joke

அதிகப் படிப்பு = அதிகக் குழப்பம்!

அதிகம் படித்தவர்கள்தான் எளிய விஷயங்களையும் ஜாஸ்தி குழப்பிக் கொள்கிறார்கள்.

இதற்கு நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.

என் நண்பன் ஒருவன் ஆட்டமோபைலில் போஸ்ட் கிராஜுவேட். கும்மிடிப்பூண்டியிலிருந்து வரும் போது அவன் பைக் நடுவழியில் மக்கர் செய்தது. அவன் கார்புரேட்டரைக் கழற்றி கிளீன் செய்கிறான், பாயிண்ட் செக் செய்கிறான், ஸ்பார்க் பிளக், ஏர் ஃபில்ட்டர்…..

ம்ம்ஹூம்.

மெக்கானிக் ஷாப்புக்குத் தள்ளிக் கொண்டு போனால் அவன் முதலில் பெட்ரோல் ட்யூபைப் பிடுங்கி செக் பண்ணிப் பார்த்துவிட்டு,

“வண்டில பெட்ரோல் இல்லைங்க” என்றானாம்.

காலையில்தானே ஃபுல் டேங்க் போட்டோம், அதெப்படி காலியாகும் என்கிற நினைப்பு. எவனோ பெட்ரோலைத் திருடிக் கொண்டு போயிருக்கிறான்! காலையில்தான் பெட்ரோல் போட்டோம் என்கிற நினைப்பு இருக்கிறவன், காலைவரை நன்றாகத்தானே ஓடியது அதற்குள் வண்டியில் இத்தனை டிஃபெக்ட் வருமா என்று யோசித்திருக்கலாம், ஆனால் எது அந்த யோசனையைத் தடுத்தது?

படிப்பு. நான் ஆட்டமோபைல் போஸ்ட் கிராஜுவேட் என்கிற கர்வம்.

அது போல, தொட்டியிலிருந்து பம்ப் செய்யும் பம்ப் ஒன்று வேலை செய்யவில்லை. ஒரு ஐ. ஐ. டி எஞ்சிநியரைக் கூப்பிட்டுக் காண்பித்ததில் அவர் ஒரு யு ட்யூப் மேனோ மீட்டர் வைத்து செக் செய்வதும் டிசைன் விவரங்கள் பார்ப்பதுமாக இருந்திருக்கிறார். செக்ஷன் ஆப்பரேட்டர் வந்து

“என்ன சார் ஆச்சு?” என்று கேட்கவும்

“Actually the available NPSH is less than the required NPSH. That is why the suction is high and consequently the vapor pressure is also lowering. Naturally water will evaporate to compensate this loss and hence there is vapor lock. We need to relook the NPSH condition…” என்று அவர் வியாக்கியானம் பண்ணிக் கொண்டிருக்க,

ஒரு அன் ஸ்கில்ட் ஆசாமி வந்து கொஞ்சம் சாணியைக் கரைத்து சக்ஷன் பைப்பில் ஊற்றி பிரைம் செய்து ஸ்டார்ட் செய்ததும் பம்ப் இரைக்க ஆரம்பித்து விட்டது.

இன்னொரு அனுபவம் ரொம்ப சுவாரஸ்யமானது. கோத்தாரி கெமிக்கல்ஸில் வேலை செய்யும் போது, குளோரின் நிரப்பும் நிலையத்தில் ஒரு காண்டிராக்ட் ஒர்க்கர் சிகரெட் பிடுத்துக் கொண்டிருந்தார். அந்தப் பக்கம் வந்த எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர் கே.எஸ்.ரங்கராஜன் கோபமாக அவரைப் பார்த்து,

“எந்தக் காண்டிராக்ட்டுடா நீ? உன் பேரென்ன?” என்று கேட்டார்.

அவன் எதுவும் சொல்லாமல் திரு திருவென்று விழித்தான்.

தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் என்று மாறி மாறிக் கேட்டு எதற்கும் பதில் வராததால் அருகிலிருந்த சுந்தர பாஷ்யம் என்ற காண்டிராக்டரிடம்,

“எனக்கு 12 லேங்வேஜ் தெரியும். இவன் எந்த லேங்வேஜ்காரன்?” என்றார் எரிச்சலுடன்.

“தமிழ்தான் சார்” என்றார் சுந்தர பாஷ்யம்.

“பின்ன ஏன் பதில் சொல்லல்லை?” என்றார் மறுபடி எரிச்சலாக.

“அவனுக்கு காது கேக்காதுங்க”

Advertisements

ஓ.. அந்த வீடா?

நடு ராத்திரியில் அந்த போலிஸ் ஸ்டேஷன் ஃபோன் அடித்தது.

 தூக்கக் கலக்கத்துடன் அதை எடுத்தார் டூட்டி கான்ஸ்டபிள் “ஹலோ..?”

 “ஒரு திருடன் மாட்டிக்கிட்டான், உடனே வாங்க”

 “மாட்டிக்கிட்டான்னா? எங்கே மாட்டிக்கிட்டான்? அட்ரஸ் சொல்லுங்க”

 “மார்க்கண்டேயன் தெரு தெரியுமா?”

 “தெரியும் சொல்லுங்க”

 “அங்கே ஒரு பிள்ளையார் கோயிலுக்கு எதிர்வீடு”

 ”தெரியும்.. சொல்லுங்க”

 “அங்கதான் சார் பெட் ரூம்ல சிக்கியிருக்கான்”

 “ஓஹோ.. நீங்க யாரு?”

 “நாந்தான் சார் அந்த சிக்கின திருடன், உடனே வந்து காப்பாத்துங்க சார்”

 “அது கஷ்டம். காலைலதான் வர முடியும்”

 “ஏன் சார்?”

