அந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா

கோகிலா வீட்டைப் பூட்டிக்கொண்டு படி இறங்கினாள்.

பக்கத்து வீட்டு நீலா மாமி கேட் அருகேயே நின்றிருந்தாள்.

“மாமி அவர் அசந்து தூங்கிண்டிருக்கார்.தொந்தரவு பண்ண வேண்டாம்ன்னு கதவை வெளிலே பூட்டிண்டு வந்துட்டேன். நான் வர ஒரு மணி நேரம் ஆகும். ஒண்ணு ரெண்டு தரம் ஜன்னல் வழியா எட்டிப் பாருங்கோ. கதவைத் திறந்துண்டு பெட் ரூமுக்குள்ள போயி பாக்க வேண்டாம்.  நான்தான்னு நினைச்சி கையை பிடிச்சி இழுத்துடுவார். அவர் எழுந்தார்ன்னா வீட்டைத் திறந்து விட்டு சாவியை அவரண்ட குடுத்துடுங்கோ. நான் சொன்னேன்னு சொல்லுங்கோ. கோபிச்சிக்க வேண்டாம்ன்னு சொல்லுங்கோ. முடிஞ்சா காபி போட்டு குடுங்கோ”

மாமி சாவியை வாங்கிக் கொண்டாள்.

கோகிலா போன பிறகுதான் அன்று வியாழக் கிழமை, ராகவேந்திர சுவாமி கோயிலுக்கு போக வேண்டும் என்று மாமிக்கு நினைவு வந்தது.

“டேய் கோண்டு, இந்தா இது அடுத்தாத்து சாவி. அந்த மாமி வெளிலே போயிருக்கா. கதவை வெளிலே பூட்டியிருக்கா. உஷா காலேஜ் லேர்ந்து வந்தா அவாத்தை திறந்து சாவியை மாமா கிட்ட தரச்சொல்லிடு. நேர உள்ள போக வேண்டாம்ன்னு சொல்லு. அந்த மாமா கையை புடிச்சி இழுத்துடுவார். கோகிலா கோயிச்சிக்க வேண்டாம்ன்னு சொன்னான்னு சொல்லணும். காபி போட்டு தரணும்.”

மாமி போய் விட்டாள்.

கொஞ்ச நேரம் கழித்து உஷா வந்தாள். கோண்டு சாவியை அவளிடம் கொடுத்து

“அக்கா, அம்மா இந்த சாவியை உன்னண்ட தரச்சொன்னா. கோகிலா மாமி வெளிலே போயிருக்காளாம். அதனாலே கதவைத் திறந்துண்டு உள்ளே போகணுமாம். அந்த மாமா கையை பிடிச்சி இழுப்பாராம்.கோயிச்சிக்க வேண்டாமாம். அவருக்கு காபி போட்டு தரணுமாம்.” என்றான்.

கம்யூனிகேஷன் செய்கிறவரும் கேட்கிறவரும் தெளிவாக இல்லாவிட்டால் என்ன நேரும் என்பதற்காக பயிற்ச்சி வகுப்புகளில் நான் சொல்கிற கதை இது.

மற்றபடி அடுத்த வீட்டு மாமா கையை பிடித்து இழுத்ததாகவும் அவரைத் தான் செவிட்டில் அறைந்ததாகவும் உஷா என்கிற பெயரில் யாராவது சொல்வதைக் கேட்டால் அந்த சம்பவத்தோடு என்னை இணைத்துக்கொள்ள வேண்டாம்.

39 comments

  1. முதலாவதாக, இதிலுள்ள உட்கருத்து நூற்றுக்கு நூறு உண்மை. ஒரு செய்தி பல செவிகளில் புகுந்து வெளிவரும்போது உருத்தெரியாமல் போகும். நாங்கள் இந்த விளையாட்டு விளையாடியிருக்கிறோம். யார், எந்த வயதிலும் விளையாடலாம். வட்டமாக பத்து பேர் உட்கார்ந்திருக்க, ஒருவர் அடுத்தவர் காதில் ஒரு வாக்கியத்தை ஒரு முறை மட்டும் ஓத வேண்டும். அடுத்தவர் அவருக்கடுத்தவர் காதில்… இப்படி கேள்வி ஞானத்தில் பெற்ற அந்த வாக்கியத்தை கடைசி ஆள் கூறும் போது ஒரிஜினலுக்கு அதற்கும் ஸ்நானப் ப்ராப்தியே இருக்காது. இரண்டாவது வழக்கம் போல என் விஷமக் கருத்து. அடுத்த வீட்டு மாமா அழுது கொண்டே என்னிடம் சொன்னது, “ உஷா என்னை கன்னத்துல் அறைஞ்சுட்டா… ஏன்னா, அவ எதிர்பார்த்தபடி, நான் அவ கையை பிடிச்சு இழுக்கலையாம்…”

    1. அந்தக் கம்யூனிகேஷன் விளையாட்டு விளக்குகிற கருத்தை எளியவர்களும் புரிந்து கொள்ளவே இந்தக் கதை.

