ஓ.. அவனா நீயி?

”என்ன உளர்ரே, காமராஜர் தாடி வெச்சிருக்கிற மாதிரி சிலையா?”

 “ஆமாம்; காமராஜ் சிலைக்கு நீ சொன்ன ரூட்லதான் வந்தேன். வந்தா அவருக்கு பெரிய்ய தாடி இருக்கு, கைல வேற கைத்தடி இருக்கு”

 “தாடி, கைத்தடியா? எந்த ரூட்ல வந்தே?”

 “ஏன் தப்பான ரூட்ல வந்தா காமராஜருக்கு தாடி முளைச்சிடுமா?”

 “ப்ச்.. ரூட்டைச் சொல்லு”

 “அண்ணாசிலை ரவுண்ட்டானாவில அப்படியே எதிர்ப்பக்கம் கண்ட்டிநியூ பண்ணணும்ன்னு சொன்னே இல்லே?”

 “ஆமாம்”

 “கிட்டத்தட்ட இருபது டிகிரி டீவியேஷன்ல ரெண்டு ரோடு. ரெண்டுமே எதிர்ப்பக்கமா இருந்தது. என்னடா பண்றதுன்னு யோசிச்சேன்”

 “ஒரு ரோடுல நோ எண்ட்ரி போட்டிருப்பாங்களே?”

 “கரெக்ட். அதனாலதான் சரியான ரூட்ல வர முடிஞ்சது. நோ எண்ட்ரி ரூட்டை விட்டுட்டு இன்னொண்ணுல வந்தோம்”

 “தப்பு பண்ணிட்டியே”

 “என்ன தப்பு? நோ எண்ட்ரில பூந்து டிராஃபிக் கான்ஸ்டபிள் கிட்ட மாட்டியிருந்தா சரியான ரூட்டை சொல்லிக் குடுத்திருப்பாரா?”

 “நோ எண்ட்ரி ஏழு மணிக்கு அப்புறம்தான். இப்ப அதுல வரலாம்.. நீ ஒரு இடியட்… அங்கேயே எழுதியிருக்குமே பார்க்கல்லையா?”

 “நீ ஒரு இடியட்டுன்னு எழுதியிருந்தா இந்த விவரமெல்லாம் எப்படித் தெரியும்?”

 “ஐய்ய்யோ…. சரி இப்ப பெரியார் சிலை பக்கத்திலதானே இருக்கே?”

 “பெரியாரா? காமராஜ்ன்னு சொன்னே?”

 “அது நீ சரியான ரூட்ல போயிருந்தாத்தான்.. நீதான் தப்பான ரூட்ல வந்துட்டியே..”

 “தப்பான ரூட்ல போயிருந்தா காமராஜ் சிலை வந்திருக்கும்.. இப்பதான் சரியான ரூட்ல வந்துட்டேனே?”

 “என்ன உளர்ரே?”

 “ஆமாம்.. நோ எண்ட்ரில போறது தப்புதானே?”

 “முருகா…. சரி; சிலை பக்கத்திலதானே இருக்கே?”

 “இல்லை. காமராஜர் சிலைன்னு நினைச்சிகிட்டு நீ சொன்னா மாதிரி ஒரு லெஃப்ட்டு, ஒரு ரைட்டு எடுத்துட்டேன்”

 “ரோடு பேர் என்ன போட்டிருக்கு? ஏதாவது போர்டுல பாத்து சொல்லு”

 “போர்டே இல்லையே… ஒரே வீடா இருக்கு. இரு…. ஆங்…. சுவத்திலயே எழுதியிருக்கு”

 “தெருப் பேராத்தான் இருக்கும். படி”

 “இங்கே சிறுநீர் கழிக்காதீர்கள்”

 “ச்சத்.. வேற ஏதாவது பாத்து சொல்லு”

 “ஒரு டிரான்ஸ்ஃபார்மர்க்கு அடில நாய் மூச்சா போய்கிட்டு இருக்கு. அதை சங்கிலியால கட்டி கைல பிடிச்சிகிட்டு அனுபம் கெர் மாதிரி ஒருத்தர் நிக்கிறாரு. ஒரு தாத்தா உயிரையே குடுத்து சுருட்டை ஊ… ஐயம் சாரி உறிஞ்சிகிட்டு இருக்காரு. ஒரு பேப்பர்காரன் தினமலரை குறி பாத்து பால்கனியில எறியறான்…..”

 “நிறுத்து…. என்ன பெரிய்ய கஜினி அசின்னு நினைப்பா? லேண்ட் மார்க் பாத்து சொல்டா”

“இவ்ளோ சின்ன தெருவுல லேண்ட் மார்க், ஹிக்கின் பாதம்ஸ் எல்லாம் இருக்கா? உங்க ஊர் ரொம்ப…”

“அடச்சீ.. வேறே அடையாளம் ஏதாவது சொல்டா”

 “ஓ.. அந்த லேண்ட் மார்க்கா…. ம்ம்ம்ம்…. ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு”

 “அப்பா… நீ இப்போ பிள்ளையார் கோயில் தெருவில இருக்கே”

 “பெரிய்ய கண்டுபிடிப்பு. அதான் நானே சொல்லிட்டேனே?”

