது.

ராமலிங்கம் சொன்னதை நம்மிடம் சொல்ல வருகிறவர் 7% ஐத்தான் எடுத்து வருகிறார். அதிலும் பிழை இருக்க வாய்ப்பு இருக்கிறது. ராமலிங்கம் சொல்ல நினைத்ததற்கும் சொன்னதற்கும் இரண்டொரு சதவீதம் வேறுபாடு இருக்கும். அதை இவர் புரிந்து கொண்டதிலும், நம்மிடம் சொல்வதிலும் இரண்டொரு சதவீதம் பிழை இருக்கும். நாம் இருக்கிற மூடில் அதைப் புரிந்து கொள்வதிலும் இரண்டொரு சதவீதம் பிழை இருக்கும்.

ஆக மொத்தம் நமக்கு வந்து சேர்வது சொற்ப சதவீதம்தான் இருக்கும்.

வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

 மாட்சியின் மாசற்றார் கோள்

என்பார் வள்ளுவர்.

அதாவது பிறர் கூறும் சொற்களை ஆராய்ந்து பயனுளவற்றை ஏற்பதும், பிறருக்கு உபயோகமானவற்றை அவர்கள் ஏற்கும்படி சொல்வதும் குற்றமற்றவர்களின் கொள்கை ஆகும் என்று இதற்கு அர்த்தம். கம்யூனிகேட் செய்கிறவனும், கம்யூனிகேஷனை ரிஸீவ் செய்கிறவனும் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் குறள் சொல்கிறது.

குற்றமற்றவர் என்கிற பதத்தை வள்ளுவர் பயன்படுத்த ஒரு காரணம் இருக்கிறது. கம்யூனிகேட் செய்கிறவனுக்கு Vested interest இருந்தது என்றால் கதை கந்தல்.

தும்மலை அடக்கினால் என்ன ஆகும்?

என்றைக்காவது தும்மலை அடக்க முயன்றிருக்கிறீர்களோ?

 அப்படி அடக்க முயன்றால் ஹக்ஸூ என்பதற்கு பதில் ஹெப்ஸீ என்றோ, ஹிக்ஸி என்றோ தும்முவீர்களே ஒழிய தும்மல் அடங்காது. எப்படித் தும்மல் நம் கட்டுப்பாட்டில் இல்லையோ அப்படித்தான் காமமும்.

 மறைப்பேன்மன் காமத்தை  யானோ குறிப்பின்றித்

தும்மல்போல் தோன்றி விடும்

 என்பார் வள்ளுவர்.

 தும்மல் என்பது ஏன் வருகிறது? ஜலதோஷம் பிடித்தாலோ அல்லது ஆகாத காற்றை (ஒவ்வாத மணமோ அல்லது தூசியோ இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்) சுவாசித்தாலோ வருகிறது. தும்மல் தோன்றாமல் இருக்க வேண்டுமானால் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும், ஒவ்வாத மணங்களை நுகராமல் இருக்க வேண்டும். அதையெல்லாம் செய்து தும்மலை வரவழைத்து விட்டு அந்த ஸ்டேஜில் அதை அடக்குவது என்பது துர்லபம்.

 அதே போலத்தான் காமத்தை உண்டாக்கும் காட்சிகள், பேச்சுக்கள், எழுத்துக்கள், எண்ணங்கள், மனிதர்கள் இவைகளைத் தவிர்க்காமல் காமம் தோன்றிய பிறகு அதை அடக்க முயல்வதும்.

 Lust is an effect. It needs to be controlled at cause level என்பது வள்ளுவர் சொல்ல விழையும் கருத்து. Product audit செய்வதற்கு பதில் Process Audit செய்ய ஆரம்பித்த போதுதான் Quality Control ஆக இருந்த தொழில் Quality Assurance ஆக மாறியது.

