எல்லா சுயமுன்னேற்ற சமாச்சாரமும் ஒரே புத்தகத்தில்…..

எல்லா சுய முன்னேற்றத் தலைப்புகளிலும் இருக்கும் முக்கியமான செய்திகளைத் தொகுத்து ஒரே புத்தகமாகத் தர முடியுமா? அதுவும் மிக எளிமையாக, யாருக்கும் புரிகிற மாதிரி…

மேனேஜ்மெண்ட், தரக் கட்டுப்பாடு, விற்பனை, தகவல் பரிமாற்றம், நண்பர்களை தேர்ந்தெடுப்பது எப்படி, காதலிப்பது எப்படி….. இத்யாதி.

வெறும் 272 பக்கங்களில், வெறும் ரூ.160 ல்!

அமெரிக்க ஆசிரியர்களின் சுய முன்னேற்ற நூல்கள் ரஜினி படத்து டிக்கெட் மாதிரி விற்கின்றன. நம்ம ஊரில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே ஸ்டீஃபன் கோவே, டேல் கார்னி, ஷிவ் கேராவை எல்லாம் துக்கிச் சாப்பிடுகிற சுய முன்னேற்ற குரு இருந்தார்.

அவர் எதைப் பற்றியும் ஒரேயடியாகப் பேச மாட்டார். ஒன்றரை வரி சொல்வார். ஆனால் அதைப் பற்றி ஒரு ஜென்மம் பூரா யோசிக்க வைத்து விடுவார்.

கரெக்ட், அவரேதான்.

மிஸ்டர் திருவள்ளுவர்.

திருக்குறளுக்கு உரை நிறையப் பேர் எழுதியிருக்கிறார்கள். பொழிப்புரைகளில் ஒவ்வொரு குறளின் அந்த்தமும் டிஸ்க்ரீட்டாகத் தனித்து நிற்கும். இது உரை இல்லை. ஒவ்வொரு அதிகாரத்திலும் வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைத் தொகுத்து ஒவ்வொரு கட்டுரை. அவ்வளவே.

இந்தப் புதிய முயற்சிக்கு யோசனை சொன்னவர்கள் கிழக்கு பதிப்பகத்தின் திரு. பத்ரி சேஷாத்ரி அவர்களும், திரு.பா.ராகவன் அவர்களும்.  அவர்கள் சொன்னதைப் புரிந்து கொண்டு பகீரதப் பிரயர்த்தனம் செய்திருக்கிறேன்.

உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

படித்துப் பாருங்கள்.

நூல் பெயர் :திருக்குறள் வழியில் உருப்படு

ஆசிரியர் : கே.ஜி.ஜவர்லால்

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

                               33/15, எல்டாம்ஸ் சாலை

                               ஆழ்வார்பேட்டை-சென்னை 600 018

தொலைபேசி : 044-42009601, /03, /04

மின்னஞ்சல் : support@nhm.in

விலை ; ரூ.160/= மட்டும்.

28 comments

    1. கணேசன், ஏற்கனவே என் இரண்டு நூல்கள் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளன. சிலப்பதிகாரம், கதைகளின் வழியே ஜென். விவரங்கள் பிளாக்கிலேயே இருக்கின்றன.

  1. படிக்குற காலத்துல திருக்குறளை , ‘உருப்போடு’ என்றார்கள்.
    இப்ப புத்தக வடிவில் ‘உருப்படு’ என்கிறார்கள். சரிதான் 🙂
    நல்ல முயற்சி. நம் மக்களின் மேன்மை நமக்குத் தெரிவதில்லை.

  2. :))

    வாழ்த்துகள் ஜவஹர் ஜி… (லீவுல ஊருக்கு வர்றதுக்குள்ள இன்னும் உங்க புத்தகம் மாத்திரம் எத்தனை ரிலீஸ் ஆகும்ன்னு யோசிச்சு வச்சிக்கறேன்) 🙂

  3. வெறும் மதிப்பெண்களுக்காக உருப்போட்ட வள்ளுவரை, நாங்கள் உருப்படற வழிக்காக வழி வகுத்துக்கொடுத்த ஜவஹர்ஜி க்கு நன்றிகள் மீண்டும்.

  4. ஜவஹர்ஜி,

    மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் முன்னுரை இப்புத்தகத்தை உடனே வாங்கிப் படிக்கத் தூண்டுகிறது. உங்கள் “கதைகளின் வழியே ஜென்” அலாஸ்கா பயணத்தின் போது (July 4th long week-end) ஒரே மூச்சில் முடித்தேன்.

