இது பொதுவழி அல்ல

இப்போதெல்லாம் தினமும் காலை ஒரு மணி நேரமும், மாலை ஒன்றரை மணி நேரமும் டிரைவிங் செய்ய வேண்டியது அவசியமாக இருக்கிறது. காலை ஆறே காலிலிருந்து இரவு எட்டரை மணி வரை வேலை என்று டிரைவர்களைக் கூப்பிட்டால் நான் சம்பாதிப்பதில் பாதியை சம்பளமாக்க் கேட்கிறார்கள்.

“கத்திப்பாரா வந்தா வர்ரீங்க? அது வேஸ்ட்டு சார். போரூர், பூந்தமல்லி எல்லாம் சாயந்தரத்திலே ஒரே கஞ்செஷனா இருக்குமே?”என்று துக்கம் விசாரித்தார் நண்பர் ஒருவர்.

“வேறே எப்படிய்யா வர்ரது? ஹெலிகாப்டர்ல ஏறித்தான் வரணும்”

“முக்கால் மணி நேரத்தில குரோம்பேட்டைல இருந்து மண்ணூர் போய்ச் சேர்ர மாதிரி அருமையான ரூட் இருக்கு. நான் கூட்டிட்டுப் போறேன்” என்று வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டார்.

திருனீர்மலை ரோட்டைப் பிடித்து சிட்டி பைபாஸுக்கு அடியில் போகும் சர்வீஸ் ரோட்டைப் பிடித்தோம். ஏகப்பட்ட பள்ளங்கள். வண்டி எப்போதுமே இட்தோ அல்லது வலதோ சாய்ந்து முப்பத்தைந்து டிகிரியிலேயே போயிற்று. ரோட்டின் இறுதியில் இடப்புறம் திரும்பி முதலில் குன்றத்தூர். தேர்மூட்டி வந்த்தும் ஒரு இட்து உடனே வலது. கொஞ்ச தூரம் போனதும் வினை ஆரம்பமாயிற்று.

குழாயடியில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த சில பெண்களை ஹாரன் அடித்து டென்ஷன் செய்து வலப்புறம் ஒரு ஆட்டோ மட்டுமே போக முடிந்த தெருவுக்குள் புகுந்தோம்.

“என்னய்யா இது?” “ஜஸ்ட் நாலு கிலோமீட்டர்தான் சார் இப்படி. அதுக்கப்புறம் ரோடு சூப்பரா இருக்கும்”

ஆனால் சரியாக ஐந்தாவது கிலோ மீட்டரில் ஐந்தரை அடி நீள் சாம்பல் குவியல் ஒன்று புகைந்து கொண்டிருக்க அதை உரசுகிற மாதிரி போனோம்.

“என்னத்தைய்யா வச்சி எரிச்சிருக்காங்க?”

“இவ்வளவு நீளமா எது இருக்கும். மனிஷனைத்தான் சார் எரிச்சிருக்காங்க”

“ஐய்ய்ய்யோ… இது காட்டுமிராண்டிங்க வாழற ஏரியாவா?”

“காட்டுமிராண்டியோ நாட்டுமிராண்டியோ, செத்தா எரிக்கத்தான சார் வேணும்?”

“அய்ய்ய்யோ… அப்ப இது சுடுகாடா? சுடுகாடு வழியா எல்லாம் ஏன்ய்யா வர்ரே?”

“வழியைத் தெரிஞ்சி வெச்சிக்கங்க சார். அவசரத்துக்கு உபயோகமா இருக்கும்”

“எது? அவசரமா செத்துப் போகணும்ன்னா உபயோகமா இருக்குமா? அதுக்கு எனக்கு ஏன்ய்யா வழி தெரியணும்?”

 “அடச்சே… ஷார்ட் ரூட்டு தெரிஞ்சி வெச்சிக்கங்கன்னு சொன்னேன் சார்”

கொஞ்ச தூரத்தில் செம்பரம்பாக்கம் ஏரிக்குப் பக்கவாட்டில் இருக்கும் ரோடு வந்த்து. ‘இது பொது வழியல்ல’ என்று எழுதியிருந்த கேட் வழியாக சொகுசாகப் புகுந்த்து வண்டி.

“வாட்ச் மேன் வந்து திட்டப் போறாருய்யா”

“வாட்ச் மேன் அங்க என்ன பண்றாரு பாருங்க”

செம்பரம்பாக்கம் மிசை பகலினிலே, சித்தாளிளம் பெண்களுடனே தோணி ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தவர்தான் வாட்ச் மேனாம்! ரோடே காலியாக இருக்க சுதந்திர தினத்துக்கு வந்த அயல்நாட்டுப் பிரதமர் மாதிரி ஜபர்தஸ்தாகப் போனோம். அதற்குப் பிறகு ஒரு கப்பி ரோட்டில் இசகு பிசகாகப் பார்க் செய்யப்பட்டிருந்த லாரிகளை கவனமாக்க் கடந்தோம். காலைக் கடன் பண்ணிக் கொண்டிருந்த சில லாரி டிரைவர்கள் மரியாதையாக எழுந்த்து கொண்டு பீடிப்புகையை முதுகுப்பக்கம் திரும்பி ஊதினார்கள். ஒருவழியாக பெங்களுர் ஹைவேயில் வந்து சேர்ந்தோம்.

