பஜ்ஜியும் பகவத் கீதையும்

சமீபத்தில் ஒரு தர நிர்ணயக் கருத்தரங்கிற்குப் போயிருந்தேன்.

நடத்தியவர் ஒரு குட்டிக் கதை சொன்னார்.

ஒரு பெரிய கட்டிடம் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. நிறைய ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். மேஸ்திரியிடம் ஒருவர் போய் ‘என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டாராம்.

அவர், ‘எல்லாரும் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்று பார்க்கிறேன்’ என்றாராம்.

சித்தாளைக் கேட்ட போது, ‘கல்லைத் தூக்கிக் கொடுக்கிறேன்’ என்றாளாம்.

இன்னொருத்தன் ‘சிமெண்ட்டு கலக்கிறேன்’ என்றானாம்.

கொத்தனார், ‘கற்களை ஒன்றோடு ஒன்று இணைக்கிறேன்’ என்றாராம்.

மண்ணை சலித்துக் கொண்டிருந்தவன் மட்டும் ‘நான் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டுகிறேன்’ என்றானாம்.

இதை அவர் சொன்னதும் எல்லாரும் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தார்கள்.

நான் அவருக்கு சைபர் மார்க்தான் கொடுப்பேன்.

பகவத் கீதையின் சாரம் என்ன தெரியுமா?

இந்தக் கேள்வியைக் கேட்டதும், பகவத் கீதையை முகர்ந்து கூடப் பார்க்காத என் மாதிரி ஆசாமிகள் கூட ‘ஓ… தெரியுமே, கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே’ என்போம்.

இன்னும் சிலர் ‘கடமையைச் செய், பலனை எனக்கு விட்டு விடு’ என்கிறார் கிருஷ்ணர் என்பார்கள்.

பலனை எதிர்பார்க்காமல் வேலையை செய் என்று சொன்னால் பைத்தியக்காரன் கூட ஒப்புக் கொள்ள மாட்டான். இது உங்களுக்கும் எனக்குமே தெரிந்திருக்கும் போது கிருஷ்ணருக்குத் தெரியாமல் இருக்காது. அதே போல பலனை எனக்கு விட்டு விடு என்று பழைய ஜமீன்தார்கள் போல சொல்லி பக்தர்களை கொத்தடிமை ஆக்குவதும் கிருஷ்ணரின் நோக்கமாக இருக்காது.

இதையெல்லாம் மீறி அதில் ஒரு அர்த்தம் இருந்தால்தான் பகவத் கீதை காலங்களைக் கடந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கும்.

ஒருத்தனுக்கு காய்கறிகளை கழுவி நன்றாக தோல் சீவி அழகான துண்டுகளாக நறுக்கத் தெரியும்.

ஒருத்தனுக்கு கடலை மாவு, உப்பு, மிளகாய்ப் போடி எல்லாவற்றையும் சரியான விகிதத்தில் கலக்கத் தெரியும்.

இன்னொருத்தனுக்கு காய்கறியை சீராக மாவில் தோய்த்து எண்ணையில் போட்டு எடுக்கத் தெரியும்.

மேலும் ஒருவனுக்கு எண்ணையை ஒரே சீரான வெப்பத்தில் பராமரிக்கவும், அடுப்பை ஒரே அளவில் எரிய வைக்கவும் தெரியும்.

ஆனால் பஜ்ஜி என்றால் என்ன என்று இவர்கள் யாருக்குமே தெரியாது.

ஆனால் ஒவ்வொருவரும் தாங்கள் என்ன செய்கிறோமோ அதுதான் இறுதி, அதற்கு மேல் எதுவும் கிடையாது என்கிற எண்ணத்தில் தங்கள் வேலையைச் செய்தால் போதும். தரமான பஜ்ஜி தானாகவே கிடைக்கும்.

எப்படி?

கறிகாய் நறுக்குகிறவன் கழுவுதல், தோல் சீவுதல், ஒரே அளவாக நறுக்குதல் இந்த மூன்றைத்தான் செய்ய வேண்டும். வேலையே அவ்வளவுதான் என்கிற போது அந்த ஒவ்வொன்றையும் நிதானமாக, கவனமாக செய்வான். எந்த ஒன்றைக் கோட்டை விட்டாலும் முப்பது சதவீதம் தரம் குறைந்து விடும் என்கிற அச்சமும் இருக்கும்.

தன் வேலை பஜ்ஜியின் ஒரு பகுதி என்பது அவனுக்குத் தெரிந்தால் என்ன ஆகும்?

மாவுக்குள்ளேதானே காய் போகப்போகிறது என்கிற எண்ணம் முதலில் வரும்.

அப்போது தோல் சீவுவதிலும், ஒரே அளவாக இருக்க வேண்டும் என்பதிலும் கவனக் குறைவு வந்து விடும். அதனால் சுவை கேட்டுப் போகும் என்பதும், எண்ணெய் அதிகம் செலவாகும் என்பதும் சுவையும் குறைந்த எண்ணெய் செலவாவதும் பஜ்ஜியின் தரத்தை நிர்ணயிக்கிற குணங்கள் என்பதும் அவனுக்குத் தெரியாது.

இதேதான் மாவுக்காரனின் கதையும்.

நீர்த்த மாவு அதிலிருக்கும் நீரை ஆவியாக்கவே பெரும்பாலான வெப்பத்தை வீணாக்கி விடும் என்பதோ, கெட்டி மாவு வேகாத பஜ்ஜியை உண்டாக்கும் என்பதோ அவனுக்குத் தெரியாது. அவனைப் பொறுத்தவரை கையில் தோய்த்து எடுக்க சௌகர்யமான விஸ்காசிட்டியை தேர்ந்தெடுத்துக் கொள்வான்.

எண்ணெயில் போட்டு எடுப்பவன் நீர்த்த மாவைப் பார்த்ததும் குறைந்த பருமன்தானே என்று சீக்கிரம் எடுப்பான். அடுப்பை கவனிக்கிறவன் நீராவியைப் பார்த்து எண்ணெய் புகைவதாக நினைத்து வெப்பத்தைக் குறைப்பான்.

மொத்தத்தில் பஜ்ஜிக்காகத்தான் வேலை செய்கிறோம் என்பது தெரிந்தால் பஜ்ஜி கோவிந்தா.

அதற்காகத்தான், அவனவன் தான் செய்ய வேண்டியதை செவ்வனே செய்தால் நடக்க வேண்டியது தானாக நடக்கும், அதாவது make quality happen என்கிறார் கிருஷ்ண பரமாத்மா.

இதைத்தான் ISO/TS16949/QS உள்ளிட்ட எல்லா தர நிர்ணய அமைப்புகளும் சொல்கின்றன.

பஜ்ஜியை நினைத்துக் கொண்டு வேலை செய்தால் பஜ்ஜியின் தரம் கேட்டுப் போகும். வேலையில் மட்டும் கவனமிருந்தால் நல்ல பஜ்ஜி கிடைக்கும்.

இதையே விவேகானந்தர் இன்னும் கொஞ்சம் வித்யாசமாக, Plunge into present என்றார்.

என்னைப் பொறுத்தவரை கிருஷ்ணரும், விவேகானந்தரும் டெமிங், இஷிகாவா உள்ளிட்ட பலரை விட சிறந்த Quality குரு!

22 comments

  1. 🙂

    நல்ல கருத்து. ஆனாக் கொடுமையா எங்க ஊரு சைடுல காயை கழுவி வெட்டி மாவுல தோய்ச்சு எண்ணையில போட்டு பஜ்ஜியா மாத்தற வரைக்கும் ஒரே ஆள்தான் செய்யறான். அதனாலதான் பஜ்ஜி சரியா வரமாட்டேங்குது போல… ஆனா தினத்தந்தி பேப்பர் தனியாத்தான் வருது.

    1. சென்ஷிஜி, ஒரே ஆள் செய்யறப்போ நிச்சயம் காம்ப்ரமைஸ் நிறைய இருக்கும், அதனால் தரத்திலே பாதிப்பு இருக்கும். உங்க வீட்டையே எடுத்துக்கங்க, மொத்த சமையலையும் நீங்களேவா செய்யறீங்க? வீட்டம்மாவோட சேர்ந்துதானே பண்றீங்க? அதன்னாலேதானே சாப்பாடு நல்லா இருக்கு?

  2. /
    உங்க வீட்டையே எடுத்துக்கங்க, மொத்த சமையலையும் நீங்களேவா செய்யறீங்க? வீட்டம்மாவோட சேர்ந்துதானே பண்றீங்க? அதன்னாலேதானே சாப்பாடு நல்லா இருக்கு?
    /

    avvvvv
    என் வீட்டு ரகசியமெல்லாம் எப்பிடி தெரிஞ்சது???
    :)))

  3. ரோட்டில ஒருத்தன் குழிதோண்டிகிட்டே போக இன்னொருத்தன் மண் போட்டு அதை மூடிகிட்டு போனானாம் என்னடான்னு கேட்டா செடி வைக்கிறவன் லீவாம்
    :))))

  4. அன்பான நண்பர் திரு ஜவஹர்,

    நீங்கள் சொல்லவந்த point கரெக்ட். ஒரு Modern manufacturing process என்பது எவ்வளவு complicated என்று பலருக்கு தெரிந்திருக்க ஞாயம் இல்லை!
    End Product <=== Distribution <==Competitive Pricing <== Market Analysis <== Demand <=== Actual manufacturing <== Manufacturing capability <= Infrastructure <== Supply chain என்று இப்படி போகிறது!

    உதாரனத்திற்க்கு, ஒரு குளிர் சாதன பெட்டியை தயாரிப்பது என்பது பார்பதற்கு மிகவும் சாதாரணமாக இருக்கும்! ஆனால் அதன் பின்னால் இயங்குவதோ வெவேறு துண்டுகளான Sub processகள்! நீங்கள் சொல்லுவதைப்போல, supply chain இல் இருப்பவர்கள் குளிர் சாதனப்பெட்டியைப்பற்றி நினைப்பதில்லை! அவர்கள் இலக்குகளும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட guide lines களும் வேறு! ஆனால் கடைசியில் வந்து முடிவதோ, வேறு ஒன்று!

    கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பதன் அர்த்தமே இதுதான்!! நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் மிகச்சரியே!

    நன்றி
    நோ

  5. அடேங்கப்பா ! பஜ்ஜியில இவ்வளவு மேட்டரு இருக்குதா? குரோம்பேட்டை சி எல் சி ரோடுல இருக்கும் நாயர் – சுவையான வாழைக்காய் பஜ்ஜி சுடச் சுட தருவாரு. அவருடைய மானுபாக்ச்சரிங் அண்ட் க்ளீனிங் பிராசஸ் பாத்தோம்னா – ஆயுசுக்கும் பஜ்ஜியை நெனச்சிக்கூட பாக்கமாட்டோம். – ஆனா பாருங்க, அந்த வைராக்கியம் எல்லாம் – மறுநாளு அந்த இடத்தை கடந்து செல்லும் வரையில்தான்! மூக்கும் நாக்கும் நம் மூளையை டிவோர்ஸ் பண்ணிட்டு – கால்களை கடை அருகே இழுத்துச் சென்றுவிடும்!

  6. Dear Sir…

    Now a days….I started feel…that I am in MBA class while reading your blog.

    The problem what I had during my evening college days is…our professor will try to explain with a case study of 15 pages and above. Before going to class…we have to read one or two chapters and 15 pages of case study.

    After 8am to 6pm work….how can I read those 50 pages before college starts by 7.15pm…

    If I fail to understand the case….then that 4 hours will be horrible for me….That’s how I (we) missed lot of good topics.

    Your cases are very simple….

    you know the same topic…our professor explained with McDonald’s and KFC….

  7. டெமிங், இஷிகாவா இவங்கள்ளாம் யாருன்னு சொன்னீங்கன்னாப் புண்ணியமாப் போகும்!……அவங்க சொன்னதையும் சொன்னீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்!

  8. அன்பின் ஜவர்லால்
    சூப்பர் உதாரணம் மற்றும் விளக்கம்.
    எனக்கும் சில டிப்ஸ் கொடுத்தா, பதிவுகள் போட வசதியா இருக்கும், என்ன எழுதன்னு தவிக்கிற தவிப்பு… யப்பா
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

  9. ஆட்குறைப்பு என்கிற பெயரில் ஐந்து ஆள் வேலையையும் ஒருவரே செய்யுமாறு செய்து ‘இது தாண்டா பஜ்ஜி’ என்று நம்பவைக்கிரார்களே
    அதற்கு என்ன செய்வது ?

    1. நன்றி KVR, அதுக்கு பதில் TS16949 லேயே சேர்த்துட்டா, Project Management மட்டுமில்லாம, எல்லா நிறுவனங்களுக்கும், எல்லா Process க்கும் பயன் படுமே?

  10. பகவத் கீதை to பஜ்ஜி to ISO/QS. Super.

    @ raj = same topic…our professor explained with McDonald’s, KFC
    Professor ‘s state KFC as they lack originality (Possibly their reference books state the same examples). OR
    Its an expression of intellectual threatening or showoff.
    If the professor quotes bajji stories, than most students would probably build an opinion in their mind that what they are taught is not world class.

    http://vaarththai.wordpress.com

Jawahar -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி