அண்ணலும் நோக்கியா அவளும் நோக்கியா

ராமாயணமே படிக்காதவனாக இருந்தாலும் சரி, விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்று சொல்கிற பிரகிருதிகளாக இருந்தாலும் சரி; கம்ப ராமாயணத்தில் வருகிற இந்த வரிகள் நிச்சயம் தெரிந்திருக்கும்:

“அண்ணலும் நோக்கினான்;அவளும் நோக்கினாள்”

கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இந்த வரியில் ஒரு இலக்கணப் பிழை தெரிகிறதே?

“ஞாயிற்றுக் கிழமையும் கடை உண்டு” என்கிற அறிவிப்புகள் பார்த்திருப்பீர்கள்.

என்ன அர்த்தம்?

மற்ற நாட்களிலும் உண்டு என்கிற அர்த்தம் அதில் மறைந்திருக்கிறது இல்லையா?

அப்போது கம்பர் “அண்ணல் நோக்கினான்;அவளும் நோக்கினாள்” என்று அவளுக்கு மட்டும்தானே உம் போட வேண்டும்?

என் மாதிரி ஒண்ணரையணா எழுத்தாளனுக்கு தெரிந்த இலக்கணம் கவிச்சக்கரவர்த்திக்குத் தெரியாதா?

சாலையில் ஒரு லாரியும்,மோட்டார் சைக்கிளும் மோதிக் கொள்கின்றன. அதைப் பார்க்கிற ஒருத்தன் நண்பர்களிடம் சொல்கிறான்.

“மாப்ளே, ரோட்லே கண்நேதிர்லே பார்த்தேண்டா. ஒரு பைக்கை லாரிக்காரன் அடிச்சித் தூக்கிட்டாண்டா”

உடனே எதிராளி “ஏன் லாரி வர்றதைப் பார்த்து அவன் ஸ்பீடை குறைச்சிருக்கலாமே?” என்பான்.

“இல்லடா, பாக்கரதுக்குள்ளே மோதிட்டான்”

“சரி, லாரிக்காரனாவது ஸ்பீடை குறைச்சிருப்பானே?”

“இல்லடா, அவன் குறைக்கறதுக்குள்ளே இவன் கிட்ட போய்ட்டான்”

“சரிடா, ஓவர்டேக் பண்ணும்போது முன்னாலே போன டிரைவர் கை காட்டி தடுத்திருப்பானே?”

இவன் பொறுமை இழந்து, “அடப்போடா, அவனும் வந்தான், இவனும் வந்தான், ஆக்சிடன்ட் ஆயிடிச்சு” என்பான்.

இரண்டு உம் வருகிற இடங்கள் எல்லாமே-தற்செயலாக நிகழ்பவை. அதாவது ஆக்சிடேண்டலாக நிகழ்பவை. ராமனும் சீதையும் திட்டமிட்டு சைட் அடிக்கவில்லை என்பதைக் காட்டவே கம்பர் இரண்டு உம் போட்டார்.

மறைந்த பிரபல புராணச் சொற்பொழிவாளர் புலவர் கீரன் சொன்னது இது.

18 comments

    1. நன்றி வேணுஜி.

      உங்கள் வலையை வேகமாக மேய்ந்தேன். “கிணற்றுத் தவளை” யா நீர்? கடலில் வாழும் சுறா அய்யா! அப்புசாமி டாட் காமில் எல்லாம் கலக்கி இருக்கிறீர்களே! உங்கள் வலையில் பொறுமையாகப் படிக்க நிறைய சேதி இருக்கிறது. இப்போதைக்கு வெந்நீர் போட மட்டும் கற்றுக் கொண்டேன்!

    1. நன்றி தலைவா,

      சுவாரஸ்ய வலைப்பக்க விருதுக்கு வாழ்த்துக்கள். மென் மேலும் வளர வாழ்த்துகிறேன். ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர் என்று உங்கள் புரொபைல் இல படித்தேன். நல்ல விஷயங்கள் எழுதிகிற போதெல்லாம் சொல்லுங்கள், நம் வாசகர்களும் படிக்கட்டும்.

      அந்த மொட்டை பாஸ் யார்? முறைக்கிரானே?

  1. அண்ணலும் நோக்கினான் …. அவளும் நோக்கினாள்… ஆக, அவர்கள், எதிரில் வந்த தண்ணி லாரியை நோக்கவில்லை… அண்ணலும் அவளும் ஆம்புலன்ஸில்…!

  2. தங்கள் “அண்ணலும் …. அவளும்” = ஞாயிறன்றும் எங்கேயோ இடிக்கிறதே?
    அப்பொழுது கம்ப நாடர் “அவளும் நோக்கினாள்” மட்டும் சொல்லியிருந்தாலே போதுமே?
    இவை சம கால நிகழ்ச்சி என்பதை எடுத்து சொல்ல உபயோகிக்கப்பட்ட ஒரு உம் விகுதிக்கு
    புது இலக்கணம் வகுத்து விட்டீர்கள்

    வாழ்க நிம் பணி!

    1. அய்யா,

      நான் செய்தது மாக்ரோ அனாலிசிச்தான் நீங்கள் மைக்ரோவுக்குப் போய் விட்டீர்கள். தலை வணங்குகிறேன்.

  3. உரைநடையில் அப்படிச் சொல்வதைத்தான் செய்யுளில் இப்படிச் சொல்லியிருக்கிறார் கம்பர்.

  4. ஜவஹர், நல்லா எழுதியிருக்கீங்க. நான் சொல்ல வந்த பதில் கொஞ்சம் பெரிசாப் போயிடிச்சி.. பதிவாகவேப் போட்டுவிட்டேன். படிச்சிருங்க..

    http://seemachu.blogspot.com/2009/07/84.html

  5. அண்ணல் நோக்கியதைக் கண்டு அவள் நோக்கவில்லை…அவள் நோக்கிய உணர்வு கண்டு அண்ணல் நோக்கவில்லை….இருவரும் simultaneously or at the same time (not accidentally) நோக்கியதால்தான் அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்

    1. ஒரே சமயத்தில் எதிர்பாராமல் என்கிற வார்த்தைகள் விபத்தைக் குறிக்கவே பயன் படுகின்றன.

    1. காந்தி எதை எதையோ எப்படி எப்படியோவேல்லாம் நோக்கியவர். அந்த அண்ணல் நோக்கியவைகளைத் தனியாக எழுதுறேன்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!