Day: ஜூன் 2, 2010

சிலப்பதிகாரம் என்றால் சிலப்ப அதிகாரம்!

”என்ன சார், நான் எழுதின புஸ்தகம் வரப் போகுது, வரப் போகுதுன்னு சொல்லிகிட்டிருந்தீங்க வந்துடிச்சு போலிருக்கே?”

“ஆமாம். சிலப்பதிகாரத்தோட நாவல் வடிவம். கிழக்கு பதிப்பகம் வெளியீடு”

 “மச்சம்தான் உங்களுக்கு. முதல் படமே சங்கர், மணிரத்னம், பாலச்சந்தர் படமா அமையற ஹீரோ மாதிரி முதல் புஸ்தகமே கிழக்கு பதிப்பகம் வழியா வருது”

 “பெருமையாத்தான் இருக்கு. மச்சம் மட்டும்தான் என்னுது. மிச்சம் நிறைய இருக்கு”

 “என்னது?”

 “நான் முதல்ல நன்றி சொல்ல வேண்டியது நம்ம நண்பர், பிளாக்கர் என். சொக்கன் அவர்களுக்கு”

 “யாரு, கிழக்கு பதிப்பகத்திலே ஏகப்பட்ட புஸ்தகங்கள் எழுதியிருக்காரே அவரா?”

 “அவரேதான்”

 “ஏன்?”

 “ஏணியில ஏறி உன்னதமான இடத்துக்கு வந்திருக்கிற அவர் ஏணியை எடுத்து கக்கத்தில இடுக்கிகிட்டு ஓடாம என்னையும் கை நீட்டி ஏத்தி விடணும்ன்னு நினைச்சாரே அதுக்கு”

 “ஏற்கனவே சொல்லியிருக்கீங்க”

 “இன்னும் நிறைய தடவை சொல்வேன். அவசரமான உலகம். போட்டி உலகம். அதுல இந்த மாதிரி மனசு இருக்கிறவங்களைப் பாக்கவே முடியாது. அவர்தான் என்னை ஒரு மாமனிதருக்கு அறிமுகம் பண்ணாரு”

 ”யாரு அந்த மாமனிதர்?”

 “கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர் திரு.பா.ராகவன்”

 ”அடேங்கப்பா, பா.ரா. வோட எல்லாம் பழக்கமா உங்களுக்கு?”

 “உண்மைல புஸ்தகம் வெளிவந்ததை விட பா.ரா. ஃபிரண்டுன்னு சொல்லிக்கிறதிலேதான் எனக்கு அதிகப் பெருமை. நான் சொன்னதும் என் நண்பர்கள், சொந்தக்காரங்க எல்லாம் பாராவா? பாராவா? ந்னு அதிர்ச்சிப் பைத்தியம் மாதிரி கேட்டுகிட்டே இருந்தாங்க”

 “பெரிய ஆளாச்சே… ரொம்ப ரிசர்வ்டா பழகுவாரோ?”

 “பா.ரா பத்தி சொல்றதுன்னா பாரா பாராவா எழுதலாம். ஒரே ஒரு பாரா சொல்றேன். பார்த்த உடனே பதினஞ்சு வருஷம் பழகின மாதிரி பேசறாரு. பெரிய எழுத்தாளர், தேசிய விருது வாங்கினவர், பத்திரிகைகள்ள எழுதறவர், சீரியல் சினிமாவுக்கெல்லாம் எழுதறவர்ன்னு ஒரு பந்தாவே கிடையாது. நான் எழுதறதை எல்லாம் நுணுக்கமா சுட்டிக்காட்டிப் பாராட்டினார்! அப்பதான் தெரிஞ்சது மணுஷன் இத்தனை நாளா நான் எழுதறதை எல்லாம் படிச்சிருக்கார்ன்னு! இந்த மாதிரி ஒருத்தர் நான் எழுதறதைப் படிக்கிறார்ங்கிறதே எனக்கு சாகித்ய அகாடமி வாங்கின மாதிரி இருந்தது. பாராட்டினதும் ஞானபீட விருது கிடைச்ச மாதிரி இருந்தது.”

 “உங்களை நல்லா கைட் பண்ணாரா?”

 “ஆமாம். ஆனா நறுக்குன்னு சுருக்கமா சொல்றார். அது ரொம்ப எஃபெக்டிவா இருக்கு. சில சமயம் கொஞ்சம் காரமா கூட சொல்வார். ஆனாலும் அது மொளகா பஜ்ஜி காரம் மாதிரி ரசனையா இருக்கும்”

 “உதாரணத்துக்கு?”

 “ஒரு கதாசிரியனோட ஸ்ட்ரெங்த்தே நேரேஷன் பண்ற சாமர்த்தியம்தான். நாம சொல்ல வர்ரதை நேரா சொல்லக் கூடாது. சொல்ற வாக்கியத்தைப் படிக்கிற போது சொல்ல நினைச்சது படிக்கிறவனுக்கு கம்யூனிகேட் ஆகணும்ன்னார்”

 “அப்படி ஒரு வாக்கியம் சொல்லுங்க?”

