திருக்குறள்

மது, மங்கை, மார்கழி

என் நாகப்பட்டினத்து மார்கழி மாதங்கள் தங்கர் பச்சனால் படமாக எடுக்கப்படுகிற அளவு கவிதையானவை.

 பொதுவாக நாகப்பட்டினத்தில் மூச்சா போனால் லேண்ட் ஆவதற்குள் ஸ்டீமாக மாறிவிடும். மார்கழி மாசம் மட்டும்தான் விதிவிலக்கு.

 காலையில் சொஸைட்டி பால் கொண்டுவருகிற பிச்சை சைக்கிள் மணி அடித்தால் அவர் எங்கே நிற்கிறார் என்றே தெரியாது. மணிரத்னம் படம் மாதிரி இருக்கும். காலத்துக்கும் தூரத்துக்கும் தொடர்பின்றி பொருத்தமில்லாத வேகத்தில் நடக்க வேண்டியிருக்கும். பால் வாங்கிக் கொண்டு போகிற பக்கத்து வீட்டு சின்னக்குட்டி (பெயர்தான் சின்னக்குட்டி. உண்மையில் ஷகிலா சைஸில் ரொம்பப் பெரிய குட்டி) மேல் இடித்துக் கொண்டு,

 “சனியனே, பீடை, கழிச்சல்ல போக” என்று இன்னா நாற்பது கேட்க வேண்டியிருக்கும்.

 புஸ்ஸ்ஸென்று கிராமஃபோன் ரெக்கார்டில் ஊசி தேய்க்கிற சப்தம் காலை ஐந்து மணிக்கே கேட்கும், செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் தொடங்கி, ஒவ்வொரு கோயிலாக எம்.எல்.வி யின் திருப்பாவை ஒலிக்கும். என் அண்ணன் ஹீட்பவர் எஞ்சிநியரிங் பரிட்சைக்குப் புறப்படும் போது, கூடாரை வெல்லும் ஸ்ரீ கோவிந்தாவில் கீறல் விழுந்து

 ‘கோவிந்தா….. கோவிந்தா’ என்று ஃபோர்காஸ்ட் சொல்லும்.

 ’முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று’ பாட்டு வந்ததும் போனால் எல்லாக் கோயிலிலும் உள்ளங்கை சுடுகிற வெண்பொங்கல் கிடைக்கும். கேப்பூ என்று அழைக்கப்பட்ட கே.புண்ணியமூர்த்தி பெருமாள் கோவில், பெரிய கோயில், சட்டையப்பர் கோயில் என்று சரியாக சீக்வன்ஸ் செய்து கொண்டு ஒரு சட்டிப் பொங்கல் தின்கிற எமகாதகர்களில் ஒருவன்.

 விவசாயத் துறையில் டிஏஓ வாக இருந்த அகோரம் அய்யர் (வாட் எ நேம்!) உள்ளிட்ட சில விஐபிக்கள் உஞ்ச்சவிர்த்திக்காக ஜால்ரா கஞ்சிரா சகிதம் வருவார்கள். சைக்கிள் டைனமோ லைட் மாதிரி மஞ்சள் துணியை தலையில் கட்டிக் கொண்டு தியாகய்யர் கெட்டப்பில் இருப்பார்கள்.

 பக்கத்து வீட்டு ’கண்ணா’,

 “ஏன் இந்த மாமாவெல்லாம் பிச்சை எடுக்கறா?” என்று கேட்டு எம்பாரஸ் செய்வான்.

 அரைப் பரிட்சை லீவ் மார்கழி மாச சந்தோஷங்களில் தலையாயது.

 பரிட்சை முடிந்ததா, லீவ் விட்டார்களா என்பதெல்லாம் இப்போதுதான். அப்போதெல்லாம் லீவு சொல்வது என்று ஒரு சம்பிரதாயம் உண்டு. வாதா மரத்தின் அடியில் மொத்த ஸ்கூலையும் கூட்டி, வருஷம் தவறாமல் ஹெட் மாஸ்டர் ராதாகிருஷ்ணய்யர் அலுக்காமல் போடும் மொக்கை,

 “எல்லாருக்கும் ஒரு வருஷம் லீவ். அடுத்த வருஷம் வந்தாப் போறும். ஜாலியாப் போய்ட்டு வாங்க”

 இத்தோடு நிறுத்தினால் தேவலை.

