ஜட்டி

அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு!!

மஹாமகத்தன்று கும்பகோணம் போக முடியாதவர்கள் எல்லாரும் மாசி மாசத்தின் கடைசி நாளான கடந்த ஞாயிற்றுக் கிழமை முற்றுகை இட்டார்கள்.

 எந்தப் பெரியக் கூட்டத்தைச் சொன்னாலும் மஹாமகக் கூட்டம் என்று வர்ணிப்பதைக் கேட்டிருக்கிறேன். ஃபிராங்க்லி நான் பார்க்கும் முதல் மஹாமகக் கூட்டம் இது. விவேக்கின் திருமலை படத்துக் காமெடி போல எங்கே போனாலும் போலீஸ்காரர்கள் திருப்பி விட்டார்கள். வண்டிகளை நிறுத்த முடியவில்லை, நிறுத்தினால் எடுக்க முடியவில்லை. ஹோட்டல்களில் சாப்பிட இடம் கிடைக்கவில்லை.

ஆப்பர்ச்சூனிட்டியைப் பயன்படுத்தி ரோட்டோரங்களில் பிளாஸ்டிக் மக், துவாலை, ஜட்டி என்று வர்ஜ்யா வர்ஜ்யமின்றி ஏதேதோ விற்றார்கள்.

ஒரு இடத்தில் திருப்பி விடப்பட்டு ஊர்ந்து ஊர்ந்து ஒரு மணி நேரம் போய் ஒரு சாலையின் கடைசியில் வண்டி போக முடியாத மாதிரி கர்டர் அமைத்திருந்தார்கள். சிக்கினோம்! பின்னாலும் வர முடியாது, முன்னாலும் போக முடியாது….

இந்த மாதிரி சிச்சுவேஷனில் அந்த சாலையின் நுழைவு, வெளியேற்றம் இரண்டிலும் கர்டர் அமைக்க வேண்டாமோ? போக்குவரத்துத் துறை ஏன் இப்படிக் கோமாளித்தனம் செய்கிறது?

பொற்றாமரைக் குளம் அருகே ஜாம் ஆனதில் ஒரு வண்டியிலிருந்து ஐந்தாறு பேர் இறங்கிப் போய் முழுக்குப் போட்டுவிட்டு வந்து விட்டார்கள்! வண்டியில் நடந்த உரையாடல் :

“ஏய்.. என்னய்யா இது? இப்படி சொத சொதன்னு வண்டிக்குள்ள வந்தா வண்டியெல்லாம் சகதி ஆயிடாதா?”

 “கோய்ச்சிக்காத மாப்ளே… அப்புடியே அவுக்காம பிளிஞ்சிகிட்டுத்தான் வந்தோம். ஜட்டிதான் ஈரமா இருக்கு, என்னா பண்றதுன்னு தெரியல்ல”

“சரி.. சரி… இங்க அவுத்துட கிவுத்துடப் போறீங்க. வண்டில லேடிஸெல்லாம் இருக்காங்க”

“அவுக்காம அப்புடியே புளிஞ்சிக்கிறோம்”

“எதை? ஜட்டியவா? அவுக்காம பிளியிறீங்களா? ரிஸ்க்குய்யா”

 

Advertisements

சிரிச்சி சிரிச்சி வந்தா சிந்திக்காதே டோய்!

சிரிக்க வெச்சி சிந்திக்க வைக்கிறதுதான் சிறந்த நகைச்சுவைன்னு சொல்வாங்க.

அதிலே நமக்கு உடன்பாடு இல்லைங்க.

சிரிச்சப்புறம் சிந்திச்சா ஒண்ணு அந்த நகைச்சுவை தப்புன்னு அர்த்தம், இல்லேன்னா நம்ம தப்புன்னு அர்த்தம்.

நம்ம பாலிசி தலைகீழ்ங்க. சிந்திக்க வெச்சி சிரிக்க வெக்கணும். ஓப்பனா இருக்கிற ஜோக்கை விட ஒரு பக்க கதை மாதிரி டிவிஸ்ட் இருக்கிற ஜோக்குக்குத்தான் பவர் அதிகம். ரொம்ப சிம்பிளான உதாரணம் வேணும்ன்னா இந்த பழைய ஜோக்கைப் பாருங்க :

“ஏய், என்ன கழுதையை கூட்டிகிட்டு வாக்கிங் கிளம்பிட்டே?”

“முண்டம், கண்ணு தெரியல்லையா? இது நாய்”

“தெரியும். நான் கேட்டது நாய் கிட்டே”

புதுசா, நம்ம ஸ்டைல்லே ஒண்ணு சொல்றேன் :

ராமு தன பிரன்ட் சோமு கிட்டே ஆற்றாமையோட சொல்றான் :

“நேத்து ராத்திரி வழக்கத்தை விட சீக்கிரமா வீட்டுக்குப் போயிட்டு காலிங் பெல் அடிச்சேன். என் பொண்டாட்டி கதவைத் திறந்தா. உள்ளே போய் பார்த்தா கட்டில்லே நம்ம சீனு படுத்திருக்கான். எடுத்தேன் துப்பாக்கியெ. அவன் நெத்திப் போட்டுலே வெச்சேன். ‘என்ன விட்டுடு,என்ன விட்டுடு…கொலை பண்ற அளவு இது சீரியசாங்கறான்’. நீயா இருந்தா அந்த சிச்சுவேஷன்லே என்ன பண்ணுவே?”

“கஷ்டமான சிசுவேஷன்தான். அதனாலேதான் எப்பவுமே காலிங் பெல் அடிச்சதுமே ஜன்னல் வழியா குதிச்சி ஓடிடுவேன்”

இது மாதிரி சொல்றப்போ ஒரு செய்திக்குக் கூட கதை அல்லது ஜோக் எபெக்ட் வரவழைக்கலாம்.

சில சமயம் இன்னசென்ட்டா செய்யற விஷயம் கூட ஜோக்கா ஆய்டும். பி.டி.ஜட்டின்னு ஒருத்தர் பாண்டிச்சேரியிலே லெப்டினன்ட் கவர்னரா இருந்தார். அவர் கூட சேர்ந்து டில்லிக்கு பிரதமர் போனதை தினத்தந்தியிலே தலைப்புச் செய்தியாப் போட்டிருந்தாங்க :

‘ஜட்டியுடன் பிரதமர் டில்லி பயணம்’

அப்ப யாரு பிரதமர்ன்னு தெரியுமா?