ஒன்றும் பிரமாதமான சாதனை இல்லை. மாங்காடு வழியாக வந்து மதுரவாயல் பைபாஸ் வந்து வருவதை விட மூன்று கிலோ மீட்டரும் ஐந்து நிமிஷமும் மிச்சம்.

குன்றத்தூர், மாங்காடு ரூட்டை ஸ்டாண்டர்டைஸ் செய்து கொண்டு விட்டேன். வழியில் பண்பலை வானொலிதான் துணை. தினமும் கிளிமாஞ்சாரோவை நாலுதரமும், காதல் அணுக்கள் பாட்டை மூன்று தரமும், பாணா காத்தாடி பட்த்தில் யுவன் சங்கர் ராஜா அப்பாவுக்குக் கொஞ்சமும் சளைக்காத சுஸ்ருத்யிலும், அதீத பாவத்துடனும் பாடும் பாட்டை மூணு தரமும் கேட்கிறேன்.

எல்லா ஸ்டேஷனிலும் சென்னையின் பெஸ்ட் எஃப் எம் என்கிறார்கள். சந்தனா, விஷ்னு, தேவா உள்ளிட்ட ரேடியோ ஜாக்கிகளின் குரல் பழகி விட்ட்து.

டிராஃபிக் அலர்ட் என்று அவர்கள் சொல்லும் டிப்கள் பெரிய ஜோக்.

“கத்திப்பாராவிலேர்ந்து கிண்டி வரைக்கும் ஜாம் ஆயிருக்கு” என்று அவர்கள் சொல்கிற போது அறுபது கிலோமீட்டர் வேகத்தில் கிண்டிப் பக்கத்தில் இருந்து வண்டிகள் வந்து கொண்டிருந்தன.

7 comments

  1. சார்,
    சிரிச்சு முடியலை!
    நான் கூட ஒரு புது ரூட்டு சொல்லலாம்ன்னு நினைச்சேன்.. ஆனா அது தாம்பரம் வந்து சுத்தி தான் நீங்க குரோம்பேட்டை வரணும், ஆனா ரோடு க்ளியரா ஹைவே மாதிரி இருக்கும். முடிஞ்சா ட்ரை பண்ணவும். மவுண்ட் பூந்தமல்லி ரோட்டில் அய்யப்பந்தாங்கலில் இருந்து கிண்டி வரும் வழியில், ராமச்சந்திராவை ஒட்டிய லெஃப்டில் திரும்பினால் கொஞ்சூண்டு கஷ்டமான ரூட்டில் சுமார் 3 நிமிஷம் ஓட்டினால் ஒரு மாபெரும் ரிங் ரோடு வரும் அது நேரே தாம்பரம் கொண்டு வந்து விட்டுடும். வந்து பாருங்கள் ஒருவாட்டி.. ரோடு இப்போ எப்படி இருக்குன்னு எனக்கு தெலியலேது.. ஆனா ஒன்லி 15 மினிட்ஸ் தான் தாம்பரத்துக்கு.

  2. // பாணா காத்தாடி பட்த்தில் யுவன் சங்கர் ராஜா அப்பாவுக்குக் கொஞ்சமும் சளைக்காத சுஸ்ருத்யிலும், அதீத பாவத்துடனும் பாடும் பாட்டை மூணு தரமும் கேட்கிறேன்// ஒய் ப்ளட்? ஸேம் ப்ளட்! இந்தப்பாட்டை கேட்டுட்டுத்தான் என் லேட்டஸ்டு போஸ்டுல ஒரு உவமையா யூஸ் பண்ண முடிஞ்சது. முடிந்தால் வந்து கமெண்டவும்! :)))

  3. ஒவ்வொரு நாளும் ஒரு பயணக்கட்டுரை எழுதி, பதிவிடலாம் போலிருக்கு. கூகிள் மாப்பில், உங்கள் இருப்பிடம் முதல், அலுவலகம் வரை உள்ள வழியை, தெருக்களை, நன்றாக ஜூம் செய்து பார்த்து, முடிந்தால் ஒரு பிரிண்ட் எடுத்து கார் கிளவ் கம்பார்ட்மெண்டில் வைத்துக்கொள்ளவும். உபயோகமாக இருக்கும்.

  4. குறுக்கு வழின்னாலே அது பிரச்சனை தான் என்பதை நகைச்சுவையாக புரிய வைத்துவிட்டீர்கள்…. ஹெலிகாப்டரில் ஆரம்பித்து, ஃபோர் வீலரை டு வீலராக ஓட்டி, எங்கெங்கோ போய் ஒரு வழியாக மைய்யமாக ஒரு வழியை பிடித்தே விட்டீர்கள்… பண்பலையில் போக்குவரத்து நிலைமைகள் வேறு தருகிறார்களா… அதுவும் வானிலை அறிக்கை மாதிரி இருக்கிறதா?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!