 “அரைப் பரிட்சை கொஸ்ஸின் பேப்பர்ல இருக்கிற கேள்விகளை எழுதி, பதிலை கோடு போட்ட ஃபுல்ஸ்கேப் பேப்பர்ல எல்லாரும் எழுதிகிட்டு வரணும். பள்ளிக்கூடம் திறக்கிற அன்னைக்கு தவறாம கொண்டு வரணும்” என்கிற அதிர்ச்சித் தகவல் பின்னாலேயே வரும்.

 லீவ் சொல்கிற சாங்கியம் முடிந்ததும் “ஹேய்ய்ய்ய்” என்று உச்ச ஸ்ருதியில் கத்திக் கொண்டு எல்லாரும் ஓடுவோம்.

 இந்த கொஸ்ஸின் ஆன்ஸர் டார்ச்சர் எங்களுக்கு மட்டும்தானா அல்லது எல்லாப் பள்ளிக்கூடத்திலும் உண்டா தெரியவில்லை. பலபேர் எழுதாமல் வந்துவிடுவார்கள். கோவிந்தராஜுலு மாதிரி பிரம்ம ராட்சச வாத்தியார்கள் கருட புராணம் மாதிரி தினுசு தினுசாக தண்டனை கொடுப்பார்கள்.

 என் மாதிரி அசமந்தங்கள் தலைப் பொறுப்பாக எழுதிக் கொண்டு போவோம். கன்னியப்பச் செட்டியார் வீட்டு பாலகங்காதரன் மாதிரி கேடிகள் இது வெறும் ஸாடிஸம் என்பதைப் புரிந்து கொண்டு விடுவார்கள்.

 “மார்க்கு கம்மியா வாங்கறவந்தான், ஆனா எத்தனை பொறுப்பா எழுதிகிட்டு வந்திருக்கான் பாருங்க” என்று அவனுடைய பேப்பரை தலைமேல் உயர்த்தி எல்லாருக்கும் காட்டுவார் பஞ்சவர்ணம் டீச்சர்.

 முதல் பக்கம் முழுக்க அழகாக கேள்வி பதில்களை எழுதியிருப்பான். ரெண்டாவது பக்கத்திலிருந்து ஜுரத்தில் பிதற்றுகிறவன் மாதிரி வாய்க்கு வந்ததை எழுதியிருப்பான். எந்த டீச்சரும் இரண்டாம் பக்கத்தைப் பார்த்ததாக சரித்திரம் இல்லை. பல வாத்தியார்கள் ‘ப்ச்’ என்று பேப்பரைப் பார்க்காமலே திருப்பித் தந்து விடுவார்கள்.

 கொஞ்சம் வளர்ந்து ஹைஸ்கூல் பையனாக ஆனபிறகு வந்த மார்கழிகள் இன்னும் ரசனையானவை. ஜில்லென்ற அரையிருட்டில் கோலம் போடும் சாக்கில் வாசலுக்கு வரும் எஞ்சோட்டுப் பெண்கள்,

 யான் நோக்குங்கால் நிலம்நோக்கி நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகுவார்கள்!

 இடுப்பொடிய கலர்ப் பொடியைத் தூவிக் கோலம் போட்டுவிட்டுக் கடைசியில் நடுவில் சாணி ஃப்ளவர் வாசில் பரங்கிப் பூவை வைப்பது என்ன வால்யூ அடிஷனோ தெரியாது. ஆனால் கோபண்ணா, கண்ணப்பா உள்ளிட்ட பையன்களை,

 கோடிவீட்டு சக்கு

கோலப்பீயை நக்கு

 என்று கவிஞர்கள் ஆக்கியது!

Advertisements

எல்லா சுயமுன்னேற்ற சமாச்சாரமும் ஒரே புத்தகத்தில்…..