  5. ரெம்ப நாளைக்கு முன்னாடி இதை உங்களிடம் கேட்ட ஞாபகம். மானேஜ்மென்ட் பற்றி வள்ளுவர் என்ன சொல்லிருக்கார் என்று சொல்லலாமே என்று..

    அதை நீங்க சுய முன்னேற்றத்திற்கு என்று மாத்தி யோசித்துவிட்டீர்கள். கொச்சின்-ல கிடைக்காதேன்னு வருத்தமா இருக்கு. போஸ்டல்ல அனுப்புற ஆப்சன் உண்டா சார் ?

  6. சிலப்பதிகாரத்தை நாவல் வடிவில் படித்து ரசித்தேன் . நாவல் வடிவில் பெருங்காவியத்தை கொண்டு வந்து செய்திகள் எதுவும் சிதறாமல் எல்லாவற்றையும் ஒரு கட்டுக்குள் வைத்து 120 பக்கத்திற்குள் 42 எளிய அத்தியாயங்களாக பிரித்து அழகாக அமைக்கப்பட்டிருந்தது..

    ஜென் கிடைக்கவில்லை… சென்றமுறை, கோவை விஜயாவிலும், சென்னை ஹிக்கிமிலும் தேடினேன் …தீர்ந்து விட்டது…
    இந்தமுறை இரண்டு புத்தகங்களையும் பிடித்து விட வேண்டும்…
    மேலாண்மை, சுயமுன்னேற்றம், ஆளுமை இவற்றை சொல்லும் அய்யனின் குறள்களை கட்டுரையாக்கிய செயலுக்கு வாழ்த்துக்கள்..

    படிப்பதற்கு மிக ஆவலோடு இருக்கிறேன்.

  7. //வெறும் மதிப்பெண்களுக்காக உருப்போட்ட வள்ளுவரை, நாங்கள் உருப்படற வழிக்காக வழி வகுத்துக்கொடுத்த ஜவஹர்ஜி sir க்கு நன்றிகள் //

  8. மிக நல்ல செயல் புரிந்துள்ளீர்கள்.

    திருக்குறள் கிடைப்பதற்கரிய பொக்கிஷம்.ஒரு வாழ்க்கை நூல்.

    நம் பிரச்சினைகள் அனைத்திற்கும் அதில் தீர்வு உள்ளது.

    ஒரு வேண்டுகோள்.இவ்வண்ணமே மற்றொரு பொக்கிஷமான ஔவையார் நூல்களையும் பதிப்பியுங்கள்.

    அறம் செய்ய விரும்பு என்ற ஒரு அறிவுரையை வைத்து ஒரு தீஸிஸ்ஸே எழுதலாம்

    உங்கள் பெயர் ஜவர்லால் ஆ,ஜவஹர்லால் ஆ ?

  9. புத்தகம் ஆர்டர் செய்தாகி விட்டது. என் எச் எம் மின் வாடிக்கையாளர் சேவை நன்றாக வே இருந்தது. அவர்கள் கூறியபடி ஒரு வாரத்தில் புத்தகம் வந்தால் தீபாவளிக்கு முன் படித்துவிட திட்டம், சீக்கிரம் “உருப்படத்தான்”!

    ஆன்லைனில் வாங்குவது ஈஸியாக உள்ளது! இனிமேல் மாதம் இரு புத்தகங்கள் வாங்க திட்டம்! (இதுக்கு அர்த்தம் மாசம் இரு புத்தகங்கள் எழுதுங்கள் னு )

  10. வாழ்த்துக்கள் ஜவஹர்.
    ஒரு முறை ராபின் ஷர்மா-வோட ( பெஸ்ட் செல்லர்) புக் படிக்கிறபோ “இன்ஃபர்மேஷன் மற்றும் வேலை பளு” (ஓவெர்லடிங்) பற்றி அவரோட கருத்து, திருவள்ளுவர் சொன்ன “பீலிபெய் சாகடும் அச்சிறு பண்டம்” என்கிற குறளோட அப்பட்டமான தழுவல்.

    ஒரு வேலை ராபின் ஷர்மா திருக்குறள் படிச்சார இல்லே திருவள்ளுவர் மாதிரி யோசிச்சார-னு தெரியலை 🙂

    ரொம்ப நல்ல முயற்சி, முயற்சி சிறக்க வாழ்துக்கள்.
    -இராம்

பத்மநாபன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி