அது எவ்வளவு பெரிய சாதனை?

சித்திரம் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்கிற பழமொழி உங்களுக்குத் தெரிந்திருக்கும். தொடர்ந்து பயிற்சி இல்லாவிட்டால் பல விஷயங்கள் ஏறக்குறைய மறந்து போய் விடுகின்றன. அப்படி மறந்து போகிற பல விஷயங்களில் எழுதுவதும் ஒன்று.

 எத்தனை வருஷம் டச் விட்டுப் போனாலும் நீச்சலும் சைக்கிள் ஓட்டுவதும் மறப்பதில்லை. இந்த விஞ்ஞான ஆச்சரியம் குறித்து யாராவது ரிஸர்ச் செய்யலாம்.

 எழுத்தாளர் சுஜாதாவிடம் நான் கற்றதும் பெற்றதும் நிறைய உண்டு. எழுதுவதில் அவ்வப்போது கொஞ்சம் பிரேக் கொடுக்க வேண்டும் என்பது அவைகளில் ஒன்று. ஷிவ் கேரா கூட ‘When did you sharpen your axe last?’ என்று கேட்பார். தீட்டாமல் தொடர்ந்து வெட்டிக் கொண்டே இருந்தால் கோடாலி மொன்னையாகிக் கொண்டே போகும். மரமும் வெட்டுப்படாது, நம்முடைய சக்தியும் விரயம் (லாட்ஜ் டாக்டர்கள் சொல்லும் விரயமல்ல)

 எழுதாமல் இருந்த இந்த இடைவெளியில் நான் என் கோடறியைத் தீட்டிக் கொண்டிருக்கவில்லை. சரக்கு அடித்துக் கொண்டிருந்தேன். சரக்கு என்று நான் சொன்னது இசையை. (ஹி.. ஹி.. பின்னே? நான் எவ்வளவு பாப்புலர்! ஜவர்லாலே சரக்கு அடிக்கிறார் என்று பொதுமக்களுக்கு தப்புப் பாடம் கிடைத்து விடக் கூடாதே!) இசை என்னுடைய அடிக்‌ஷன். அதில் இறங்கிவிட்டால் இன்னும் ஒரு பெக், இன்னும் ஒன்றே ஒன்று என்று குடிகாரன் மாதிரி நிறுத்தாமல் போய்க் கொண்டே இருப்பேன். பத்து பாடல்கள் கொண்ட ஒரு குறுந்தகடு கொண்டு வந்தே ஆக வேண்டும் என்கிற வெறியுடன் செயல்பட்டுக் கொண்டிருந்தேன்.

 ரெடி பண்ணி விட்டேனா என்றால் இல்லை.

 சுருதியும் தாளமும் சரியாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆரம்பத்தில் என் அப்ஜெக்டிவாக இருந்தது. கொஞ்சம் கேட்சியான மெட்டுக்கள் என்று அந்த அப்ஜெக்டிவை அப்டேட் செய்து கொண்டேன். அதுவும் சரியாக வந்ததும் டெக்னிக்கல் சமாச்சாரங்களில் கவனம் போயிற்று. ஓவர்லோட் இல்லாமல் பாட்டைப் பதிவு செய்வது, ஒவ்வொரு கருவிக்கும் பொருத்தமான ஃப்ரீக்வன்ஸியைக் கண்டுபிடித்து ஈக்வலைஸரில் அவைகளைக் கொஞ்சம் தூக்கி வைப்பது, இடமிருந்து வலமாக டிரம்ஸ் எங்கே வைப்பது, பாஸ் எங்கே வைப்பது, அக்கம்பனிமெண்ட்களை எங்கே வைப்பது என்பதெல்லாம் பிறகு சேர்ந்து கொண்டன.

 இடமிருந்து வலம், மேலிருந்து கீழ் என்று ஸ்பெஷல் எஃபெக்ட்டுகள் பக்கம் கவனம் போயிற்று.

 பொறுமையிழந்த என் இல்லத்தரசி, “முழுக்கக் கற்றுக்கிட்ட பிறகுதான் முதல் சிடியே போடணும்ன்னா அதுல பெனிஃபிட் இருக்கு” என்று ஆரம்பித்தார்.

 “என்ன பெனிஃபிட்?” என்றேன் ஆசையாக.

 “டெக்னிக்கல் எக்ஸல்லன்ஸ். உத்திரவாதமான குவாலிட்டி”

 “இத.. இத.. இதத்தான் நான் எதிர்பார்த்தேன்”

 “இன்னொண்ணு கூடச் சொல்லணும்; அதை நீங்க எதிர்பார்த்திருக்க மாட்டீங்க”

 “என்னது?”

 “இசையில விற்பன்னரான பிறகுதான் உங்க சிடி வரப் போகுது. அப்ப உங்க குரலைக் கேட்கிறவங்களுக்கு ஒரு மிகப் பெரிய ஆச்சரியமும் இருக்கும்”

 “அதான் என்னன்னு கேட்டேன்?”