இன்பத்துள் இன்பம் விழையாதான்

temp Blog

ரஞ்சனி அதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

 ஃப்ளைட்டில் அவளுக்குத் தூக்கமே வரவில்லை. ஒவ்வொரு நொடியும் அவளைப் பார்த்ததும் ஆனந்த் எப்படி ரியாக்ட் செய்யப் போகிறான் என்பதே யோசனையாக இருந்தது. ஆறு வருஷங்களாகி விட்டன அவள் அமெரிக்கா போய். எம்.எஸ். செய்து, டாக்டரேட் முடித்து கொஞ்ச காலம் வேலையும் பார்த்து விட்டு இந்தியாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள்.

 சினிமா ஹீரோ மாதிரி அப்படியே இடுப்புக்குக் கீழே அணைத்துத் தூக்கி மூன்று சுழற்றுச் சுழற்றுவானா? கட்டிப் பிடித்து நல்வரவு சொல்வானா? ய்ய்யேய் என்று இரு கைகளையும் உயர்த்தி கூச்சலிடுவானா? படு கிராண்டான பொக்கேயைக் கொடுத்து விட்டு ஆனந்தக் கண்ணீரை மறைத்துக் கொண்டு சிரிப்பானா?

 ஒவ்வொரு பிராபபிலிட்டியும் ஒரு ஸ்பூன் ஐஸ்கிரீம் போல இனிப்பாக இருந்தது.

 கன்வேயரிலிருந்து பேக்கேஜைக் கலக்ட் செய்து கொண்டு வாசல் நோக்கி நடக்கும் போதே அவள் கண்கள் ஆனந்தைத் தேடின. ஆனந்த ரொம்ப நேரமாக அவளையேதான் பார்த்துக் கொண்டிருந்தான் என்பது கண்களைச் சந்தித்த பிறகு தெரிந்தது.

 “ய்ய்யேய்” என்று கையை உயர்த்தி வேகமாக அசைத்தாள்.

 ஆனந்திடமிருந்து ஒரு மெல்லிய புன்னகையும், அரைக் கை உயர்த்தலும் பதிலாகக் கிடைத்தன. சுற்றிலும் எல்லாரும் இருக்கிறார்களே என்கிற தயக்கமாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்.

 ம்ம்ஹூம்.

 அருகில் போனதும் கூட சினிமா டிக்கெட்டுடன் காத்திருந்தவன் போல, படம் போடுவதற்குள் உள்ளே போக விழைகிறவன் போல பெட்டியை வாங்கிக் கொண்டு வேகமாக நடந்தான்.

 “ஏய்.. ஃபார்மல்ஸ் போட்டாக் கூட நீ அழகா இருக்கேடா” என்றாள் அவனைப் பார்த்து.

 “தேங்க் யூ” என்றான் பெட்டியுடன் நடந்தபடியே முதுகு வழியாக.

 காரில் ஏறிய அடுத்த வினாடி வெடித்தாள்.

 “ஆனந்த்.. என்னாச்சு?” என்றாள்.

 “எதுவுமில்லையே? ஏன்?”

 “இது என்ன ரியாக்‌ஷன்? நான் வந்ததில் உனக்கு சந்தோஷமே இல்லையா?”

 “சீச்சீ.. ஐயாம் ஹேப்பி ஒன்லி”

 “ப்ச்.. ஐயாம் ஹேப்பி ஒன்லி! இந்த வாக்கியமே சொல்லுது”

 “ஏய்.. ஐயாம் எக்ட்ரீம்லி ஹேப்பிப்பா”

 “ம்ம்க்கும்.. எங்களுக்கு ஒண்ணும் கேட்டு வாங்கிக்க வேண்டாம். பிரிஞ்சி இருந்ததிலே நீ சுத்தமா டிட்டாச் ஆயிட்டே”

 “நாட் தட். ஒரு வகைல சந்தோஷம் துக்கம் இரண்டுமே டீவியேஷன்கள்தான் ரஞ்சனி. சதோஷம்ங்கிறது பாஸிட்டிவ் டீவியேஷன், துக்கம்ங்கிறது நெகட்டிவ் டீவியேஷன்”

 “பிளீஸ்.. பிளீஸ்.. திரீ டைம்ஸ் ஸ்டாண்டர்ட் டீவியேஷன் லெவல்லதான் ரெண்டும் இருக்கணும் அதான் சிக்ஸ் சிக்மா எக்ஸல்லன்ஸுன்னு சொல்லாதே.. வாழ்க்கை வேறே சிக்ஸ் சிக்மா வேறே”