எல்லா சுய முன்னேற்றத் தலைப்புகளிலும் இருக்கும் முக்கியமான செய்திகளைத் தொகுத்து ஒரே புத்தகமாகத் தர முடியுமா? அதுவும் மிக எளிமையாக, யாருக்கும் புரிகிற மாதிரி…

மேனேஜ்மெண்ட், தரக் கட்டுப்பாடு, விற்பனை, தகவல் பரிமாற்றம், நண்பர்களை தேர்ந்தெடுப்பது எப்படி, காதலிப்பது எப்படி….. இத்யாதி.

வெறும் 272 பக்கங்களில், வெறும் ரூ.160 ல்!

அமெரிக்க ஆசிரியர்களின் சுய முன்னேற்ற நூல்கள் ரஜினி படத்து டிக்கெட் மாதிரி விற்கின்றன. நம்ம ஊரில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே ஸ்டீஃபன் கோவே, டேல் கார்னி, ஷிவ் கேராவை எல்லாம் துக்கிச் சாப்பிடுகிற சுய முன்னேற்ற குரு இருந்தார்.

அவர் எதைப் பற்றியும் ஒரேயடியாகப் பேச மாட்டார். ஒன்றரை வரி சொல்வார். ஆனால் அதைப் பற்றி ஒரு ஜென்மம் பூரா யோசிக்க வைத்து விடுவார்.

கரெக்ட், அவரேதான்.

மிஸ்டர் திருவள்ளுவர்.

திருக்குறளுக்கு உரை நிறையப் பேர் எழுதியிருக்கிறார்கள். பொழிப்புரைகளில் ஒவ்வொரு குறளின் அந்த்தமும் டிஸ்க்ரீட்டாகத் தனித்து நிற்கும். இது உரை இல்லை. ஒவ்வொரு அதிகாரத்திலும் வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைத் தொகுத்து ஒவ்வொரு கட்டுரை. அவ்வளவே.

இந்தப் புதிய முயற்சிக்கு யோசனை சொன்னவர்கள் கிழக்கு பதிப்பகத்தின் திரு. பத்ரி சேஷாத்ரி அவர்களும், திரு.பா.ராகவன் அவர்களும்.  அவர்கள் சொன்னதைப் புரிந்து கொண்டு பகீரதப் பிரயர்த்தனம் செய்திருக்கிறேன்.

உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

படித்துப் பாருங்கள்.

நூல் பெயர் :திருக்குறள் வழியில் உருப்படு

ஆசிரியர் : கே.ஜி.ஜவர்லால்

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

                               33/15, எல்டாம்ஸ் சாலை

                               ஆழ்வார்பேட்டை-சென்னை 600 018

தொலைபேசி : 044-42009601, /03, /04

மின்னஞ்சல் : support@nhm.in

விலை ; ரூ.160/= மட்டும்.

கேர்ள்ஃப்ரெண்டிடம் பேசுவது பற்றி வள்ளுவர்…..

டோண்டு ராகவன் பாணியில் சொல்வதானால், சமீபத்தில் 1987ம் வருஷம் தூர்தர்ஷனில் நேஷனல் நெட்வொர்க்கில் ஒரு பெங்காலிப் படம் போட்டிருந்தார்கள்.

 அதில் ஒரு தமிழ் பேசும் அரசாங்க உத்தியோகஸ்தர் பாத்திரம் வரும். கதைப்படி அது வெள்ளைக்காரர்கள் காலம்.

 “வெள்ளைக்காரன் இருக்கானே, அவன் நெருப்பு மாதிரி. ரொம்பக் கிட்ட போனா எரிச்சுடுவான். அதுக்காக தூரவே இருந்தோம்ன்னா நமக்கு கதகதப்பே கிடைக்காது.”

 இது வெள்ளைக்காரனுக்கு மட்டுமில்லை. உயர்பதவியில் இருக்கிற எல்லாருக்குமே பொருந்தும். பாஸ்களிடம் அளவுக்கதிகமாக நெருங்கி இருந்தால் போச்சு. நம்முடைய வீக்னஸ் பூரா தெரிந்து நாய்க்குட்டி போல ஆக்கிவிடுவார்கள்.

 “பொங்கல் அன்னைக்கு டிவிதானேடா பார்க்கப் போறே? ஒரு பதினோரு மணிக்கு ஆஃபீஸ்க்கு வா. அரை மணி நேரம் வேலை இருக்கு” என்பார்கள்.