 “அந்தத் தெரு பேரே அதாண்டா. சரி. அதே தெருவில லாஸ்ட் வரைக்கும் போய்ட்டு ரெண்டு லெஃப்ட் எடு”

 “ஆச்சு.. சொல்லு”

 “இந்த பேரல்லல் தெருவுல கடைசி வரைக்கும் வா.”

 “வந்தாச்சு”

 “வந்து ரைட் எடுத்தா அமலோற்பவம் ஸ்கூல் போகும் வழின்னு போர்டு இருக்கும்.”

 “அமல…..ம்ம்ம்… ம்ம்.. ஸ்கூல்… ஓக்கே”

 “அதுல திரும்பி லாஸ்ட் வரை வந்து லெஃப்டு”

 “ஆச்சு”

 “என்ன தெரியுது?”

 “பிரவுன் புடவை கட்டிகிட்டு ஒரு செம ஃபிகர் குழாயடியில தண்ணி பிடிக்குது”

 “அது என் பொண்டாட்டி. செறுப்பால அடிப்பேன்”

 “அவங்க திருப்பி அடிப்பாங்களே?”

 “நான் உன்னைச் சொன்னேன்”

 “என்னை ஏன் பொண்டாட்டின்னு சொன்னே? அவனா நீயி?”

 “மூடிகிட்டு அவங்க பின்னால பாரு…”

 “போ மாப்ளே.. இப்பதான் என் பொண்டாட்டி, பாக்கக் கூடாதுன்னு சொன்னே. இப்டி திடுதிப்புன்னு பின்னால பாரு, இடுப்பைப் பாருன்னு எல்லாம் சொல்றியே?”

 “டேய்.. அவளுக்குப் பின்னால நான் நின்னு கையாட்டறது தெரியுதா?”

 “இல்லையே.. அவங்களுக்குப் பின்னால இன்னொரு ஃபிகர்தான் நிக்குது. அதுவும் உன் பொண்டாட்டிதானா? பாக்கக் கூடாதா?”

 “டேய்… நீ எந்த ஊர்ல இருக்கே? பாண்டிச்சேரிதானே?”

 “பாண்டிச்சேரியா? நான் விழுப்புறத்தில இல்ல இருக்கேன்?”

 “விழுப்புறமா.. அங்கே ஏன் போனே?”

 “நீதான திண்டிவனம் ஃப்ளைஓவர் ஏறி லெஃப்ட்டுல திரும்பி 30 கிலோமீட்டர் வரணும்ன்னே?”

 “அட ராமா.. ஃப்ளை ஓவர்ல ஏறாம லெஃப்ட்ல பூந்து 30 கிலோமீட்டர் வரணும்ன்னு சொன்னேண்டா”

 “ஐயய்யோ.. இப்ப என்ன பண்றது?”

 “என்ன பண்றதா? அப்டியே நேஏஏஏஏரா போ”

 “போயி?”

 “உலகம் உருண்டைதானே.. எப்டியும் திரும்ப திண்டிவனம் வரும் அப்ப சரியா லெஃப்ட்ல திரும்பு. வைடா ஃபோனை”

13 comments

  1. முடியல ஜவஹர் ஸார், முடியல!! நானும் 12ஆப்பு படிக்கும் என் பையனும் இதைப் படித்து விழுந்து விழுந்து சிரித்து வயிறு வலிக்கத் திணறியதுதான் மிச்சம்!! எப்புடி ஸார் இப்படியெல்லாம்? நீங்க என்னவோன்னு நினைச்சேன், நீங்க இப்பதான் இப்படியா, இல்லே எப்பவுமே இப்படித்தானா?

  2. சார்,

    suprrrr.

    //“நீதான திண்டிவனம் ஃப்ளைஓவர் ஏறி லெஃப்ட்டுல திரும்பி 30 கிலோமீட்டர் வரணும்ன்னே?”
    “அட ராமா.. ஃப்ளை ஓவர்ல ஏறாம லெஃப்ட்ல பூந்து 30 கிலோமீட்டர் வரணும்ன்னு சொன்னேண்டா”//

    இந்த வரிய கொஞ்சம் எடிட் பண்ணி முயற்சி செய்தேன் சரியா வருமான்னு பாருங்க.

    “நீதான திண்டிவனம் ஃப்ளைஓவர் லெஃப்ட்டுல திரும்பி 30 கிலோமீட்டர் வரணும்ன்னே?”
    “அட ராமா.. அது ஃப்ளை ஓவர்ல ஏறாம, ஃப்ளை ஓவர்க்கு லெஃப்ட்ல பூந்து 30 கிலோமீட்டர் வரணும்ன்னு சொன்னேண்டா”

    தப்புன்னா மன்னிச்சிடுங்க. அதிகப்பிரசங்கி / ஓ… அவனா நீ ன்னு திட்டாதீங்க!!!

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/

எதுவா இருந்தாலும் எழுதுங்க!