போலிச் சாமியார்களுக்கு சில யோசனைகள்

போதனை செய்கிற போது மொட்டைத் தலையும், மழுங்க சிரைத்த முகமுமாக வந்து விட்டு, ஜில்பான்ஸ் வேலைகளுக்காக விக், மீசை எல்லாம் வைத்துக் கொள்ளலாம். உடையையும் லுங்கி முண்டா பனியன் என்று மாற்றிக் கொள்ளலாம். இதனால்,

வீடியோ எடுக்கப் பட்டால் அது நான் இல்லை என்று சொல்லலாம். ஜாடை இருப்பது தெரிந்தால் அவன் என் தம்பி என்று சொல்லலாம்.

சொற்பொழிவின் போதே இளம் பெண்கள் புடை சூழ, அவர்களின் பணிவிடைகளோடு மேடையில் தோன்றலாம். அவ்வப்போது அவர்களைச் செல்லமாகத் தட்டி ஆசி சொல்லலாம். இதனால்,

வீடியோ பார்க்கும் போது பெரிய வித்யாசம் எதுவும் தெரியாது.

படுக்கையில் கொசுவலை கட்டிக் கொள்வது மிகவும் நல்லது. கொசுவும் வராது வீடியோவிலும் ஒரு இழவும் விழாது.

படுக்கப் போகும் போது பளிச்சென்று மேக்-அப் போட்டுக் கொள்ளலாம். ஒவ்வொரு ஜில்பான்ஸ் செயலுக்குப் பிறகும் ஒரு முறை உரக்க “கட்” என்று சொல்லலாம். இதனால்,

சினிமாவுக்கோ, சீரியலுக்காகவோ எடுக்கப் பட்டது என்கிற பிரமையை உண்டாக்கலாம்.

அவ்வப்போது ‘இன்பவேதனாயோகா’, ‘இந்திரியச்செக்லோயோகா’,’இளம்பென்சிள்மிஷ்யோகா’,’இச்சுத்தாயோகா’ என்று தேங்காய் சீனிவாசன் பாணியில் உளறிக் கொண்டே இருக்க வேண்டும். இதனால்,

ஏதோ விசேஷமான யோகப் பயிற்சி தந்து கொண்டிருந்ததாகக் கூறலாம்.

ஆசிரமத்துக்குள் வரும் பெண்கள் எல்லாருமே ஆம்பிளை உடையில், மீசை ஒட்டிக் கொண்டுதான் வரவேண்டும் என்று சொல்லி விட வேண்டும். யாருக்கும் சந்தேகம் வராது, வீடியோ எடுக்கிற ஆர்வமும் வராது.

தடக்கென்று பூமிக்குள் போகிற கட்டில், ஜன்னல் ஓரங்களில் பிடரியில் அறைகிற செட் அப், காமிராக்களை செயலிழக்கச் செய்கிற சக்தி வாய்ந்த காந்த மண்டலங்கள், வெளிப்பக்கம் முழுக்க மிளகாய்த் தூளை காற்றில் தூவி விடுதல் உள்ளிட்ட யுக்திகள் வீடியோ எடுக்கிறவர்களை டென்ஷன் செய்யும்.

ரோஜர் மூர் படம் போல ஆசிரமத்தைச் சுற்றி பதினெட்டடி அகலமும் இருபதடி ஆழமும் இருக்கும் அகழி அமைத்து அதில் முதலைகளை நீந்த விட்டு பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

ஆசிரமத்தில் எப்போதும் ஆகாத சுருதியில், கர்ண கொடூரமான குரலில் ஒருவரை பஜனைப் பாடல்களைப் பாடச் செய்வது அந்தப் பக்கம் தலை காட்டவே பயப்பட வைக்கும்.

அரசாங்கத்துக்கு யோசனைகள் நாளைக்கு….

24 comments

  1. 🙂

    // படுக்கப் போகும் போது பளிச்சென்று மேக்-அப் போட்டுக் கொள்ளலாம். ஒவ்வொரு ஜில்பான்ஸ் செயலுக்குப் பிறகும் ஒரு முறை உரக்க “கட்” என்று சொல்லலாம். இதனால்,

    சினிமாவுக்கோ, சீரியலுக்காகவோ எடுக்கப் பட்டது என்கிற பிரமையை உண்டாக்கலாம். //
    Asathal…

  2. படுக்கப் போகும் போது பளிச்சென்று மேக்-அப் போட்டுக் கொள்ளலாம். ஒவ்வொரு ஜில்பான்ஸ் செயலுக்குப் பிறகும் ஒரு முறை உரக்க “கட்” என்று சொல்லலாம். இதனால்,

    சினிமாவுக்கோ, சீரியலுக்காகவோ எடுக்கப் பட்டது என்கிற பிரமையை உண்டாக்கலாம்.