 அரைமணி நேர வேலைக்கு ஒன்றரை மணிநேர கார்ப் பிரயாணத்தில் பங்களூரிலிருந்து ஒருத்தர் வருவாரா என்று எண்ணிப் பார்க்க மறந்து போவோம். பக்தி கண்ணை மறைக்கும்.

 “நாளைக்கு எம்.டி. விஸிட் இருக்கு. ஒரு பத்து ஸ்லைட். கரண்ட் ஸ்டேட்டஸ், நியூ மாடல்ஸ், பிராஜக்ட்ஸ் அவ்வளவுதான்” என்று ஈஸியாகச் சொல்வார்.

 கரண்ட் ஸ்டேட்டஸில் வால்யூம் அண்ட் ஷெட்யூல் அதியரன்ஸில் இருக்கும் முரண்பாடுகளை விளக்க நாலு மணிநேரம் டேட்டா எடுக்க வேண்டும். நியூ மாடல்கள் போட முடியாததற்கு சப்பைக்கட்டு கட்ட அடுத்த நாலுமணி நேரம். பிராஜக்ட்டை எடுக்கும் போது ராத்திரி எட்டு மணி ஆகிவிடும்.

 “நாளைக்கு கார்த்தாலே கொஞ்சம் சீக்கிரம் (அதாவது ஆறுமணி) வந்துடேன்” என்று கதையை தொடரும் போட்டு நிறுத்துவார்.

 விறைத்துக் கொண்டு பாஸின் கிட்டேயே போகாமல் இருந்தால் என்ன ஆகும் என்பது அப்ரைசல் எழுதும் போது தெரியும். ஒரு இன்க்ரிமெண்ட்டையே ‘தொலைச்சிக்கோ’ என்கிற மாதிரி கொடுப்பார்கள். புரமோஷன் காலத்தில் ‘நாட் கேப்பபிள் டு டேக் அப் அடிஷனல் ரெஸ்பான்ஸிபிலிட்டிஸ்’ என்று எழுதிக் கழுத்தறுப்பார்கள்.

 ‘நான் என்ன எல்லாம் பண்ணியிருக்கேன் தெரியுமா?’ என்று கடுப்பாகி பட்டியல் போட்டால் ‘அட, சொல்லவே இல்ல?’ என்பார்கள்.

 அதற்கப்புற்ம் நெருங்கித்தான் ஆக வேண்டும்.

 கொஞ்சம் நெருக்கமாகப் போனால் மேலே ஏறி உட்கார்ந்து கொள்கிற சபார்டினேட்களும் இருக்கிறார்கள். சொந்த விஷயம் பூரா பேசுவார்கள். சாயந்திரம் கொடூரமான பிரச்சினை வந்து ஆளைத் தேடினால் ஏற்கனவே வீட்டுக்குப் போயிருப்பார்கள். திடீர் திடீர் என்று பங்க் அடிப்பார்கள்.

 “நான் சொல்லல்லே? என் மச்சினிக்கு ஒரு லவ் அஃப்ஃபேர்ன்னு அதுல கொஞ்சம் பிரச்சினை ஆகி டிக் டொண்ட்டியைக் குடிச்சிட்டா” என்று விபரீதமான காரணங்களை ரெண்டுநாள் லீவுக்கு சொல்வார்கள். நமக்கு விஷயம் தெரியும் என்பதாலும், தெரிகிற லெவலில் பழகியதாலும் இதைப் பொருத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம்!

 கேர்ள் ஃப்ரெண்ட் விஷயத்தில் கூட இது பொருந்தும்.

 ரொம்ப நெருங்கினால் ஸ்திரீலோலன் என்பார்கள். ரொம்ப விலகி இருந்தால் நம்பர் சரியில்லையோ என்று சந்தேகிப்பார்கள். ரொம்ப மையமாகவே இருந்தால் ஜாடைமாடையாக வேறே அர்த்தம் வருகிற மாதிரிப் பேசுவார்கள். அது புரிந்ததாகக் காட்டிக் கொண்டால் ‘ஐ டிட்ண்ட் மீன் தட்’ என்பார்கள்.

