சென்னையில் ஹை டெக் பேருந்துகள்

குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம்,

”21G ஏசி வண்டி என்ன ப்ரீக்வன்சில வரும் சார்?” என்று கேட்டேன்.

நான் ஏதோ மிசைல் லான்சிங்கிற்கு ராக்கெட் புரொப்பல்லண்ட் கணக்கிடச் சொன்ன மாதிரி யோசனையில் உறைந்து போனார்.

சிலர் இப்படித்தான், சின்ன கேள்விகளுக்குக் கூட மலைத்துப் போவார்கள். என் நண்பரின் மாமனாரிடம் ‘காபி வேணுமா, டீ வேணுமா?’ என்று கேட்டால் போதும். அவருக்கு வியர்த்துப் போய் கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விடும்.

மூளை எப்பொதும் ஏகப்பட்ட யோசனைகளில் ப்ரி ஆக்குப்பைடாக இருந்தால் இப்படித்தான். கேள்வி மேலே போய்ச் சேரவே ரொம்ப நேரம் ஆகும்.

என் கெட்ட நேரம், அங்கே என்னை விட குசும்பு பிடித்த ஒரு ஆசாமி நின்றிருந்தார்.

“ஏசி ன்னு சொன்னதாலே பிரீக்வப்சி எல்லாம் கேக்கறீங்களா? இது ஏர் கண்டிஷன் சார்.. ஆல்ட்டர்னேட்டிங் கரண்ட் இல்லை” என்றார்.

நேரம் சரியா இல்லாவிட்டால் எதுவோ எதெதுவோ ஆகுமாம்.

அவருடைய பொறியியல் ஞானத்தை நான் மெச்சிக் கொள்வதற்க்குள் ஒரு ஏசி வண்டி வந்து விட்டது.

‘ஞானப் பிரகாசம்… நாம இந்தியாவிலதான் இருக்கமாடா!’ என்று வியந்து கொண்டேன். ஏசியும் தாழ் தளமும் சேர்ந்து வண்டி அலம்பலாக இருந்தது. ஜப்பானில் சகாமி ஓனோ விலிருந்து டோக்கியோ போன வண்டியை விட நன்றாக இருந்தது.

அடையார் பார்க் ஓட்டலுக்கு இருபத்தைந்து ரூபாய் கட்டணம்.

சுகமான பிரயாணம்.

ஒரே ஒரு அசெளகர்யம். பண்பலை வானொலி நிலையத்து ஜாக்கிகள் பனை மட்டையில் ………………….. போன மாதிரி பேசிக் கொண்டே இருப்பதுதான் அது.

போக வேண்டிய இடத்துக்கு ஊருக்கு முன்னால் போய் விட்டதால் அடையார் பார்க்கிலிருந்து எல்டாம்ஸ் ரோடுக்கு நடந்தே போவது என்று முடிவு செய்தேன்.

டி.டி,கே ரோடில் நிறைய மரங்கள்.

வெய்யிலில் நடந்த சிரமம் தெரியவில்லை.

அவ்வளவு தூரம் நடந்து போயும் இன்னும் நேரம் மிச்சமிருந்தது. நாளைக்குப் போக வேண்டிய இடத்துக்கு நேற்றே புறப்படுவதற்குப் பெயர் பங்ச்சுவாலிட்டி இல்லையாமே? அப்படியா?

எனக்கு ஃபாஸ்ட் ஃபுட் செண்ட்டர் என்றால் அலர்ஜி.

எல்டாம்ஸ் ரோடில் ஓட்டலே இல்லை.

பார்வதி கேஃப் என்று ஒரு ஓட்டல் கிடைத்தது. ஓப்பன் ஏரில் கீற்றுக் கொட்டகைகள் போட்டு பிரமாதமாக இருந்தது.

நான் புகைப் படம் எடுத்ததைப் பார்த்து உரிமையாளர் அசோக்,

“ப்ரெஸ்சா?” என்று கேட்டார்.

“இல்ல சார், பிளாக்கர்” என்றேன்.

பணம் தந்த போது,

“அதுக்கென்ன, அடுத்த தரம் பார்த்துக்கலாமே?” என்றார்.

“அடுத்த தரம் நிறைய சாப்பிடறேன். அப்ப கன்செஷன் குடுங்க. இன்னைக்கு பில் இருபத்தேழு ரூபாதான்” என்றேன்.

