நீதி

மின்சாரமும் சம்சாரமும்

பொறியியல் தத்துவங்களிலிருந்து நிறைய வாழ்க்கைத் தத்துவங்கள் படிக்கலாம்.

காதல் எல்லாருக்கும் பிடிக்கும் என்பதால் அங்கிருந்து தொடங்கலாம்.

Like poles repel, opposite poles attract. இந்த ஆப்போஸிட் போல்களின் இடையில் நிலவும் ஈர்ப்பு விசைதான் காதல். துருவங்கள் இனைந்து விட்டால் பிறகு ஈர்ப்பு விசை இருக்காது. அது போலவே காதலும் தள்ளி இருக்கிற வரை இருக்கும். இணைந்தால் காலியாகிவிடும்.

ஒரு செப்புக் கம்பி நேராக இருக்கும் போது வெறும் மின் கடத்தி. ஆனால் அதை வளைத்துக் கம்பிச் சுருள் ஆக்கினால் என்னென்னமோ செய்யலாம். நீதி, விறைத்துக் கொண்டு நேராக இருப்பதை விட வளைந்து வளைந்து போவது நம் ஆளுமையை அதிகரிக்கும்.

Potential Difference இருந்தால்தான் மின்சாரம் பாயும். அதுவும் அதிக அழுத்தத்திலிருந்து குறைந்த அழுத்தத்திற்கு. கற்க வேண்டுமானால் Low profile maintain செய்ய வேண்டும். விறைத்தால் கற்க முடியாது. வாலறிவன் நள்ளாள் தொழாஅர் எனின் என்று வள்ளுவர் சொன்னதும் இதுவே. மிகுந்த அறிவுடையவர்களைக் கண்டால் பணியுங்கள்.

மின்சாரத்தைக் கடத்த மறுத்து ரெஸிஸ்டர் ஆக இருக்கும் பொருட்கள் என்ன ஆகின்றன? தாங்கள் சூடாகின்றன. இப்படிச் சூடும், குளிர்ச்சியுமாக மாறி மாறி ஏற்பட்டு இறுதியில் Fatigue Failure ஆகின்றன. நமக்கும் விரோதங்களால் இதுவே நேரும். நாம்தான் சூடாவோம். கண்டக்டர் போல (பஸ் கண்டக்டர் இல்லை) வருவனவற்றைத் தேக்காமல் கடத்தி வைத்தால் மின்னோட்டம் போல நட்பும் உறவும் இனிதே தொடரும்.

இப்போதைக்கு இவ்வளவு போதும். இன்னும் சில தத்துவங்களைப் பிறகு பார்ப்போம்.

Advertisements

இது சங்கரராமன் கொலை பற்றிய இடுகை அல்ல

கொலை என்றாலே மூன்று விஷயங்கள் முக்கியம். மோட்டிவ், எவிடன்ஸ், விட்னஸ். மூன்றுமே ஒரே நபரைச் சுட்டிக் காட்டினால் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு குற்றம் நிரூபிக்கப்படுகிறது.

சரி. இந்த விஷயத்தில் மோட்டிவ் இருப்பது மாதிரித்தான் தெரிகிறது. தெரிகிறது என்றால் செய்தித் தாள்களிலும், இணையத்திலும், வார மாத பத்திரிகைகளிலும் படித்ததன் வாயிலாகத் தெரிகிறது. அவை தவறாகக் கூட இருக்கலாம். அதனால்தான் மோட்டிவ் இருக்கிறது என்று சொல்லாமல் இருப்பது மாதிரித் தெரிகிறது என்று சொன்னேன்.

அடுத்தது விட்னஸ்.

ஏறக்குறைய 75% சாட்சிகள் பல்டி அடித்து விட்டதாக பத்திரிகைச் செய்திகள் சொல்கின்றன. அவர்கள் தப்பாக ஆரம்பித்து சரியான வழிக்குப் போனார்களோ அல்லது சரியாக ஆரம்பித்து தப்பான வழிக்குப் போனார்களோ…. நமக்குத் தெரியாது. சாட்சி நிலையில் மாறுதல் இருக்கிறது என்பது மட்டுமே நமக்குப் புரிகிறது. நீதி மன்றமும் நீதிபதிகளும் திறமை படைத்தவர்கள். எங்கே ஆரம்பித்து எங்கே போயிற்று என்று கண்டுபிடித்து விடுவார்கள்.

எவிடன்ஸ்?