 இவ்வளவு சொல்வதற்கு பதிலாக திருவள்ளுவர்

 அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்

 என்கிறார்.

திருவள்ளுவரின் அவுட் ஆஃப் பாக்ஸ் திங்க்கிங்

சம்பிரதாயமான வழிகளில் யோசிக்கிறதை விட கொஞ்சம் மாறுதலாக யோசிப்பதை Lateral thinking என்றும், Thinking out of the box என்றும் மேலாண்மையில் குறிப்பிடுவார்கள். அதுமாதிரி சிந்தனைகள் மிகக் குறைந்த செலவில், குறுகிய காலத்தில் சிறப்பான பலன்களைத் தரக் கூடியது.

 ஒரு தொழிற்சாலையில் சோப்புக்கட்டிகளை அட்டைப்பெட்டிக்குள் அடைத்து அனுப்ப ஒரு கன்வேயர் இருந்தது. வேலை செய்கிறவர்களின் கவனக் குறைவு காரணமாக சில பெட்டிகள் காலியாகப் போயின. கஸ்டமர்களிடம் கெட்ட பேர் ஏற்பட்டது. அதை எப்படி சரி செய்வது என்று யோசித்த போது லோட் செல், ஸ்கான்னர், இன்ஃப்ரா ரெட் சென்சர் என்று யோசனைகள் வந்தன. எல்லாம் இரண்டொரு லட்சம் செலவாகிற, ஒரு மாசத்துக்கு மேல் ஆகிற ஐடியாக்கள்.

 ஒரு தொழிலாளி சொன்ன யோசனை சுவாரஸ்யமானது.

 சினிமாவில் புயல் ஏற்படுத்த உபயோகிக்கிறது மாதிரி கொஞ்சம் சக்தி வாய்ந்த பெடஸ்டல் ஃபேனை வைத்தால் போதும். காலிப் பெட்டிகள் காற்றில் பறந்து கன்வேயரை விட்டு வெளியே போய் விழுந்து விடும் என்றானாம்.

 திருக்குறளில் கூட பல இடங்களில் Out of the box thinking காணப்படுகிறது.

 அவற்றில் சில நூற்றி எண்பது டிகிரி எதிர்த் திசையில் கூட இருக்கின்றன.

 சாதுவாக இருந்து கொண்டு ஊரை அடித்து உலையில் போடுகிற கேரக்டர்களை பசுந்தோல் போர்த்திய புலி என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.

 ஆனால்,

கபட வேஷ போலிச்சாமியார்களை வள்ளுவர் புலித்தோல் போர்த்திய பசு என்கிறார்.

 ஊர்மக்களின் அடி உதையிலிருந்து காப்பாற்றிக் கொள்ள, அவர்களை பயந்து பக்கத்தில் வராமல் இருக்கச் செய்ய புலித்தோலைப் போர்த்தியபடி பயிரை மேய்ந்ததாம் பசு ஒன்று.

 பயிரைத் தின்கிற குணமே அது புலியில்லை என்பதைக் காட்டிக் கொடுத்து விடும் என்பது கூடத் தெரியாத முட்டாள் பசு போன்றவர்களாம் போலிச் சாமியார்கள். ரொம்ப சீக்கிரம் அடையாளம் காணப்படுவார்களாம்!

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றதம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

என்பது அந்தக் குறள்.

மயிரா மானமா?

உதிர்ந்த முடிகள் என்று ஒரு அரசியல் தலைவர் சிலரை வர்ணித்த போது அவர் பெரும் விமர்சனத்துக்கு ஆளானார்.

“இந்த பொறாமை இருக்கே, அது போறாமையால வருது. அந்த போறாமை வந்தா மனிஷன் என்ன ஆவான்னு அதைத் தலைகீழே திருப்பிப் படிச்சா புரியும்” என்று தங்கவேலு ஒரு படத்தில் சொல்வார்.

மயிறு என்று வசனம் வந்தால் சென்சாரில் கொஞ்சம் யோசிக்கிறார்கள்.

