திமுக

கிங் மேக்கரா குயின் மேக்கரா?

எதிர்க் கட்சிகள் அத்தனையும் ஒரே அணியில் கூடினாலும் அ. தி. மு. க மார்ஜினலாய் வெற்றி பெரும் சாத்தியங்களே உள்ளன.

ஆனால் காங்கிரஸோடு கூட்டணி அறிவித்ததன் மூலம் தி. மு. க, பா. ஜ. க வுக்குக் கதவை மூடி விட்டது. பா. ஜ. க மாத்திரம் இல்லை, ஜி. கே. வாசன் அண்ட் கோவுக்கும் பை சொன்னது போலத்தான் அது.

மக்கள் நலக் கூட்டணி என்று ஒன்றை அமைத்ததன் மூலம் தங்களுக்கு தி. மு. க, அ. தி. மு. க இரண்டும் ஒப்புதல் இல்லை என்று வை. கோ அண்ட் திருமா சொல்லி விட்டார்கள். கம்யூனிஸ்டுகளும் டிட்டோ.

பா. ம. க என்ன நினைப்பில் தனித்து நிற்கிறது என்றே தெரியவில்லை. எங்களுக்கு யார் தயவும் தேவை இல்லை என்று சற்று இரக்கம் உண்டாக்கும் தொனியில் அன்புமணி கூவுகிறார். யாருக்காவது அவர்கள் தயவு தேவையா என்பதையும் எண்ணிப் பார்ப்பது நல்லது.

ஒருக்கால் தி. மு. க வோடு கூட்டணியில் வேறு கட்சி இணையலாம் என்றால் அது தே. மு. தி. க மாத்திரமே.

தே. மு. தி. க வுக்குத் தான் எந்தப் பக்கம் போகிறோமோ அந்தப் பக்கம் வெற்றி பெறும் என்கிற நினைப்பு சர்வ உறுதியாக இருப்பது தெரிகிறது. அதனால்தான் கிங்கா, கிங் மேக்கரா என்றெல்லாம் பேச்சு! பிரேமலதாவே பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டால் அவர்கள் குயின் மேக்கராய்த்தான் ஆக முடியும் என்று தோன்றுகிறது. பண்ருட்டி இல்லாத தே. மு. தி. க வெறும் மூச்சு விடும் உடம்புதான். Brain Dead.

கிங்கா, கிங் மேக்கரா என்கிற மாதிரி பேராசைகள் இருந்தால் கூட்டணி ஏற்படாது.

கூட்டணி ஏற்படா விட்டால் லாபம் தே. மு. தி. கவுக்கு இல்லை. அ. தி. மு. க வுக்குத்தான். நஷ்டம் தி. மு. க வுக்கு இல்லை, மக்களுக்குத்தான்.

அ. தி. மு. க ஏன் மாற வேண்டும் என்று கேட்பவர்களுக்கு என் பதில், இம்முறை அவர்கள் தப்பும் செய்யவில்லை, ரைட்டும் செய்யவில்லை. தப்பு பண்ணால் கூடப் பரவாயில்லை, ஏதாவது செய்கிற அரசாங்கம் வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது மக்களுக்கு.

 

 

 

வந்தாச்சு.. தேர்தல் முடிவுகள் வந்தாச்சு!

போன வாரம் ஹெட்லைன்ஸ் டுடே வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளில் திமுக கூட்டணி 120 இடமும் அதிமுக கூட்டணி 105 இடமும் இருந்தன.

 நேற்று சிஎன்என் ஐபிஎன் வெளியிட்ட முடிவுகள் அதற்கு நேர் எதிரிடையாக இருந்தன. ந்யூஸ் எக்ஸ் (சேர்த்துச் சொன்னால் அர்த்தம் வில்லங்கமாக இருக்கும்!) அதிமுக கூட்டணி 172 இடம் பிடித்து ஸ்வீப் செய்யும் என்றார்கள். ஸ்டார் ஹிந்தி சேனல் திமுக வுக்கு தனிப் பெரும்பான்மை என்றது.

 ஆக மொத்தம் வாநிலை அறிக்கை மாதிரி எல்லா மாதிரியும் சொல்லி விட்டார்கள்!

 எல்லாரும் ஒத்துக் கொண்ட இரண்டு விஷயங்கள் காங்கிரஸ் ஒற்றை இலக்கத்தைத் தாண்டாது, திமுக இப்போது இருப்பதை விட மிகக் குறைவான எண்ணிக்கைகளை மட்டுமே பெற முடியும்.

 2ஜி, குடும்ப அரசியல், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஓட்டுக்குப் பணம் இத்தனை ஃபேக்டர்களைத் தாண்டி, தேர்தல் கமிஷனின் அதிரடிகளைத் தாண்டி, விஜயகாந்த்-ஜெயலலிதா என்கிற பலம் வாய்ந்த கூட்டணியைத் தாண்டி,

 திமுக 100 இடம் பிடிக்கிறது என்றால், அது ஏறக்குறைய வெற்றி மாதிரிதான்! நிஜ முடிவுகள் என்ன சொல்லப் போகின்றன என்று பார்ப்போம்.

 கருத்துக் கணிப்புகளில் நிறைய டிரா பேக்குகள் உண்டு.

