வேங்கை சினிமா விமர்சனம்

வேங்கை படம் தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றம்தான்.

நானும் தனுஷ் ரசிகன்தான். என் எதிர்பார்ப்புகள் எல்லாமே பொய்த்துப் போயின. வழக்கமாக இருக்கிற மாதிரி தனுஷுக்குப் பொருந்துகிற கேரக்டர் இல்லை. வழக்கமான சுவாரஸ்யமான திரைக்கதை இல்லை. பாடல்கள் எல்லாமே சுமார் ரகம். எல்லாவற்றையும் விடப் பெரிய சோகம் ஒன்று இருக்கிறது. தனுஷ் படத்தில் காமெடி ரொம்ப சிறப்பாக இருக்கும். இந்தப் படத்தில் காமெடிதான் மிகப் பெரிய மைனஸ்! டைரக்டர் காமெடிக் காட்சிகளைப் பார்த்தாரா இல்லையா?

மஹா அசூயையான காமெடி. பெண்ட் எடுக்கிறேன் என்று தேய்ப்பது ஒரு காமெடியா! அடக் கடவுளே!

கஞ்சா கறுப்பு வடிவேலுவின் வெற்றியை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். வடிவேலுவின் அப்சர்வேஷன் பவர் அசாத்யமானது. சுற்றுப் புறத்தில் இருக்கும் மனிதர்களை, வித்யாசமான மனிதர்களை அவர் எத்தனை நுணுக்கமாக கவனிக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹரி மற்றும் தனுஷ் படங்களில் கதாநாயகியை நாமே காதலிக்க ஆசைப் படுவோம். இந்தப் படத்தில்…… அட்லீஸ்ட் தமன்னாவின் ட்ரேட் மார்க் கிளாமராவது இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.

தனுஷ் ரசிகர்கள் மட்டுமில்லை, டைரக்டர் ஹரி ரசிகர்களும் ஏமாற்றம்தான் அடைவார்கள். சிங்கம் கொடுத்தவரின் படமா இது!

தேவி ஸ்ரீ பிரஸாத்…. இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கிறோம். உங்கள் பழைய பாட்டுக்களின் வாசனை வருவதைத் தவிர்க்க வேண்டும். பீட் மட்டுமே பாட்டு இல்லை. ரீரிகார்டிங்கில் கூட டெக்னிகல் ஆஸ்பெக்ட்ஸ் சரியில்லை. எழுபது சதவீத ரிகார்டிங் இடது டிராக்கிற்கே போய் விட்டது. ஒலிப்பதிவில் அகலமே இல்லை.

தனுஷ்…. அவார்ட் தந்த மயக்கத்திலிருந்து வெளியே வாருங்கள். என் மாதிரி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மதியுங்கள். யார் தன் ரசிகர்களைப் புரிந்து கொண்டார்களோ அவர்கள்தான் டாப் ஹீரோ ஆக முடியும்.

4 comments

  1. உங்களுக்கு இது தேவையா? பாவம் நீங்கள்… “வேங்கை” “வெறும் கை” என்பதை விமர்சனங்கள் ஏதும் படித்து அறியவில்லையா என்ன? இந்தக் கொடுமையை அப்பாவியான உங்களால் எப்படித் தாங்கிக் கொள்ள முடிந்ததோ? 😦

  2. >>நானும் தனுஷ் ரசிகன்தான்…
    ஜவஹர் ஸார்,

    நீங்கள் தமன்னா ரசிகர் என்று தெரியும். தனுஷ் ரசிகரும் என்பது புதிய தகவல்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!