கீழ் வரும் திருக்குறளைப் பாருங்கள் :

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை

தங்கள் நிலையிலிருந்து தாழ்ந்து போகிற மாதிரி காரியங்களைச் செய்கிற போது மனிதர்கள் தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்கு சமமானவர்கள் ஆகி விடுவார்கள் என்று இதற்கு அர்த்தம். மானம் என்கிற அதிகாரத்தில் வருகிறது, குறள் எண் : 964

உயிரே போனாலும் உன்னைக் கைவிட மாட்டேன் என்று சொல்கிறவர்கள் கூட மயிரை இழக்க வேண்டும் என்றால் ரொம்ப யோசிக்கிறார்கள்.

மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரி மான் ஜாதி நம் ஜனங்கள். மயிரில்தான் மானமே இருப்பதாக நினைக்கிறார்கள்.

அப்போது அவர்கள் மானத்தை என்னவாக மதிக்கிறார்கள்?

திருவள்ளுவர் தமிழரா-வெள்ளைக்காரரா?

ஒரு திருக்குறள் சொல்லு என்றால் உடனே பெரும்பாலானவர்கள் சொல்கிற குறள்,

அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

இதற்குப் பெரும்பான்மையான உரையாசிரியர்கள் சொல்லும் பொருள், ‘அகரம் எழுத்துக்களுக்கெல்லாம் முன்னால் இருப்பது போல் உலகத்தோருக்கு இறைவன் முதலானவன் ஆவான்.’

இந்தக் குறளில் சிந்திக்க இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

அகர வரிசை என்று சொல்வார்கள். அதாவது alphabetical ஆர்டர். அப்படி எழுத்துக்களை வரிசைப்படுத்தும் போது அகரம் முதலில் வருவது மாதிரி, உலகத்து உயிர்களை வரிசைப் படுத்தினால் ஆதாம் வருவான் என்பதாகப் பொருள் கொள்ளலாம். இறைவனைக் குறிக்க ஆதி என்கிற சொல் அவசியமில்லை. கடவுளில் ஆதியாவது, அந்தமாவது. முதல் மனிஷனை வெள்ளைக்காரர்கள் ஆதாம் என்கிறார்கள், வள்ளுவர் ஆதி என்கிறார்.

இன்னொரு சங்கதியையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

முதலெழுத்து தமிழில் மட்டும் ‘அ’ இல்லை. ஆங்கிலம் உள்பட எல்லா மொழியிலுமே ‘அ’ தான்.

ஏன்?

நாக்கையும் புரட்டாமல், உதடுகளையும் சேர்க்காமல் எழுப்ப முடிந்த ஒலி ‘அ’. குழந்தையிடமிருந்து முதலில் வருகிற ஒலியும் அதுவே.

கல்விக்கும் கலவிக்கும் ஒரு புள்ளி வித்யாசம்

வள்ளுவர் கல்லாமையிலே ‘கவர்ச்சி’ யைப் புகுத்தி இருக்கிறதைப் பார்த்தோம்.

காமத்துப் பால்லே கல்வியைப் புகுத்தி இருக்காரான்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது. அப்படி ஒரு குறளும் மாட்டிச்சு. புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்திலே ஆயிரத்தி நூத்திப் பத்தாவது குறள்.

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

அறிவை வளர்க்கிற புத்தகங்கள் நிறைய படிக்கிறோம். அப்போ நாம அறிவையா நினைச்சிக்கறோம்? அடடா நம்ம கிட்டே இவ்வளவு அறியாமை இருந்திருக்கேன்னு நினைக்கிறோம். இன்னும் எவ்வளவு அறியாமை இருக்கோன்னு இன்னும் நிறைய படிக்கிறோம்.

இது எப்டி இருக்குன்னா,

அழகான பெண்களைப் பார்க்கிறப்போ நமக்குள்ளே காமம் தலை தூக்குது. அந்தக் காமத்தைத் தீர்த்துக்கணும்ன்னு அவளோட சந்தோஷ அனுபவத்தில் ஈடுபட்டாலும் அது தீர்ரதில்லை. அட இவ மேலே நமக்கு இவ்வளவு ஆசையான்னு திரும்பத் திரும்ப அந்த அனுபவத்திலே ஈடுபடற மாதிரி இருக்குதாம்.

எனக்கென்னமோ தலைவர் லெண்டிங் லைப்ரரி புத்தகங்கள் நிறைய படிச்சிருப்பாரோன்னு சந்தேகம் வருது. சரியா?