    அவ்வப்போது ‘இன்பவேதனாயோகா’, ‘இந்திரியச்செக்லோயோகா’,’இளம்பென்சிள்மிஷ்யோகா’,’இச்சுத்தாயோகா’ என்று தேங்காய் சீனிவாசன் பாணியில் உளறிக் கொண்டே இருக்க வேண்டும். இதனால்,

    இவை இரண்டும் அருமையான யோசனைகள்; கட்டாயம் மிச்சசொச்சக் காவிகள் பின்பற்றக்கூடும்.

  3. //போதனை செய்கிற போது மொட்டைத் தலையும், மழுங்க சிரைத்த முகமுமாக வந்து விட்டு, ஜில்பான்ஸ் வேலைகளுக்காக விக், மீசை எல்லாம் வைத்துக் கொள்ளலாம். உடையையும் லுங்கி முண்டா பனியன் என்று மாற்றிக் கொள்ளலாம்//

    காலம் காலமா இருக்கிற மச்சம் வைக்கிற டெக்னிக்கே போதுமே 🙂

  4. ///ஆசிரமத்துக்குள் வரும் பெண்கள் எல்லாருமே ஆம்பிளை உடையில், மீசை ஒட்டிக் கொண்டுதான் வரவேண்டும் என்று சொல்லி விட வேண்டும். யாருக்கும் சந்தேகம் வராது, வீடியோ எடுக்கிற ஆர்வமும் வராது/////

    சாமியர் மீசை வெச்ச ஒருத்தரோட ஜில்பான்ஸா இருந்தாருன்னாலும் மீடியாவுக்குக் கொண்டாட்டம்தாங்காணும்!

    1. ஐய்யய்யோ-ஆசிரமமா… அதெல்லாம் ரொம்ப சிரமம்… நான் வரல்லை இந்த ஆட்டத்துக்கு, எனக்கு சுரேந்திரன் யாருன்னே தெரியாது…

  5. யோசனைகளெல்லாம் ரொம்ப பளிச் பளிச் என்று இருக்கிறது. யாராவது ஆசிரமம் ஆரம்பித்து விடப் போகிறார்கள்

  6. ரகளை.

    இந்தப்பக்கம் பக்தி அந்தப்பக்கம் ஜல்சா என்று முதலிலேயே சொல்லிவிடுவது தான் உசிதமென்று படுகிறது. யாருக்கு என்ன வேண்டுமோ அதைத் தேடலாம் பாருங்கள். கடைசியில் ராமா என்றார் போதுமாமே?

  7. ஆஸ்ரமம் ஆரம்பிக்கும்போதே ஓப்பன் ஹோம் மாதிரி சின்னதா ஒரு சாம்பிள் காமிச்சுட்டா….. ‘இங்கெல்லாம் இப்படித்தான்’ ன்னு பழகிய சேதியாப் போயிருமே.

    ஓட்டுப்போட்டாச்சு.

    1. நன்றி துளசிஜி, நான் நினைச்சதும் அதுதான். பேசி சம்பாதிக்கிறதுன்னு ஆயிட்டா, அதுக்கு ஆன்மிகக் கலர் தர்றதுக்கு பதிலா கன்சல்டன்சி கலர் தரலாமே… அவங்க இன்னின்னதுதான் பண்ணனும்ன்னு யாரும் கட்டாயப் படுத்த முடியாது.

  8. ஏங்க……நீங்க எங்கே இருக்கீங்க? ஏன்னு கேக்குறீங்களா? இல்ல…..ஒரு முறை உங்கள (தலையில) தொட்டு ஒத்திக்கலாமேன்னு…….
    எப்படிங்க….. இப்படி பின்னி பெடலெடுக்குறீங்க? மேற்கோள் காட்டினா மறுமொழியே ஒரு பதிவாயிடுமுங்கிறதால இப்படியே எஸ்கேப்!!
    மத்தபடி….பதிவு சும்மா சூப்பர்!
    http://padmahari.wordpress.com

  9. // எப்போதும் ஆகாத சுருதியில், கர்ண கொடூரமான குரலில் ஒருவரை பஜனைப் பாடல்களைப் பாடச் செய்வது // எங்கள் ஆசிரமத்தில் இந்த போஸ்ட் உங்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை எங்கள் ஏஜண்ட் பீரு கபோதிதா உங்களிடம் நேரில் வந்து தெரிவிப்பார்…

    1. முகமூடிண்ணா, இதே ஆபர் எனக்கு பல ஆசிரமத்துலேர்ந்து வந்துகிட்டு இருக்கு. நம்ம சங்கீதம் உலகப் பிரசித்தி ஆயிடிச்சு போல இருக்கு!!

  10. ஜி, இந்த ஐடியாசுக்கெல்லாம் உடனே
    காப்புரிமை வாங்கிடுங்க, இல்லை
    (ஆ)சாமிகளெல்லாம் உபயோகப்படுத்த
    தொடங்கிடப் போறாங்க!
    அன்புடன், எழிலரசி பழனிவேல்

எதுவா இருந்தாலும் எழுதுங்க!