குற்றம் சாட்டப்பட்டவருக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் தர உத்தரவிட்டபோது அந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி சொன்னதாக இந்து ஆங்கில நாளிதழில் வந்த செய்தி ஓரளவு நினைவிருக்கிறது. முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்பட்ட எவிடன்ஸ்கள் எல்லாம் மாறிக் கொண்டே வந்து கடைசியில் எவிடன்ஸே இல்லை என்கிற நிலைக்கு வந்து விட்டது, இது ஒரு கேஸே இல்லை என்கிற அளவில் அந்தத் தீர்ப்பு இருந்ததாக நினைவு.

எல்லாம் போகட்டும்.

வழக்கைப் பதிவு செய்த காவலதிகாரி (எதிர்க் கட்சி ஆட்சியில்) முதலில் சஸ்பென்ஷனும், பிறகு டிஸ்மிஸலும் செய்யப்பட்டார். அதற்கு அவரது சர்வீஸில் அவர் எடுத்த சில நடவடிக்கைகள் காரணம் என்பது வெளிப்படை. அதற்குப் பிறகு இறந்தும் விட்டார். அவர் இறந்த பிறகுதான் சாட்சிகள் பல்டி ஆரம்பமாயிற்று என்பது எனது அப்சர்வேஷன். இதற்கு என்ன காரணம் என்பதை நீதிமன்றமும், நீதிபதிகளும் நிச்சயம் உணர்வார்கள். அவர்கள் அனுபவம் மிக்கவர்கள்.

கொலையுண்டவருக்கு வேறு எதிரிகள் இருந்தார்களா என்பது குறித்த தகவல்கள் (at least) எனக்கு இப்போது வரை இல்லை. எதிரிகள் இருந்து அவர்கள் பெயர் வெளிவரவில்லையா, இல்லவே இல்லையா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது.

இடையே நீதிபதியுடன் குற்றம் சாட்டப்பட்டவர் பேசியது போன்ற ஒலிப்பதிவுகளை தனியார் தொலைக்காட்சி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து தொடர்புடைய நீதிபதியை இந்த வழக்கிலிருந்து விலக்கி வைத்து விட்டார்கள்.

மோட்டிவ் இருப்பது போல செய்திகளிலிருந்து தோன்றுகிறது. எவிடன்ஸ் இல்லை போல உச்ச நீதிமன்ற உத்தரவைப் பார்த்தால் தோன்றுகிறது. விட்னஸ்கள் பல்டி அடித்த செய்திகள் வந்தன, ஆனால் வழக்கு பதிவு செய்த காவலதிகாரி இறந்த பிறகு போலத் தோன்றுகிறது. வேறு யாருக்கும் மோட்டிவ் இல்லை போலவும் செய்திகளிலிருந்து நினைக்கத் தோன்றுகிறது.

இவை எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் என்ன தோன்றுகிறது நண்பர்களே? கம் ஆன்…………… ஸ்டார்ட் மீசிக்.

சிந்தனை தூண்டும் ஜென்

ஜென் கதைகள் சிறப்பானவை.

 நீதி சிந்தனையைப் பொறுத்தது. நிறைய நீதிகள் சொல்லலாம். ரா.கி.ரங்கராஜன் கட்டுரைகள் படித்தேன். ஒரு ஜென் சொல்லியிருந்தார். பின்னால் நீதியும் சொல்லியிருந்தார். கதையை முதலில் படியுங்கள்.

 குங்க்ஃபூ-கராத்தே கற்கப் போகிறான். குருவைக் கேட்கிறான்,

 “எவ்வளவு காலம் பிடிக்கும்?”

 “பத்து ஆண்டுகள்” என்கிறார்.

 “இடை விடாது கற்பேன். பசி, தூக்கம் இன்றி; நாள் பூரா கற்பேன். இப்போது சொல்லுங்கள்?”

 “இருபது ஆண்டுகள்” என்றார்.

 ரங்கராஜன் சொன்ன நீதி : பொறுமை.

 என் புரிதல் வேறு. இதைப் படியுங்கள் :

 மரம் வெட்டும் தொழிலாளிகள்; அவர்களில் புதிதாக ஒருவன். புதியவன் அதிகம் சம்பாதித்தான். இரண்டு பங்கு வெட்டினான். மற்றவர்களுக்கு ஆச்சரியம். ‘எப்படி?’ என்று கேட்டார்கள்.

 ‘ஒவ்வொரு முறையும் தீட்டுகிறேன்.’ கோடாலியைக் காட்டினான்.  ’தீட்டலுக்கு ஒரு மரம். நீங்கள் எப்போது தீட்டினீர்கள்?’

 ஷிவ் கேரா சொன்னது. ஷார்பனிங் தி ஆக்ஸ். அதுதான் இந்த ஜென்னும். தொடர்ந்து கற்பது உதவாது. மூளையைத் தீட்ட வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்குப் பிறகும்!

 (வித்யாசமாக முயன்ற இடுகை. என்ன வித்யாசம் தெரிகிறதா?)