கையளவு பழுத்த கல்லாமை!

இந்தப் படத்தைப் போட்டிருந்தாருன்னா வள்ளுவர் கெட்ட வார்த்தையே எழுதியிருக்க வேணாங்க!

இந்தப் படத்தைப் போட்டிருந்தாருன்னா வள்ளுவர் கெட்ட வார்த்தையே எழுதியிருக்க வேணாங்க!

கல்லாதான் சொற்காமுறுதல் முலையிரண்டும்
இல்லாதான் பெண்காமுற்றற்று

மேற்சொன்ன குறள் இடம் பெற்றிருப்பது காமத்துப் பாலில் இல்லை. கல்லாமையில்.

இது ரொம்ப விவாதத்துக்குரிய குறள்.

கல்லாதான் சொற்காமுறுதல் என்பதற்கு இரண்டு அர்த்தம் சொல்கிறார்கள்.

கல்லாதவன் பேச ஆசைப்படுவது என்று ஒரு அர்த்தமும், கல்லாதவனின் பேச்சில் கவரப் படுதல் என்று ஒரு அர்த்தமும் சொல்கிறார்கள். இதே போல முலையிரண்டும் இல்லாதான் பெண்காமுற்றற்று என்பதற்கும் ஒரு ஆக்டிவ் அர்த்தமும் ஒரு பாசிவ் அர்த்தமும் சொல்கிறார்கள். அதாவது மார்புகள் இல்லாத பெண் காதலுறுவது என்று ஒரு அர்த்தமும், மார்புகள் இல்லாத பெண்ணைக் காமுறுவது என்று ஒரு அர்த்தமும் சொல்கிறார்கள்.

ஆக மொத்தம் நாலு அர்த்தம்.

திருவள்ளுவர் தாடி கீடி எல்லாம் வைத்துக் கொண்டு பார்க்க சாமியார் மாதிரி இருந்தாலும் எப்படிப்பட்ட பாக்யராஜ் வேலை செய்திருக்கிறார் பாருங்கள். கல்லாமை அதிகாரத்தில் கொண்டு வந்து கல்பஜா வார்த்தையைப் புகுத்தியிருக்கிறார்.

இதனால் எத்தனை வாத்யார்களுக்கு தர்ம சங்கடம் தெரியுமா?

எங்க ஊர் நேஷனல் ஹை ஸ்கூலில் ஒரு நாள் தமிழ் வாத்யார் பி.சோமசுந்தரம் வரவில்லை. ஆக்டிங்குக்காக …………………………………… டீச்சரை போட்டிருந்தார்கள். அந்தம்மா உடலமைப்பில் கொஞ்சம் நமிதா டைப்.

தமிழ்ப் பாடம் நடத்துகிறேன் என்று அவர் ஆரம்பித்தால் வில்லங்கம் பிடித்த மாதிரி இந்த திருக்குறள்.

ஸ்ரீராமுலு, பழனிவேலு மாதிரி வளர்த்தியான பையன்கள் “……………….. இல்லைன்னா காதலிக்கக் கூடாதா டீச்சர்?” என்கிற மாதிரி சங்கடமான கேள்விகளைக் கேட்டு அவரை லஜ்ஜா(அ)வதி ஆக்கினார்கள்.

ஸ்கேலால் மேசையை இரண்டு தட்டு தட்டி விட்டு அவர் சொன்ன விளக்கம் :

“ச்ச்சூ, திருவள்ளுவர் சொல்ல வந்தது, மார்பகங்கள் இல்லாதவள் தாய்மைக்கு ஆசைப் படுவதைப் போலன்னு. காமம்ன்னா ஆசை. காமுற்றுன்னுதான் சொல்லியிருக்காரு. மார்பகங்கள் இல்லாதவ எதுக்கு ஆசைப் படக் கூடாது? தாய்மைக்குதானே?”

என்று சென்டிமென்ட்டில் அடித்தார்.

ஆனால் எல்லா ஆசிரியர்களுக்கும் இந்த சமயோசிதம் வருமா?

அது நாகப்பட்டினம் ஸ்பெஷல் ஆயிற்றே!