17 comments

  1. // நாளைக்குப் போக வேண்டிய இடத்துக்கு நேற்றே புறப்படுவதற்குப் பெயர் பங்ச்சுவாலிட்டி இல்லையாமே? அப்படியா?//

    இப்படியெல்லாம் சொல்லி பயமுறுத்தக்கூடாது…

  2. இனிமே சாப்பிட போனா கேமராவோட போக வேண்டியதுதான். உங்க நல்ல நேரம் கவனிச்சு அனுப்பி வைத்தார் கடைக்காரர். என் கெட்ட நேரம் நல்லா “கவனிச்சு” அனுப்பிச்சு புட்டாயிங்கன்னா? கைப்புள்ள கணக்கா கொஞ்சம் சூதானமா இருக்கணும் போல.

  3. //“அடுத்த தரம் நிறைய சாப்பிடறேன். அப்ப கன்செஷன் குடுங்க. இன்னைக்கு பில் இருபத்தேழு ரூபாதான்” என்றேன்./

    குசும்பு

  4. //“அடுத்த தரம் நிறைய சாப்பிடறேன். அப்ப கன்செஷன் குடுங்க. இன்னைக்கு பில் இருபத்தேழு ரூபாதான்” என்றேன்.//

    அக்மார்க் ஜாவர் குசும்பு 🙂

  5. //”21G ஏசி வண்டி என்ன ப்ரீக்வன்சில வரும் சார்?” //

    மிசைல் லான்சிங்கிற்கு ராக்கெட் புரொப்பல்லண்ட் கேள்வி அளவிற்கு இல்லயென்றாலும், பஸ் ஸ்டாண்டில் கேட்கும்போது கொஞ்சம் டெரர் ஆகத்தான் செய்வார்கள்.

    ”அடுத்த பஸ் எப்ப?” என்று கேட்டு இருக்கலாம்.

    //“அதுக்கென்ன, அடுத்த தரம் பார்த்துக்கலாமே?” என்றார்.//

    ஓ! அப்படி வேற நடக்குதா?

  6. உங்க நடையிலே பதிவு அருமை. இனிமே சென்னை வாசம் தானா?

    வெள்ளி நிலா பத்திரிக்கையில் – உப்புமா, சிக்குமா, ஒரு முழு பேஜில் அழகாக வந்துள்ளது.

    பார்வதி கேபே பற்றி ரைட்டர் பா.ரா. எழுதியிருந்தார்.

    ஸ்ரீபார்வதி அன்லிமிடெட்

  7. மூன்று மாதங்களுக்கு முன்னால – நான் குரோம்பேட்டை சாலையோர சூப்பு (சைவம்தான்) விற்பவர் ஒருவரை – விலாவாரியாக பேட்டி கண்டேன். படம் எடுக்க வேண்டாம், கண்ணடி படும் என்றார். மற்றவர்களிடம் பெரிய கப் சூப்புக்கு பத்து ரூபாய் வாங்கிக் கொள்பவர் – என்னிடம் பதினைந்து ரூபாய் வாங்கிக் கொண்டார் – (நீங்க எல்லாம் பத்திரிகை காரங்க – இதுக்கெல்லாம் பணம் கொடுப்பீங்கதானே? )

  8. வார்த்தையிலேயே கிடுக்கி பிடி நன்றாக இருந்தது ( எ .சி ..பிரிக்வேன்சி …….) பனை ஓலை.. அடை மழை(?) ….பண்பலை சரியான ஒப்பிடு.
    பார்வதியில பிரஸ் மாதிரி பிளாக்கர் கன்சசன் வேறு உண்டா ?

  9. //”ஒரே ஒரு அசெளகர்யம். பண்பலை வானொலி நிலையத்து ஜாக்கிகள் பனை மட்டையில் ………………….. போன மாதிரி பேசிக் கொண்டே இருப்பதுதான் அது.”//

    Very true in all the Tamil FM ‘s.
    Enakku veru ondu thontriyathu ‘ Oolai paayil Naai mondathu mathiri’.

  10. //இன்னைக்கு பில் இருபத்தேழு ரூபாதான்” என்றேன்.// அதானே பார்த்தேன்.. இல்லாங்காட்டி நம்ம அதை யூஸ் பண்ணி இருப்போம்ல?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!