நேரு

நேருவும் மு. க. அழகிரியும்

”என்னடா, வேலை எதுவும் இல்லாம ஓபி அடிச்சிகிட்டு இருக்கே?” என்றபடி உள்ளே வந்தான் என் நண்பன்.

”உம் வாக்கியத்தில் பிழை இருக்கிறது” என்றேன்.

“எதில் குற்றம் கண்டீர் சொல்லிலா அல்லது பொருளிலா” என்றான் மூக்கருகே ஆள்காட்டி விரலை ஆட்டி.

“சொல்லில் குற்றமில்லை, இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். பொருளில்தான் குற்றம். வேலை இருந்தாத்தான் ஓபி அடிக்க முடியும்”

“சரி, இப்ப எந்த வேலையை விட்டுட்டு ஓபி அடிக்கறே?”

“ஓபின்னா இது ஒரு மாதிரி இலக்கிய ஓபி. ஒரு புத்தகம் எழுதி முடிச்சிக் குடுத்தாகணும். அதுல ஒரு விஷயம் புரியாததால் காங்கிரஸோட வரலாற்றைப் படிக்க வேண்டியிருந்தது”

“வரலாறு என்ன சொல்லுது?”

“கோஷ்டிகள் காங்கிரஸுக்குப் புதிசில்லை. 1885 இல்  தொடங்கப்பட்ட காங்கிரஸ்  1907ம்  ஆண்டே  இரண்டாகப் பிளந்தது.  பாலகங்காதரத் திலகரின் தீவிர  கோஷ்டி  மற்றும்  கோகலேயின்  மிதவாத  கோஷ்டி  என்று ஆயிற்று”

“அட.. இண்ட்டரஸ்டிங்!”

“அதை விட இண்ட்டரஸ்டிங் ‘வெள்ளையனே வெளியேறு டைப் போராட்டத்தை திலகர் 1907 லேயே ஆரம்பிச்சாச்சு. அவருக்குத் தீவிரவாத முத்திரை குத்தி அனுப்பிட்டு 1942ம் வருஷம் நானே சிந்திச்சேன் போல காந்தி திரும்ப அந்த இயக்கத்தை ஆரம்பிச்சார்!”

“போப்பா.. சும்மா குறை சொல்லாதே 1907 ல காந்தி இந்தியாவிலயே இல்லை. தன்னாப்பிரிக்காவில் இல்ல இருந்தார்?”

”சரி அதை விடு. இன்னொரு சுவாரஸ்ய விஷயமும் உண்டு. 1920 இல் காந்தி தலைமை ஏற்ற போது கிலாஃபத் இயக்கம் என்கிற இஸ்லாமிய அமைப்புடன் கூட்டணி வைத்தது பிடிக்காம மோதிலால் நேரு உள்பட பலரும் வெளியேறி ஸ்வராஜ்ன்னு புதுசா கட்சி ஆரம்பிச்சாங்க”

“அட, நேருவும் மோதிலாலும் வெவ்வேறு அணியா!”

“ஆமாம். நம்ம மு. க., அழகிரி போல”

“அட.. அப்ப அழகிரி ஆதரிக்கிற சைடுதான் பெருசா வருங்கிறியா?”

“நா எதுவும் சொல்லல்லை. நீதான் சொல்றே, ஆளை விடு”

Advertisements

படிக்காத மேதையின் நினைவுகள்…

மேனேஜ்மென்ட்டில் தலைவர்களைப் பற்றி சொல்கிற போது Accepted Leader, Designated Leader என்று இரண்டு ரகம் சொல்வார்கள்.

இந்திய அரசியலில் முதல் ரகம் ரொம்பக் குறைவு.

மக்கள் யாரைத் தலைவராக ஏற்றுக் கொள்கிறார்கள்?

சுத்தம், சுயநலமின்மை இந்த இரண்டும் இருப்பவர்களை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்கிறார்கள். அதனால்தான் விவேகானந்தர்,   Give me few men and women who are pure and selfless, I shall shake this world என்று சொன்னார்.

அந்த இரண்டும் அமையப் பெற்ற வெகு சிலரில் பெருந்தலைவர் காமராஜரும் ஒருவர்.

படித்தவர்களை மதித்த படிக்காத மேதை. ஐ எ எஸ் அதிகாரிகளை அதிகாரம் மூலம் அடக்க நினைத்த மந்திரிகளிடம், “அவங்க நினைச்சா மந்திரி ஆகலாம், நீயும் நானும் ஐ எ எஸ் ஆக முடியுமா?” என்று அடக்கியவர். நேருவின் மேல் அளவில்லாத மரியாதை கொண்டிருந்தவர்.

மூத்த தலைவர்கள் கட்சிப் பணியில் ஈடுபடவேண்டும் என்று நேரு அறிவித்தவுடன் முதலமைச்சர் பதவியை துறந்தவர்.  நேரு அந்த திட்டத்துக்கே காமராஜ் பிளான் என்று பேர் வைத்தார்.

எளிமைக்கு மறு பெயர் காமராஜ்.

கதர் வேட்டி, கதர் சட்டை, பனைமட்டை செருப்புதான் ஆயுள் பூரா அணிந்தார். கல்யாணமே செய்து கொள்ளாதவர். தான் முதலமைச்சராக இருப்பதை பெற்ற தாய்க்குக் கூட சொல்லாதவர். பதவியை வெறும் பணி செய்திடக் கிடைத்த ஆணையாக மட்டுமே மதித்தவர்.

விருது நகரில் அவர் தெருவில் வசித்தவர் நடிகர் வி.கே.ராமசாமி. ஊருக்குப் போயிருந்த போது, காமராஜரின் வீட்டுக்குப் போய் அவரது தாயாரைப் பார்த்தாராம். அந்த அம்மாள் வி.கே.ஆரிடம்,

“என் புள்ளை கூட பட்டணத்திலேதான் இருக்கு. விசாரிச்சேன்னு சொல்லு” என்றாராம்.

இன்றைக்கு அந்த மா மனிதரின் நினைவு நாள்.

நமக்கு காமராஜர் மாதிரி ஒரு தலைவர் மறுபடி கிடைப்பாரா?