 “தொண்ணூத்தியாறு வயசான ஒருத்தர் தன்னம்பிக்கையோட பாடி ஒரு ஆல்பம் வெளியிடறது என்ன சாதாரண விஷயமா? எவ்வளவு பெரிய சாதனை அது?”

32 comments

  1. ஐப்பசி 3, 2012
    காலத்தை வென்ற ஜவர்லால் வாழ்க! இன்னும் புரட்டாசியே முடியவில்லை அதற்குள் ஐப்பசிக்கு சென்றுவிட்டார்.

  2. என்ன காணோமே உங்களைன்னு பார்த்தேன். இ ப்போ படிச்சப்போ ஸந்தோஷமாயிருந்தது. வாழ்த்துக்கள். எப்போது
    வெளியீடு?

  3. சார், சிங்கப்பூர் வந்து ஒன்றரை வருஷம் ஓடிடுச்சு. பதவி கூடியதால் பணி அதிகம்.இப்போதான் மறுபடியும் எழுத ஆரம்பிச்சுருக்கேன்.நேரம் இருக்கும்போது நம்ம சபை பக்கம் வந்து போங்க… 🙂

  4. காதலிக்க நேரமில்லையில் ஒரு டயலாக்: “ நீங்க படம் எடுக்கறதுக்குள்ள கிழவியாயிடுவேன்…”
    ” ஆகேன்… அழகான கலர்ல அவ்வையார் படம் எடுக்கறேன்…”
    நாங்களும் அழகான ராகமாலிகையில் வெங்கடேச சுப்ரபாதம் கேட்டுட்டுப் போறோம்….

  5. ஹ்ம்ம். இந்த பெரிய சிந்தனையாளர்களே இப்படிதான்.
    எத வச்சு இப்படி சொல்றேன்னா, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் இப்படிதான், அவர் பெரிய சயன்டிஸ்ட் மற்றும் கல்லூரி விரிவுரையாளராக அறியபட்டிருந்த நேரத்தில – நோபல் பரிசெல்லாம் வாங்கினதுக்கு அப்புறமும் – வயலின் ( நல்லா! )வாசிக்க கத்துக்கிட்டு கச்சேரி எல்லாம் செஞ்சதா சொல்றாங்க.

    http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com

  6. அன்புள்ள திரு ஜவஹர்,
    இந்த வார வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்றுள்ளேன்.

    உங்கள் வலைதளத்தை நாளை வலைச்சரத்தில் குறிப்பிடப் போகிறேன். (9.10.2012).

    நீங்கள் எத்தனையாவது தடவையாக வலைச்சரத்தில் இடம் பெற்றிருக்கறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

    என்னுடைய மனம் கவர்ந்த எழுத்தாளர் நீங்கள் என்பதில் பெருமை கொள்ளுகிறேன்.

    வருகை தரவும், ப்ளீஸ்!

      1. உங்களின் விசிறி ஸார் நான்!
        அதுவுமில்லாமல் வலைச்சரம் விமரிசனத்திற்கு அல்ல. நல்ல எழுத்துக்களை உலகுக்குக் காட்ட.

        உங்களின் சுஜாதாவுடன் பேசினேன் – மிக அருமை!

        வித்தியாசமான எழுத்து என்று உங்களை பற்றி எழுதி இருக்கிறேன்.

        பாருங்கள். படித்துவிட்டுச் சொல்லுங்கள்.

        உங்கள் சாதனையும்

      2. வணக்கம் ஜவஹர் ஸார். உங்கள் எழுத்துக்களின் விசிறி நான்.

        வலைச்சரம் விமரிசனத்திற்கு அல்ல. நல்ல எழுத்துக்களை உலகிற்கு காட்ட.

        உங்கள் எழுத்துக்களை விமரிசனம் செய்யக் கூடிய தகுதி எனக்கு இல்லை.
        எவ்வளவு பெரிய சாதனை பன்னி இருக்கிறீர்கள்?
        உங்களை விமரிசனம் செய்வதா?

  7. ஹ்ம்ம். இந்த பெரிய சிந்தனையாளர்களே இப்படிதான்.
    எத வச்சு இப்படி சொல்றேன்னா, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் இப்படிதான், அவர் பெரிய சயன்டிஸ்ட் மற்றும் கல்லூரி விரிவுரையாளராக அறியபட்டிருந்த நேரத்தில – நோபல் பரிசெல்லாம் வாங்கினதுக்கு அப்புறமும் – வயலின் ( நல்லா! )வாசிக்க கத்துக்கிட்டு கச்சேரி எல்லாம் செஞ்சதா சொல்றாங்க.

    http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.in

  8. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    திரு. ரஞ்ஜனி நாராயணன் அம்மா அவர்களின் அறிமுகம்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_9.html) சென்று பார்க்கவும்…

    நன்றி…

  9. ஜவஹர் ஸார்! பண்ணி என்று இருக்க வேண்டும். என் கருத்துரையை எப்படி டிலீட் செய்வது என்று தெரியவில்லை.

    மன்னிக்கவும். மன்னிக்கவும்!

    அன்புடன்,
    ரஞ்ஜனி

எதுவா இருந்தாலும் எழுதுங்க!