கண்ணதாசனின் போதை வந்த போது

சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த நீதி திரைப்படம் உங்களில் பலருக்கு நினைவிருக்கும். சிலருக்கு நினைவில்லாமல் இருக்கலாம்.

ஹிந்தியில் வெளிவந்த துஷ்மன் படத்தின் தமிழ்ப் பதிப்பு அந்தப் படம்.

படத்தின் கதை கொஞ்சம் புதுமையானது.

குடித்து விட்டு லாரியை ஓட்டும் ஒரு டிரைவர், ஒரு ஏழை விவசாயியின் மரணத்துக்குக் காரணமாகி விடுகிறான். வழக்கு நீதிமன்றத்துக்கு வருகிறது. தீர்ப்பு சொல்கிற கட்டம் வருகிறது. இறந்தவனின் மனைவியும், தகப்பனும் நீதிபதியைச் சந்திக்கிறார்கள். இந்த டிரைவருக்கு தண்டனை கொடுப்பதால் எங்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது, இறந்தவன் விட்டுச் சென்ற பொறுப்புக்களை யார் நிறைவேற்றுவார்கள் என்று அங்கலாய்க்கிறார்கள்.

இறந்தவனுக்கு நிறைய்ய சினிமாத்தனமான பொறுப்புக்கள்.

ஊனமுற்ற அப்பா, பார்வையற்ற அம்மா, வயசுத் தங்கை, இரண்டு குழந்தைகள்….

நீதிபதி ஒரு புதுமையான தீர்ப்பு சொல்கிறார்.

நொடித்துப்போன குடும்பத்தைத் தூக்கி நிறுத்துகிற பொறுப்பையே தண்டனையாகத் தருகிறார். குற்றவாளியை வெறுக்கிற குடும்பம் எப்படி மெதுவாக அவன் மேல் பாசத்தைப் பொழிய ஆரம்பிக்கிறது என்பது கதை.

இந்தப் படம் வந்த காலத்தில் இந்தத் தீர்ப்பு ஒரு கற்பனைத் தீர்ப்பாக இருந்தது. சமீபத்தில் கோவையில் தேசியக் கோடி அவமதிக்கப்பட்ட ஒரு வழக்கில் நீதிபதி ஒரு புதுமையான பெயில் கண்டிஷனை முன் வைத்திருந்தார்.

குற்றம் சாட்டப் பட்டவர் பதினைந்து நாளைக்கு தினமும் தன வீட்டு வாசலில் தேசியக் கொடியை காலையில் ஏற்றி, சாயந்திரம் இறக்க வேண்டும் என்பதாகும் அது.

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் என் அபிமானப் பாடல்களில் ஒன்று.

பொறுப்புக்களை உணர்ந்த கதாநாயகன் இனி குடிக்கக் கூடாது என்கிற முடிவுக்கு வருகிறான். அந்த சிச்சுவேஷனில் இடம் பெறுகிற பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதும் போது, ‘இன்று முதல் குடிக்க மாட்டேன்’ என்று எழுதினாராம். எம்.எஸ்.வி. அவரிடம், “எந்தக் குடிகாரனாவது இன்னையிலேர்ந்து குடிக்க மாட்டேன்னு சொல்வானா?” என்று கேட்டாராம்.

தப்பை உணர்ந்த கவிஞர் உடனே ‘நாளை முதல் குடிக்க மாட்டேன்-சத்தியமடி தங்கம்’ என்று மாற்றினாராம்.

இந்தப் பாடலில் அனுபல்லவியாக வருகிற ‘போதை வந்த போது புத்தியில்லையே, புத்தி வந்த போது நண்பரில்லையே’ என்கிற வரிகள் சிந்திக்க வைக்கிற வரிகள். போதையில் இருக்கும் போது குடிக்கக் கூடாது என்கிற எண்ணம் வருவதில்லை. குடிக்கக் கூடாது என்கிற எண்ணம் வரும் போது அதை ஆதரித்து பக்க பலமாக நின்று குடியை ஜெயிக்கிற மன உறுதியைத் தர நல்ல நண்பர்கள் வேண்டும். அவனுக்கோ அந்தக் குடும்பம் மட்டுமின்றி ஊரே எதிரியாக இருக்கிறது.

அந்தப் பாடலில் வருகிற பல வைர வரிகளில் இன்னொன்று : ‘ஏழைகள் வாழ்வில் விளையாடும் இறைவா நீ கூட குடிகாரன்’

ரெகுலர் ஆத்திகர்களை விட நாத்திகராக இருந்து ஆத்திகரானவர்கள் கடவுளிடம் கொஞ்சம் உபரி உரிமை எடுத்துக் கொள்கிறார்களோ?