 எல்லாரும் அவர்கள் ஆசைப் படுவதைச் சொல்வார்களே ஒழிய, ஆய்ந்ததைச் சொல்வதில்லை. இந்த சாம்ப்பிள் அளவு சரியா என்று சிக்ஸ் சிக்மா ஆசாமியான என்னைக் கேட்டால், ம்ம்ஹூம்! இரண்டு கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இருக்கும் இடத்தில் நாலாயிரத்திச் சில்லரை வாக்காளர்களின் கருத்து சரியாக இருக்க ஆயிரத்தில் ஒரு பிராபபிலிட்டிதான் இருக்கிறது. 234 தொகுதிகள் இருக்கும் இடத்தில் 70 தொகுதிகளைக் கேட்டால் முப்பது சதவீதத்துக்கும் குறைவான பிராபபிலிட்டியே இருக்கிறது.

 எல்லா கருத்துக் கணிப்புகளிலும் இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் இருக்கும் கருத்துக்கள் 40% க்கு அதிகமாக இருக்கும். கோமதியின் காதலன் கதையில் வரும் பிரணதார்த்தி ஹர அய்யர் மாதிரி, தங்களுக்குப் பிடித்த முடிவு வரும் வரைக்கும் கணிப்பு செய்து கொண்டே இருக்கிறார்கள். வரும்போது நிறுத்தி விடுகிறார்கள்.

 அம்மா ஜெயிக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம். ஆனால், ராமதாஸ் இடுப்பில் கட்டிக் கொண்ட பூனை என்றால் கேப்டன் வேட்டியில் புகுந்த ஓணான்.

 எப்படி சமாளிக்கிறார் பார்க்கலாம்!

பலியாடு கைது

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

 எது நடக்கிறதோ அது நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது. என்ன நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.

தரணி படம் மாதிரி திரைக்கதை படுசுவாரஸ்யமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என்று காண்பித்தாகிவிட்டது. தேர்தலில் ஸ்பெக்ட்ரம் ஃபாக்டரை பலஹீனப்படுத்தியாயிற்று. இப்போதைக்கு இது போதும். தேர்தல் முடிவதற்குள் தீர்ப்பு வருகிற வாய்ப்புக்கள் குறைவு.

நம் லோக்கல் தொலைக்காட்சிகள் நேற்று அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. எங்கேயாவது செய்தியில் இரண்டு வரி சொல்லியிருப்பார்கள். நான் பார்க்கவில்லை. ஆனால், டைம்ஸ் நெள, ஹெட்லைன்ஸ், என்.டி.டிவி, சி.என்.என் எல்லாரும் களத்தில் குதித்து பி.ஜே.பி, அ.தி.மு.க, காங்கிரஸ் (திமு.க தவிர!) எல்லாரையும் வைத்து டெலிகான்ஃபரன்ஸிங் செய்தார்கள்.

வந்திருந்தவர்கள் எழுப்பிய சில கேள்விகள் சுவாரஸ்யமாக இருந்தன.

நிரா ரேடியா மீது நடவடிக்கை எதுவும் கிடையாதா? அவருடன் பேசிய மகள் மற்றும் மகளின் தாய் மீது நடவடிக்கை கிடையாதா? கொள்ளை லாபம் அடித்தவர்கள் மேல் நடவடிக்கை கிடையாதா?

காங்கிரஸ்காரர் ‘எடியூரப்பா விஷயத்தை மடியில் வைத்துக் கொண்டு கேள்வி கேட்க உங்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது?’ என்று பி.ஜே.பி. யை ஆஃப் செய்தார்.

அரசாங்கத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று சுப்ரமணியம் ஸ்வாமி காமெடி செய்தார்.

நிறையப் பேர் சுப்ரீம் கோர்ட் மீது நம்பிக்கை தெரிவித்தார்கள்.

அந்த நம்பிக்கை மட்டும் எனக்கும் இன்னும் இருக்கிறது.

சின்னப்புள்ளதனமா சில காமெண்ட்ஸ்-2

ஆனந்த விகடன் 29-12-2010 இதழில் பெரிய மனிஷங்க சொன்ன சில காமெண்ட்ஸ் போட்டிருந்தாங்க. நம்ம வாய் சும்மா இருக்க மாட்டேங்குது. சின்னப்புள்ளதனமா சில காமெண்ட்ஸ் அடிக்கணும் போல இருந்தது.

சும்மா தமாஷ்தாங்க, சம்பந்தப்பட்ட பெரியவங்களும் அவங்க தொண்டர்களும் டென்ஷன் ஆக வேணாம்!

நீங்க தி.மு.க. இல்லைங்களா மேடம்?

எங்களுக்குக் கூட விஜய்யைத் தெரியும், எஸ்.ஏ.சந்திரசேகரைத் தெரியாதுங்க!

உங்க உள்கட்சி விவகாரங்கள்ளேயே எப்பவும் பிஸியா இருக்கிறதாலே அதுக்கெல்லாம் நேரமிருக்காது!

அட! அவர் தானாவே முன்வந்து ராஜினாமா பண்ணல்லைங்கிறதை எவ்வளவு நாசூக்கா சொல்லிட்டீங்க!

அப்படிக் கருதாம கேட்கலாம்ங்களா?