 “அவளுக்கு பயந்துதான்ய்யா நான் பர்மனண்ட்டா நைட் ட்யூட்டி வாங்கிகிட்டு இருக்கேன் வெண்ணை”

மன்னிக்கவும், A ஜோக்!

பேராசிரியர் கேட்ட கேள்வி அந்தப் பெண்ணை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது.

“உணர்ச்சிவசப் படும் போது சாதாரண நிலையில் இருப்பதை விடப் பத்து மடங்கு பெரிதாகும் உறுப்பு எது?” என்பதுதான் அவர் கேட்ட கேள்வி.

 அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது. தலையைக் கூட நிமிர்த்தவில்லை. கால் கட்டைவிரலால் கோலம் போட்டபடி குனிந்து அசட்டுச் சிரிப்பு சிரித்தபடி நின்றுகொண்டே இருந்தாள். பதிலே சொல்லவில்லை. பொறுமையிழந்த பேராசிரியர்,

 “வேறே யாராவது சொல்ல முடியுமா?” என்று கேட்க, ஆண்கள் வரிசையிலிருந்து ஒரு பையன் எழுந்தான்.

 “சொல்லு” என்றார் பேராசிரியர்.

 அந்தப் பெண் கைகளால் முகத்தை மூடிக் கொண்டு, “நோ” என்று அலறினாள்.

 “கண்களின் பாவை சார்” என்றான் பையன்.

 “சரியான விடை. உட்கார்” என்று சொன்ன பேராசிரியர், அந்தப் பெண்ணைப் பார்த்து,

 “உனக்கு மூன்று விஷயங்கள் சொல்ல வேண்டும்” என்றார்.

 அவள் ‘என்ன?’ என்பது போலப் பார்த்தாள்.

 “முதலாவது நீ வகுப்பில் கவனிக்கிறதே இல்லை. அடுத்தது பாலுணர்வு உன்னை ரொம்ப டிஸ்ட்ராக்ட் செய்கிறது” என்று நிறுத்தினார்.

 இன்னொண்ணு என்ன என்று கேட்க நினைத்தாலும் கட்டுப் படுத்திக் கொண்டு காத்திருந்தாள்.

 “உன் எதிர்பார்ப்பு ரொம்ப ஜாஸ்தி. உடனே கரெக்ட் பண்ணிக்கல்லைன்னா ஏமாந்து போக வேண்டியிருக்கும்” என்றார்.

டாக்டர் – குழந்தை – ஆணுறை

அகாலத்தில் அந்த டாக்டரின் வீட்டு தொலைபேசி அடித்தது.

தூக்கக் கலக்கத்தில் எழுந்த டாக்டர் தொலைபேசியை எடுத்து,

“ஹலோ” என்றார்.

“டாக்டர் ஜிகினா பேப்பர்ல சுத்தி பளபளன்னு இருந்தாலே சாக்கலேட்ன்னு நினைச்சி ஆணுறையை குழந்தை முழுங்கிடிச்சு”

அவசரத்தை உணர்ந்த டாக்டர் அட்ரசை வாங்கிக் கொண்டு “உடனே வரேன்” என்று புறப்பட்டார்.

அவர் கிளம்பி வீட்டை விட்டு வெளியே வருமுன் மறுபடி தொலைபேசி அடித்தது.

அதே ஆள்தான்.

“டாக்டர்.. தொந்தரவுக்கு மன்னிச்சிடுங்க. நீங்க வர வேண்டியதில்லை”

“என்ன ஆச்சு, குழந்தை முழுங்கின ஆணுறையை வெளியே எடுத்துட்டீங்களா?”

“இல்லை டாக்டர், அதிர்ஷ்டவசமா பீரோவுக்குள்ளே இன்னொண்ணு இருந்தது. அதை இப்பதான் பார்த்தோம்”

ஒட்டகத்தை கட்டிக்கோ

ஒரு பாலைவனத்தில் அகழ்வாராய்ச்சி நடந்து கொண்டிருந்தது.

பணியாளர்கள் சரியாக வேலை செய்கிறார்களா என்று பார்க்க மேலாளர் வந்தார். அவர் மூன்று நான்கு நாட்கள் தங்க வேண்டி இருந்தது. அவர் ஒரு ஜாலி பேர்வழி. பொம்பளை ஷோக்கு அதிகம். இரண்டாம் நாள் மாலையே ஊழியர்களிடம் கேட்டார்:

“ய்யோவ் முடியலைய்யா. நீங்கள்ளாம் எப்படிய்யா மானேஜ் பண்றீங்க” என்றார்.

அவரைப் புரிந்த ஒரு ஊழியன் கையைப் பிசைந்து கொண்டு

“சார், ஒரு அவசரம் ஆபத்துக்குன்னுதான் இந்த ஒட்டகத்தை வாடகைக்கு எடுத்து வெச்சிருக்கோம். இதை.. இதை.. நீங்க.. யூஸ் பண்ணி..”

என்றதும்

அவனது தர்ம சங்கடத்தை புரிந்து கொண்டு

“ம்ம்ம்… ம்ம்ம்.. நான் பாத்துக்கறேன்” என்று

ஒட்டகத்தை அவிழ்த்துக்கொண்டு அவர் போனார்.

அரை மணி நேரம் கழித்து ஏமாற்றத்தோடு வந்த அவர்

“எப்டிய்யா மானேஜ் பண்றீங்க? இதை ஒரு நிமிஷம் ஒரு இடத்திலே உக்கார வைக்க முடியலையே?” என்றதும்

ஊழியர்கள் அதிர்ந்தார்கள்.

“சார் நாங்க இந்த ஒட்டகத்தை டவுனுக்கு போக பயன் படுத்துவோம். நீங்க என்ன பண்ணீங்க”