சுஜாதாவிடம் கற்றதும் பெற்றதும்

நடுநிசி நாய்கள் படத்தின் விளம்பரத்தில் சொல்லப்படும் எச்சரிக்கை ஒருநாள் கிரிக்கெட்டின் கடைசி ஓவருக்கும் பொருந்தும்.

கடைசி ஓவர் வரும்போது நிஜமாகவே நாற்காலியின் முனைக்கு வருகிறவர்களைப் பார்க்க முடிந்தது. சிலர், முதல் விமானப் பயணத்தின் டேக் ஆஃப் போலவும், சிலர் பேதிக்கு சாப்பிட்ட மாதிரியும் முகத்தை வைத்திருந்தார்கள். கடைசிப்பந்து வீசப்படும்போது லட்சுமி வெடிக்கு நெருப்பு வைத்துவிட்டுக் காத்திருக்கிற மாதிரி பல்லைக் கடித்து, காதைப் பொத்தி அரைக்கண் மூடி பலபேர் பார்த்தார்கள்.

வீட்டில் இருக்கிற பெண்கள், இளம் பெண் பால் பலாத்காரத்துக்கு ஆளாகிற காட்சி மாதிரி கடைசி ஓவரைத் தவிர்த்தார்கள்.

“பார்த்துட்டு என்ன ஆச்சுன்னு எனக்கு சொல்லிடேன்” என்று சொல்லி தலைகாணியில் குப்புறப் படுத்து காதை மூடினார்கள்.

கிரிக்கெட்டை சூதாட்டமாக்கியதாலும், வருஷம் பூரா ஏதாவது ஒரு பெயரில் ஆடிக் கொண்டே இருப்பதாலும் அதன்பால் நாட்டமில்லாமல் இருந்தேன். அதைவிட நமிதாவின் குலுக்-தளுக் நடனங்கள் மேல் என்கிற ஐடியாவில் இருந்தேன். நேற்று வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் முதல் பாதியை சர்வ சிரத்தையாகப் பார்த்துக் கொண்டிருந்ததால் தடிக்க முடியாதது மட்டுமில்லை, நானும் பார்த்துத் தொலைக்க வேண்டியிருந்தது. முதல் பாதியைப் பார்த்து விட்டதால் கடைசி பத்து ஓவர்கலைப் பார்த்துத் தொலைக்க வேண்டியிருந்தது.

பார்த்திருக்க வேண்டிய ஆட்டம்தான்.

இந்தியாவால் ஜெயிக்க முடியாததற்கு என் அஞ்ஞானத்தில் உதித்தது இரண்டு காரணங்கள். அவர்களை விட நம் ஆட்கள் அதிக டென்ஷனில் இருந்தார்கள் என்பது முதலாவது.

கடைசி ஓவருக்கு போடவேண்டிய பவுலர் ஏற்கனவே அவரது கோட்டாவை முடித்து விட்டிருந்தது இரண்டாவது.

கிரிக்கெட் அபிமானிகள் சண்டைக்கு வரலாம்.

********************************************************************************************************

சுஜாதாவின் நினைவு நாள் என்பது கொஞ்சம் லேட்டாகத்தான் ஞாபகம் வந்தது.

அவரிடம் நான் கற்ற சில பாடங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

புத்திசாலித்தனமும், நகைச்சுவையும் நல்ல எழுத்தின் அடையாளங்கள் என்பது முதல் பாடம். முடிந்தவரை சுருக்கமாக எழுத வேண்டும் என்பது அடுத்தது. அநாவசியமான காண்ட்ரவர்ஸிகளில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பது இன்னொன்று. இது பிடிக்கும், இது பிடிக்காது என்கிற ட்யூவாலிடீஸிலிருந்து விலகி, எல்லாவற்றையும் படிக்க வேண்டும் என்பது ஒருபாடம். (ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பேச்சுக்களிலும், எழுத்திலும் அவருக்கு நாட்டமில்லை என்று அம்பலம் பதில்களில் படித்தேன். இது எனக்கு ஒரு ஆச்சரியம். இதைப் பற்றி அப்புறம் பேசலாம்)

*******************************************************************************************************

இந்தவார ஆனந்த விகடனில் படித்த ஒரு ஜோக் உங்களுடன் பகிரத் தகுதியானது :

“மாப்பிள்ளை டிவியில எல்லாம் வராரு”

“அடேடே… எந்த நிகழ்ச்சியிலே?”

“குற்றம், நிஜம் நிகழ்ச்சிகள்ளே குத்தவெச்சி உட்கார்ந்திருப்பாரே, பார்த்ததில்லை?”

*******************************************************************************************************

3 comments

  1. நானும் பார்த்ததில்லை – இருந்தாலும் உங்க அடைமொழியை வச்சு சொல்றேன்; நமிதா நடனத்தை இத்தனை சாதாரணமா சொல்லலாமா? நியாயமா? எத்தனை க்ரிகெட் ஆடினாலும் ஒரு நமிதா நடனத்துக்கு ஈடாகுமா?
    சுஜாதா நினைவு நாள்னு சினிமா டிராமா பத்திரிகை உலகத்துல எதுவும் செய்யலியா? சுஜாதா கிட்டே நான் படிச்சது கொக்கிகள். கல்கி, தமிழ்வாணன், இந்துமதி, பாக்கியம் ராமசாமினு நான் படிச்சவங்கள்ளாம் ஒவ்வொருத்தரும் விதமா அடையாளம் சொல்ற அளவுக்குக் கொக்கி எழுதப் பழகியிருந்தாங்க. சுஜாதா கொக்கி கொஞ்சம் ஷைனிங்கா இருக்கும்.

  2. நல்ல பதிவு. நாம் ஜெயித்து விடுவோம் என்று பார்க்கவில்லை. ஆனால் நம்மையும் திணறடித்து விட்டார்கள் போலும். ஆனால் நாம் எந்த அணியையும் பெரிய அணியாக ஆக்கி விடுவோம்.
    நானும் சுஜாதாவின் தீவிர ரசிகன்.
    வாழ்த்துக்கள்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!