என்னைக் கொஞ்சக் கொஞ்ச வா மழையே….

போதும் போதும் என்கிற அளவுக்கு மழை பெய்து கொண்டிருக்கிறது.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே

எடுப்பதூம் எல்லாம் மழை

இது கெடுப்பதா எடுப்பதா?

மேட்டுர் டாம் ஃபுல், சாத்தனூர் டாம் ஃபுல், கல்லணை ஃபுல்…. ஏன் வைகை வரகனூர் டாம்கள் கூட ஃபுல்லாகி இருக்கும். பாலாற்றில் தண்ணீர் ஓடுகிறதாம். அந்த காணற்கரிய காட்சியைக் காண விரும்புகிறவர்கள் ஒருநடை வேலூர் அல்லது ஆம்பூர் போய் வந்து விடுங்கள். ஒரு காலத்தில் பாலாற்றுக்குள்ளேயே ப்ளாட் வாங்கினவர்களை எனக்குத் தெரியும்!

சென்னையில் புழலேரி, செம்பரம்பாக்கம் ஏரி மயிலேறி மரமேறி எல்லாம் ஃபுல்! மழைக்காலத்துக்கு முன்னரே ஏரிகளை ஆழப்படுத்தியிருந்தால் வீணாகிற நீரையெல்லாம் கூட சேமித்திருக்கலாம் என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள். அவர்கள் வருஷா வருஷம் சொல்கிறார்கள். கேட்க வேண்டியவர்கள் கேட்டால்தானே?

மழை பெய்தால் வெள்ளம், வெயிலடித்தால் வறட்சி என்றே வைத்திருப்பது நம் அரசாங்கங்களின் தேசிய குணம். தண்ணிர்ப்பஞ்சம் வந்ததும் அண்டை மாநிலங்களைக் குறை கூற, மிரட்ட, உண்ணாவிரதம் இருக்க, கல்லெறிய, பஸ்களை நிறுத்த நிறையப் பேர் தயார். ஏரிகளை ஆழப்படுத்தவும், குளங்களைத் தூறெடுக்கவும், மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தவும் உண்ணாவிரதம் இருக்கவும், மனிதச் சங்கிலி நடத்தவும், மெளன ஊர்வலம் போகவும் யார் இருக்கிறார்கள்?

ஒருலட்சம் கோடி இருந்தால் இந்திய நதிகளை இணைக்க முடியும் என்று சொன்ன போது என்னுடைய ஒரு கோடி எப்போது கேட்டாலும் ரெடி என்றார் ரஜினி. 1.76 லட்சம் கோடியை முழுங்கி ஏப்பம் விட்டாயிற்று. முழுங்கினது யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்று வீர அறிவிப்புச் செய்திருக்கிறார் பிரதமர். நாட்டுப்பற்றில் எனக்கு மெய் சிலிர்க்கிறது. உங்கள் ஏரியாவில் யாராவது பதுங்கி இருந்தால் காவல்துறைக்கு உடனடியாகத் தகவல் கொடுங்கள். யார் என்று தேடுவதற்கு ராணுவத்தை அனுப்பினாலும் அனுப்பலாம்!

தண்ணீர் இல்லாவிட்டால் மட்டும்தான் மின்வெட்டு என்று யாரும் சந்தோஷப்பட வேண்டாம். நிலக்கரி ஸ்டாக் கம்மியாக இருக்கிறதாம். ரிஆர்டர் லெவலில் இருக்கும் போது ஆர்டர் செய்யாமலிருந்தார்களா அல்லது அதை அப்ரூவ் செய்ய நேரமின்றி சம்பந்தப்பட்டவர்கள் ஏக பிஸியாக இருக்கிறார்களா?

7 comments

  1. சார்! ” இந்திய அரசு அந்த 1 லட்சம் கோடி திருடனை தேடி கண்டுபிடிக்க அமெரிக்க சாட்டிலைட் உதவி கேட்டிருக்கிறதாம்” பர்காக்கா சொன்னதாக ராடியா ஆன்ட்டி அவரிடம் பேசி ஒட்டு கேட்கப்பட்டிருக்கிறது. ஹி ஹி ஹி

  2. //மழை பெய்தால் வெள்ளம், வெயிலடித்தால் வறட்சி என்றே வைத்திருப்பது நம் அரசாங்கங்களின் தேசிய குணம். //

    இதயம் கனக்கிறது,இந்த நிலை கெட்ட மனிதர்களை நினைக்கயில்.

  3. உங்கள் இணையத்தை விரும்பி படிப்பவர்களில் நானும் ஒருவன்
    உங்கள் சொந்த கருத்துக்களை எழுத்தில் வடிக்கும் முறை
    எனக்கு ரொம்பவும் பிடிதிருக்கு ……
    என்னிடமும் ரொம்பவும் கருத்துக்களும் எண்ணங்களும் உண்டு
    ஆனால் எழுத்தில் தரும் அளவுக்கு தகுதி இல்லை
    உங்கள் இணையமும் நீங்கள் சார்ந்த அனைவரும் மேலும் வளர
    எனது வாழ்த்துக்கள் .

  4. //”உங்கள் ஏரியாவில் யாராவது பதுங்கி இருந்தால் காவல்துறைக்கு உடனடியாகத் தகவல் கொடுங்கள். யார் என்று தேடுவதற்கு ராணுவத்தை அனுப்பினாலும் அனுப்பலாம்”//

    :))))

  5. //உங்கள் ஏரியாவில் யாராவது பதுங்கி இருந்தால் காவல்துறைக்கு உடனடியாகத் தகவல் கொடுங்கள்.

    உங்கள் ஏரியாவில் பெரிய ஏரியையே பதுக்கி வச்சிருக்காங்கன்னு கேள்வி…. 🙂

  6. //”உங்கள் ஏரியாவில் யாராவது பதுங்கி இருந்தால் காவல்துறைக்கு உடனடியாகத் தகவல் கொடுங்கள். யார் என்று தேடுவதற்கு ராணுவத்தை அனுப்பினாலும் அனுப்பலாம்”//

    ஜனஹர்,

    ஒங்க பேச்சை நம்ம்ம்ம்ம்ம்பி எங்க ஏரியா காவல்துறைக்கு தகவல் கொடுத்தேன்..(போனில் தான் )

    என்னமோ தெரியலே அந்த பக்கம் ஒரே கோபம்..

    “என்ன விளையாடுறீங்களா! Nuisance கேஸ் இல் உங்கள உள்ள போட்டிடுவோம் ஜாக்கிரதை!” என்று கத்தறாங்க!

    என்ன பண்ணட்டும்?

    இப்படிக்கு,
    Ganpat
    கோபாலபுரம்
    சென்னை.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!