 “சேச்சே.. நான் சொல்ல வந்தது அதில்லை”

 “பின்னே? எனக்கு ரியாக்ட் பண்ணத் தெரியாதுன்னு கதை சொல்லப் போறியா? நான் ஊருக்குப் போன போது நீ எவ்வளவு கலங்கிப் போனேன்னு ஸ்கைப்ல நானே பார்த்தேன்”

 “எக்ஸாக்ட்லி.. அதைத்தான் சொல்ல வந்தேன். சந்தோஷமும் துக்கமும் ஃபோர்ஸஸ் மாதிரி. நாம ரியாக்ட் பண்றது அந்த ஃபோர்ஸ் செய்கிற ஒர்க். வென் எ வொர்க் இஸ் டன், ஃபோர்ஸ் வேனிஷஸ். ஃபோர்ஸ் எக்ஸிஸ்ட்ஸ் ஒன்லி அஸ் லாங் அஸ் தி வொர்க் இஸ் நாட் டன். சந்தோஷத்தை மட்டும் அதிகமா ரியாக்ட் பண்ணி டிரைன் பண்ணிடவே கூடாது. ரியாக்ட்டே பண்ணாம மனசுக்குள்ளே ரொம்ப நேரம் மெய்ண்ட்டெய்ன் பண்ணணும்”

 ரஞ்சனியின் புறமாகத் திரும்பி அவன் சிரித்த சிரிப்பில் கள்ளத்தனத்தை மறைக்க முயலும் ஒரு குழந்தையின் தோல்வி தெரிந்தது.

 ஒரு வினாடி அயர்ந்து போன ரஞ்சனி “வெரி ஸ்வீட்” என்று அவனுடைய சொற சொறா கன்னத்தில் முத்தமிட்டாள்.

கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க!

பல உரையாசிரியர்கள் திருவள்ளுவரைப் புரிந்து கொள்ளவே இல்லை.

 அவர் இன்று உயிரோடு இருந்தால் ‘என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்களே!’ என்று வேதனைப்படலாம்!

சிந்திப்பதற்கு எட்வர்ட் டி போனோ சொன்ன வழிகளைவிடச் சிறப்பானது திருக்குறள் படிப்பதுதான். ஒவ்வொரு திருக்குறளையும் படித்துவிட்டு, இதற்கு நேராகச் சொல்லப்பட்டதற்கு மிகுதியாக, அல்லது வித்யாசமாக ஏதாவது அர்த்தம் இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள். ரெண்டு வரியில் அவர் எழுதினதற்கு இதுதான் நோக்கம். ரெண்டு நாள் உங்களை யோசிக்க வைக்கிற குறள்கள் நிறைய உண்டு.

சில சொற்பொழிவாளர்கள் மணிக்கணக்கில் பேசுவதை ஒன்றரை நிமிஷத்தில் மறந்து போய்விடலாம்!

‘மாடு மேய்க்கத்தான் லாயக்கு’, ‘காப்பி ஆத்தத்தான் போவே’, ‘சிரைக்கவா வந்தே?’ என்கிற ரீதியில் பேசும் முட்டாள் வாத்தியார்கள் லிஸ்டில் உரையாசிரியர்கள் அவரை வைத்தது சோகம்.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

என்பது ஒரு சுவாரஸ்யமான குறள்.

திருவள்ளுவர் எதை வலியுறுத்துகிறாரோ அதற்கு நேர் எதிரிடையாகத்தான் பெரும்பாலான உரையாசிரியர்களும்,(பரிமேலழகர் உள்பட!) தமிழாசிரியர்களும் இதற்குப் பொருள் சொல்லியிருக்கிறார்கள். மு.வரதராசனார் மட்டும் விதிவிலக்கு.

அறத்தின் பயன் இன்னதென்று சொல்லத் தேவையில்லை, பல்லக்கைத் தூக்குகிறவர்களையும், அதில் பயணம் செய்பவர்களையும் பார்த்தாலே போதும் என்கிற ரீதியில்தான் எல்லாரின் உரையும் அமைந்திருக்கிறது. அதிலும் கலைஞர் கருணாநிதி இதே அர்த்தத்தை இன்னும் அவருடைய திறமையெல்லாம் சேர்த்து எழுதியிருக்கிறார்.

