விவேக்

அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு!!

மஹாமகத்தன்று கும்பகோணம் போக முடியாதவர்கள் எல்லாரும் மாசி மாசத்தின் கடைசி நாளான கடந்த ஞாயிற்றுக் கிழமை முற்றுகை இட்டார்கள்.

 எந்தப் பெரியக் கூட்டத்தைச் சொன்னாலும் மஹாமகக் கூட்டம் என்று வர்ணிப்பதைக் கேட்டிருக்கிறேன். ஃபிராங்க்லி நான் பார்க்கும் முதல் மஹாமகக் கூட்டம் இது. விவேக்கின் திருமலை படத்துக் காமெடி போல எங்கே போனாலும் போலீஸ்காரர்கள் திருப்பி விட்டார்கள். வண்டிகளை நிறுத்த முடியவில்லை, நிறுத்தினால் எடுக்க முடியவில்லை. ஹோட்டல்களில் சாப்பிட இடம் கிடைக்கவில்லை.

ஆப்பர்ச்சூனிட்டியைப் பயன்படுத்தி ரோட்டோரங்களில் பிளாஸ்டிக் மக், துவாலை, ஜட்டி என்று வர்ஜ்யா வர்ஜ்யமின்றி ஏதேதோ விற்றார்கள்.

ஒரு இடத்தில் திருப்பி விடப்பட்டு ஊர்ந்து ஊர்ந்து ஒரு மணி நேரம் போய் ஒரு சாலையின் கடைசியில் வண்டி போக முடியாத மாதிரி கர்டர் அமைத்திருந்தார்கள். சிக்கினோம்! பின்னாலும் வர முடியாது, முன்னாலும் போக முடியாது….

இந்த மாதிரி சிச்சுவேஷனில் அந்த சாலையின் நுழைவு, வெளியேற்றம் இரண்டிலும் கர்டர் அமைக்க வேண்டாமோ? போக்குவரத்துத் துறை ஏன் இப்படிக் கோமாளித்தனம் செய்கிறது?

பொற்றாமரைக் குளம் அருகே ஜாம் ஆனதில் ஒரு வண்டியிலிருந்து ஐந்தாறு பேர் இறங்கிப் போய் முழுக்குப் போட்டுவிட்டு வந்து விட்டார்கள்! வண்டியில் நடந்த உரையாடல் :

“ஏய்.. என்னய்யா இது? இப்படி சொத சொதன்னு வண்டிக்குள்ள வந்தா வண்டியெல்லாம் சகதி ஆயிடாதா?”

 “கோய்ச்சிக்காத மாப்ளே… அப்புடியே அவுக்காம பிளிஞ்சிகிட்டுத்தான் வந்தோம். ஜட்டிதான் ஈரமா இருக்கு, என்னா பண்றதுன்னு தெரியல்ல”

“சரி.. சரி… இங்க அவுத்துட கிவுத்துடப் போறீங்க. வண்டில லேடிஸெல்லாம் இருக்காங்க”

“அவுக்காம அப்புடியே புளிஞ்சிக்கிறோம்”

“எதை? ஜட்டியவா? அவுக்காம பிளியிறீங்களா? ரிஸ்க்குய்யா”

 

Advertisements

ஜெயகாந்தன் கதைகளில் மனோதத்துவம்

விவேக் காமெடி பற்றி நான் எழுதியிருந்ததற்கு டாக்டர் சுரேஷ் ஒரு காமெண்ட் எழுதியிருந்தார்.

அதைப் படிக்கிற போது எனக்கு ஜெயகாந்தனின் ஞாபகம் வந்தது.

ஒரு இடுகைக்கு இன்ஸ்பயர் செய்த டாக்டருக்கு நன்றி.

கதை ‘சமூகம் என்பது நாலு பேர்’ என்று ஞாபகம். ஜெயகாந்தனின் டை ஹார்ட் விசிறிகள் திருத்தலாம்.

‘பேசுகிறவர்கள் வேண்டியது என்று விரும்பியும், வேண்டாதது என்று வெறுத்துமா பேசுகிறார்கள். தங்கள் மனதைக் கொஞ்சிக் கொள்ளத்தானே பேசுகிறார்கள்’ என்று எழுதியிருப்பார்.

விமர்சனங்களில் பொதுவாக ‘எனக்கு என்ன எல்லாம் தெரிஞ்சிருக்கு பாத்தியா?’ என்கிற மெல்லிய மதர்ப்பு தெரியும். எண்பதுகளில் ஆனந்த விகடன் திரை விமர்சனங்கள் படித்திருக்கிறீர்களா?

‘பட்டப் பகலில் பில்டர் போட்டு எடுத்து விட்டு இரவாகக் காட்ட முயன்றிருக்கிறார்கள்’, இந்தக் காட்சியில் ரிப்லேக்டர்கள் பயன் படுத்தியிருக்கக் கூடாது’, ‘காட்சியின் முடிவில் ஸ்டே அதிகமாக இருக்கிறது’, ‘டப்பிங்கில் சின்க்ரோ சரியில்லை’ என்றெல்லாம் எழுதுவார்கள்.

அது மாதிரி என் சிற்றறிவை கொஞ்சிக் கொள்ளும் ஆர்வங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். மற்றபடி கமலஹாசன் மீதோ, பாலகுமாரன் மீதோ, விவேக் மீதோ எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என்பதைப் புரிந்து கொண்டு, புனைப் பெயரில் கெட்ட வார்த்தைப் பின்னூட்டம் போடுவதையும், உனக்கெல்லாம் ரேசெஷனில் ஏண்டா வேலை போகவில்லை என்று சபிப்பதையும் என் நண்பர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

விவேக் காமெடியிலிருந்து கொஞ்சம் பொறியியல்

“ஏண்டா, வண்டிக்குள்ளே 730 ஸ்பேர் பார்ட்ஸ் இருக்கு. அதெல்லாம் வண்டியை நல்லா ஓட்டாது இந்த அம்பது பைசா எலுமிச்சம் பழம்தான் ஓட்டுமா?” என்று மூட நம்பிக்கையை கேலி செய்கிற விவேக் காமெடி பார்த்திருப்பீர்கள்.

assemble செய்யப்பட்டவை ஸ்பேர் பார்ட்டுகள் அல்ல. அவை பார்ட்டுகள்தான்.

அவை பழுதானால் மாற்றுவதற்காக வெளியே சேமித்து வைக்கப் பட்டிருப்பவையே ஸ்பேர் பார்ட்டுகள். அவற்றையும் assemble செய்து விட்டால் ஸ்பேர் பார்ட்ஸ் என்று அழைக்கக் கூடாது.

அதே போல பிரேக் பிடிக்காத தண்ணி லாரி என்று அடிக்கடி விவேக் சொல்வதுண்டு.

தண்ணீர் லாரிகள் பிரேக் பிடிக்காமல் இல்லை.

திரவங்களை ஏற்றிச் செல்லும் போது சடக்கென்று பிரேக் போடக் கூடாது.

அப்படிப் போட்டால் ஏற்படும்  Hydraulic  விசையில் லாரி அசுர ஆட்டம் கண்டு கவிழ்ந்து விடும் அபாயம் இருக்கிறது. அதனால் திரவ லோட் ஏற்றிய லாரி டிரைவர்கள் மிகக் கவனமாக வேகம் குறைத்து மெல்லத்தான் பிரேக் போடுவார்கள்.