 “மழை பெய்யறப்போ ரெண்டு ரெண்டு தூறலுக்கு இடையில் பூந்து நனையாமயே வீட்டுக்கு வந்துட முடியும் அந்த ஆளாலே ந்னு சொன்னா உங்களுக்கு என்ன தோணும்?”

 “அந்தாளு ரொம்ப ஒல்லின்னு”

 “அதேதான் அவர் சொன்னது”

 “சூப்பரா சொல்லியிருக்காரே”

 “உனக்கே புரியுதுன்னா எவ்வளவு எஃபெக்டிவா சொல்றாருன்னு பாரு”

 “காலை வார்ரீங்க பாத்தீங்களா? ஏதோ காரம்ன்னீங்களே.. அது என்ன?”

 “விட மாட்டியே… இப்படி டிப்ளமேட்டிக்கா எழுதாத இடங்களைப் பத்தி ஒரு காமெண்ட் சொன்னாரு. அது சிக்ஸ் சிக்மால வர்ர வாய்ஸ் ஆஃப் கஸ்டமர் மாதிரி வெடுக்குன்னு இருந்தது”

 “அதான் என்னன்னு கேட்டேன்”

 “இந்த இடம் தினத்தந்தி தலைப்புச் செய்தி மாதிரி இருக்குன்னார்!”

 “பட்டப்பகலில் விபச்சாரம். அழகி கைது ங்கிற மாதிரியா?”

 “அடப்பாவி… அவரும் இதே உதாரணம்தான் சொன்னாரு”

 “இல்லையா பின்னே, குடிகாரனுக்கு வழி சொல்றவங்க டாஸ்மாக்கைத்தானே லேண்ட் மார்க்கா சொல்வாங்க”

 “ஏய்… இது கொஞ்சம் ஜாஸ்தி”

 “சரி.. சரி விடுங்க… அப்புறம்?”

 “அப்புறம் என்ன, கிழக்கு பத்ரி சார் எவ்வளவு பெரிய ஆள்…. அவர் நேரா வந்து ‘ஹாய்… ஐயாம் பத்ரி’ ந்னு சிம்ப்பிளா அறிமுகப்படுத்திகிட்டு கேஷுவலா ஒரு ஸ்டூல்ல உட்கார்ந்துகிட்டு பேசறாரு! அவர் ஒரு ஐஐடி ப்ராடக்ட். அதனாலே ஒரு எஞ்சினியர்ங்கிற வகைலயும் எனக்குப் பெருமையா இருந்தது”

 “சரி அதை விடுங்க. சிலப்பதிகாரம் இளங்கோ அடிகள் எழுதினது. அதை ரீ-மேக்தானே பண்ணியிருக்கீங்க?”

 ”இல்லை நிச்சயம் வித்யாசமா இருக்கும். அப்படி இல்லைன்னா கிழக்கு பதிப்பகம் பிரசுரமே பண்ண மாட்டாங்க”

 “என்ன வித்யாசம்?”

 “அதை நீ வாங்கிப் படிச்சிட்டு சொல்லு”

 “திட்டறதுக்காகவாவது வாங்கிப் படிப்பேன். அப்ப இனிமே உங்களை சிலப்பதிகார ஜவர்லால்ன்னு கூப்பிடற அளவுக்கு இருக்குமா?”

 “இல்லைன்னாலும் அப்படி கூப்பிடலாம். பொருத்தமாத்தான் இருக்கும்”

 “எப்படி?”

 “எப்பவும் என் இல்லத்தரசிதான் அதிகாரம் பண்ணுவாங்க. நான் அடங்கிப் போயிடுவேன். சிலப்ப நான் அதிகாரம் பண்ணுவேன். அதனாலே சிலப்ப அதிகார ஜவர்லால்ன்னு சொல்லலாம்”

 “என்ன கொடுமை சரவணன் இது. சரி…சரி… அது என்ன அதிகாரம் நீங்க சிலப்ப பண்றது?”

 “இந்த வீட்டில பாத்திரம் தேய்க்க மட்டும்தான் நான் இருக்கேனா? புடவைங்களையும் நாந்தான் துவைப்பேன்னு குரலை உசத்தி அதிகாரமா நான் சொன்னேன்னா அவங்க பெட்டிப் பாம்பா அடங்கிப் போயிடுவாங்க”

 “கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை அம்மணமா ஆடிச்சாம். முதல் கொடுமையோடவே நான் நிறுத்திகிட்டிருக்கணும். எனக்கு இது வேண்டியதுதான்”

விலை : ரூ.75/=

முகவரி : கிழக்கு பதிப்பகம்

எண்:33/15, எல்டாம்ஸ் சாலை

ஆழ்வார்பேட்டை –  சென்னை 600 018

தொலைபேசி : 044 – 43009701

வலைத்தளம் : www.nhm.in

இந்த நூல் பற்றிய வாசகர் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.