அது பொருளாக இருக்கலாம், இல்லாமலும் போகலாம். நானும், மு.வ. அவர்களும் மட்டும்தான் சரி என்று சொல்வது அறியாமையாக இருக்கும். பரிமேலழகரை விட நான் மேதாவி என்று நினைத்துக் கொண்டால் அது அறியாமையின் உச்சம். ஆனால் இந்தக் குறளை வேறொரு கோணத்திலும் பார்க்க முடியும். அந்தக் கோணத்தில் பார்க்க முதலில் திருவள்ளுவர் மேல் ஒரு நம்பிக்கை வேண்டும்.

பல்லக்குத் தூக்குகிறவனுக்கு அது தலையெழுத்து என்றோ, முன்வினைப் பயன் என்றோ அர்த்தம் வருகிற மாதிரி வள்ளுவர் பேசுவாரேயானால், சில தொழில்களைக் கேவலமாக அவர் நினைக்கிறார் என்று பொருளாகிவிடும். எந்தத் தொழிலும் கீழானது அல்ல என்பதே நிஜம். இதை வள்ளுவரும் கூட வேறொரு இடத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்

சிறப்பொவ்வாச் செய்தொழில் வேற்றுமையான்

என்கிற குறளை ஞாபகப் படுத்திப் பாருங்கள்.

சிறப்பு ஒவ்வா என்று ஏன் சொல்கிறார் என்றால், தொழிலை வைத்துச் சிறப்பை (உயர்வு, தாழ்வை) சொல்ல முடியாது என்கிறார். தொழிலில் வித்யாசங்கள் உண்டே ஒழிய ஏற்றத் தாழ்வு கிடையாது என்கிறார்.

அறத்தைச் செய்யாததால் விதி உனக்கு ஆப்பு வைத்துவிட்டது. அறம் செய்தவன் நோகாம நுங்கு தின்கிறான் பார் என்கிற தொனியில் ஒரு அறவுரையை சொல்கிற ஆட்டிட்யூட் இருந்திருந்தால் அவரை இந்தச் சமூகம் எப்போதோ நிராகரித்திருக்கும்.

அந்த இடத்தில் போய் அறவுரையே சொல்லக் கூடாது.

ஏற்கனவே நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கும் ஒருத்தனிடம் இப்படிச் சொன்னால், “அறமாவது, ……………வது, இப்படி ஆப்பு வைக்கிற அறம் எனக்குத் தேவையே இல்லை” என்பது அவனுடைய ரியாக்‌ஷனாக இருக்கும். பல்லக்கில் போய்க் கொண்டிருக்கிறவனிடம் இப்படிச் சொன்னால் மண்டைக்கனம் ஏறி, ஆஹா…. ஏற்கனவே நிறைய அறம் செய்தாகிவிட்டது. பாக்கி வாழ்க்கை அனுபவிக்க மட்டுமே என்கிற எண்ணம் வந்துவிடும். ஆக இரண்டு பேருக்குமே அறன் வலியுறுத்தல் ஒர்கவுட் ஆகாது.

பல்லக்குத் தூக்குவது ஒரு உதாரணம்தான்.

ஊர்ந்தான் இடை என்று முடித்திருக்கிறார் பாருங்கள்.

உழைக்கிறவனுக்கும், உழைப்பை அனுபவிக்கிறவனுக்கும் இடையே ஒப்பீடாக அறத்தை போதிக்காதீர்கள் என்பதுதான் திருவள்ளுவர் சொல்லவந்தது. அறத்தாறு இதுவென வேண்டா – என்றால் அறத்தால் வந்த வினை இது என்று சொல்லாதீங்கடா என்று அர்த்தம்.

இதை மிகச் சரியாகத் தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறவர்கள்தான் அதிகம். இந்த மாதிரி அபரேஷன்கள் கூடுமானவரை வராமல் எழுதியிருக்கிறேன் என் திருக்குறள் புத்தகத்தை.

மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

கையளவு பழுத்த கல்லாமை!

இந்தப் படத்தைப் போட்டிருந்தாருன்னா வள்ளுவர் கெட்ட வார்த்தையே எழுதியிருக்க வேணாங்க!

இந்தப் படத்தைப் போட்டிருந்தாருன்னா வள்ளுவர் கெட்ட வார்த்தையே எழுதியிருக்க வேணாங்க!

கல்லாதான் சொற்காமுறுதல் முலையிரண்டும்
இல்லாதான் பெண்காமுற்றற்று

மேற்சொன்ன குறள் இடம் பெற்றிருப்பது காமத்துப் பாலில் இல்லை. கல்லாமையில்.

இது ரொம்ப விவாதத்துக்குரிய குறள்.

கல்லாதான் சொற்காமுறுதல் என்பதற்கு இரண்டு அர்த்தம் சொல்கிறார்கள்.

கல்லாதவன் பேச ஆசைப்படுவது என்று ஒரு அர்த்தமும், கல்லாதவனின் பேச்சில் கவரப் படுதல் என்று ஒரு அர்த்தமும் சொல்கிறார்கள். இதே போல முலையிரண்டும் இல்லாதான் பெண்காமுற்றற்று என்பதற்கும் ஒரு ஆக்டிவ் அர்த்தமும் ஒரு பாசிவ் அர்த்தமும் சொல்கிறார்கள். அதாவது மார்புகள் இல்லாத பெண் காதலுறுவது என்று ஒரு அர்த்தமும், மார்புகள் இல்லாத பெண்ணைக் காமுறுவது என்று ஒரு அர்த்தமும் சொல்கிறார்கள்.

ஆக மொத்தம் நாலு அர்த்தம்.

திருவள்ளுவர் தாடி கீடி எல்லாம் வைத்துக் கொண்டு பார்க்க சாமியார் மாதிரி இருந்தாலும் எப்படிப்பட்ட பாக்யராஜ் வேலை செய்திருக்கிறார் பாருங்கள். கல்லாமை அதிகாரத்தில் கொண்டு வந்து கல்பஜா வார்த்தையைப் புகுத்தியிருக்கிறார்.

இதனால் எத்தனை வாத்யார்களுக்கு தர்ம சங்கடம் தெரியுமா?

எங்க ஊர் நேஷனல் ஹை ஸ்கூலில் ஒரு நாள் தமிழ் வாத்யார் பி.சோமசுந்தரம் வரவில்லை. ஆக்டிங்குக்காக …………………………………… டீச்சரை போட்டிருந்தார்கள். அந்தம்மா உடலமைப்பில் கொஞ்சம் நமிதா டைப்.

தமிழ்ப் பாடம் நடத்துகிறேன் என்று அவர் ஆரம்பித்தால் வில்லங்கம் பிடித்த மாதிரி இந்த திருக்குறள்.

ஸ்ரீராமுலு, பழனிவேலு மாதிரி வளர்த்தியான பையன்கள் “……………….. இல்லைன்னா காதலிக்கக் கூடாதா டீச்சர்?” என்கிற மாதிரி சங்கடமான கேள்விகளைக் கேட்டு அவரை லஜ்ஜா(அ)வதி ஆக்கினார்கள்.

ஸ்கேலால் மேசையை இரண்டு தட்டு தட்டி விட்டு அவர் சொன்ன விளக்கம் :

“ச்ச்சூ, திருவள்ளுவர் சொல்ல வந்தது, மார்பகங்கள் இல்லாதவள் தாய்மைக்கு ஆசைப் படுவதைப் போலன்னு. காமம்ன்னா ஆசை. காமுற்றுன்னுதான் சொல்லியிருக்காரு. மார்பகங்கள் இல்லாதவ எதுக்கு ஆசைப் படக் கூடாது? தாய்மைக்குதானே?”

என்று சென்டிமென்ட்டில் அடித்தார்.

ஆனால் எல்லா ஆசிரியர்களுக்கும் இந்த சமயோசிதம் வருமா?

அது நாகப்பட்டினம் ஸ்பெஷல் ஆயிற்றே!