      உஷா வீட்டுக்குப் பக்கத்து வீடு காலியாகும் போது உடனே எனக்குத் தெரிவிக்கவும்.

  2. அதனால்தான் நான், எப்பவுமே, யாராவது ஒருவர்,
    “மற்றவர் (உங்களைப் பற்றி அல்லது மிஸ்டர் எக்ஸ் மிஸ் எக்ஸ் –பற்றி)
    இப்படி சொன்னார் …..” என்று எதையாவது சொன்னால் புன்சிரிப்போடு கேட்டு வைத்துக் கொள்வேன்; ஆனால் எதையும் நம்ப மாட்டேன். அவர் எந்த கான்டெக்ஸ்டில் என்ன சொன்னாரோ – அதை இவர்கள் என்ன அர்த்தத்தில் எடுத்துக் கொண்டார்களோ, – மேலும் நாமே சொல்லுபவர் முகக் குறிப்பு, சொல்லும் விதம்,
    body language – ஆகியவைகளை பார்த்து புரிந்துகொள்வது – வார்த்தைகளை விட
    முக்கியமானது. நல்ல கட்டுரை.

  3. மிகச் சரியானது. காண்டெக்ஸ்ட் தெரியாமல் ஒன்றைக் கேட்கிற போதோ படிக்கிற போதோ விபரீதமான அர்த்தங்கள் ஏற்படும். காண்டெக்ஸ்ட்டும் பாடி லாங்குவேஜும் கம்யூனிகேஷனில் முக்கிய அங்கங்கள் என்கிற தகவலைத் தந்ததற்கு நன்றி.

    இது தொடர்பான ஒரு பிரபல நகைச்சுவைத் துணுக்கு உண்டு.

    அதை ஆங்கிலத்தில் படித்தால்தான் சுவையாக இருக்கும்.

    one of the senior Popes, while landing up at Vatican after taking charge journalists asked him,

    “What do you think about the news that says there are prostitutes even in a holy city like Vatican”

    Pope got shocked and retorted “Are there protitutes in Vatican?”

    Next morning, the news papers flashed the following Headline.

    ‘Pope landed up at Vatican and enquired whether there are prostitutes’

    1. enjoyed browsing through your blog. mostly nice posts. laughed a lot and cringed a bit too…. a sexual harassment story for communication lessons?? i sometimes get the feeling that the effect/affect of your writing is diluted with such frivolity. all said and done, it takes a great deal of creativity to keep a site like this going. you have plenty. 🙂

  4. ’ அந்த மாமாவைத் ‘ தொடர்ந்து, ஆசிரியர் மாமாவுக்கு அடுத்த அஸைன்மெண்ட்… மொட்டைத் தாத்தா குட்டையில் விழுந்ததின் குட்டை உடையுங்களேன்… முடியாட்ட குட்டையைக் குழப்பிடுங்க…

  5. /
    அந்த மாமா கையை பிடிச்சி இழுப்பாராம்.கோயிச்சிக்க வேண்டாமாம். அவருக்கு காபி போட்டு தரணுமாம்.” என்றான்.
    /

    haa haa
    சான்ஸே இல்லை
    :))))))))))))
    ROTFL

  6. கம்யூனிகேஷன்பற்றி ஜோக் எழுதினாலும் எழுதினீர்கள். தவலை போச்சு என்று சொல்ல தலை போச்சு என்கிற கதையாக, எல்லோருமே ஜோக் நிறைய பதிலாகக் கொடுக்கிரார்கள்.

  7. சார், உங்க கதைக்கு ரிலேட்டர்டா சின்ன வயசுல கேட்ட கதை.

    ஒருவர் வெளியூரில் வேலை பார்ந்தார். மனைவியும், கைக்குழந்தையும் ஊரில் இருந்தார்கள். அந்த காலத்தில் ஏது செல்போன் வகையறால்லாம்….

    கைகுழந்தை ஒருநாள் திடீர்ன்னு கறுப்பாக நாலைந்து முறை வாந்தி எடுத்து விட அந்த அம்மா பயந்து போய் கணவர் இருக்கும் ஊருக்கு செல்பவர் ஒருவரிடம் தகவல் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். தகவல் சொல்ல சென்றவர் சென்ற நேரம் குறிப்பிட்ட நபர் வீட்டில் இல்லாததால் அவரது நண்பரிடம், குழந்தை, காக்கை போல் கறுப்பாக வாந்தி எடுத்ததாக கூறி விடுமாறு சொல்லி இருக்கிறார். அந்த நண்பரோ குழந்தையின் தந்தை வந்தவுடன் குழந்தை கறுப்பு காக்கைகளாக வாந்தி எடுப்பதாக கூற என்னவோ, ஏதோ என மிகவும் மிரண்டு போய் அடித்து, பிடித்து ஊருக்கு சென்றுள்ளார்.

    எப்படியெல்லாம் பீதியை கெளப்பறாய்ங்க…… 🙂

    1. சிந்து, கம்யூநிகேஷனைப் புரிஞ்சிக்கிறதை விட வம்பிலதான் உங்களுக்கு சுவாரஸ்யம் அதிகமா இருக்கு!

  8. ஜவஹர் சார், பின்னிட்டீங்க போங்க!!

    கூடவே, என் பார்வையில்:
    (எல்லாரும் ஒரே மாதிரி யோசிக்க மாட்டார்கள்தானே? சில பேர் ஒரு மாதிரி யோசிப்பாய்ங்க கூட!! நான் எப்பவுமே சற்று மாத்தி மாத்தித்தான் யோசிப்பேன், எல்லாத்திலேயுமே, அது எந்த அளவுக்குப் போச்சுன்னா, என்னால இப்போல்லாம் நேராவே யோசிக்க முடியலே, எல்லாரையும் மாதிரி. பாருங்களேன், உங்கள் இந்தப் பக்கத்தைப் பார்த்தபின் எனக்குத் தோன்றியது.

    அந்த மாமாவுக்கு அடுத்த வீட்டுப்பெண் உஷாவின் நெருங்கிய தோழி மூன்று நாட்கள் கழித்து உஷாவிடம் அழுதுகொண்டே சொன்னாளாம்!! (ஏன் மூன்று நாள் கழித்து, நாலு இல்லை ஐந்து என்று கேட்கக்கூடாது, அதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம்!!).

    தோழி உஷாவிடம்: உங்க அடுத்தாத்து மாமா ரொம்ப மோசம்டி?

    உஷா: என்னடி ஆச்சு? நான் தான் அந்த மாமா ஒருமாதிரின்னு எங்கம்மா சொல்லிருக்கான்னு நான் முதலிலேயே சொன்னேனே?

    தோழி: ஆமாம்டி, நீதான் சொல்லிட்டே. இருந்தாலும் முந்தா நாள் நான் உன்னைப் பார்த்து பிசிக்ஸ் நோட்ஸ் வாங்கலாம்னு வந்திருந்தேன். அவர் வீட்டைத் தாண்டும்போது அவர் வீட்டிலிருந்து ‘அய்யோ?’ என்று ஒரு கூக்குரல் வந்தது. நான் உள்ளே போனேன், வேறு யாருமில்லை, அவர் மட்டும்தான் இருந்தார்போலிருக்கு.

    என்ன ஆச்சு, சார் என்று கேட்க் நினைத்து உள்ளே போனால் ஆளைக்காணோம். உள்ளே பார்த்தால் மாமா பாத்ரூமிலிருந்து ஈனமாய் ஒரு குரல் கேட்டது.

    போய்ப்பார்த்தால், மாமா மல்லாக்கா விழுந்து கிடந்தார். சோப் இத்யாதி கீழே கிடந்தது. புரிந்தது, மாமா குளிக்கும்போது வழுக்கி விழுந்துவிட்டார் போல.

    மெதுவா கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு அவரை அவர்தம் அறையில் கொண்டுவிட்டேன். சற்று ஆதரவாக 5 நிமிடம் பேசிக்கொண்டிருக்கலாம் என்று உட்கார்ந்தேன். தண்ணீர் கேட்டார், எடுத்துக்கொடுத்தேன்.

    சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு அவர் கேட்டார் பாரு, ஒரு கேள்வி:

    ‘ஏம்மா, நீ யாரு? ஏன் உள்ளே வந்தாய்? உனக்கு என்ன வேண்டும்? நீ ஏன் இந்த மாதிரி ட்ரெஸ் போட்டிருக்கிறாய், பாரு, உன் தாவணி கலைந்திருக்கிறது. முதலில் அதைச் சரி பண்ணிக்கோ (ஆமாம்டி, அவருக்கு உதவி செய்ய முயலும்போது, தற்செயலாக என் தாவணி கலைந்ததை அப்போதுதான் நான் உணர்ந்தேன்).

    உஷா: சரிடி, அவர் அப்படி என்னதான் கேட்டார்? நீ ஏன் என்னிடம் உடனே சொல்லாமல் 3 நாள் கழித்துச் சொல்கிறாய்?

    தோழி: அவர் கேட்டார், உன் உள்ளாடை (மேலே) கிழிந்துள்ளதே, இதெல்லாம் பெரியவா ஆசாரமானவா இருக்கிற இடம். நீ ஏதாவது ஏடாகூடமா நடந்துண்டேன்னா என்னை எல்லாரும் தப்பா புரிஞ்சுப்பா. உனக்கு அப்படி இப்படி இருக்கணும்னா சாயங்காலமா வா, என் பையன் வருவான், அவன்கிட்டே உன் லீலைகளை எல்லாம் வச்சுக்கோ, அவந்தான் இதுக்கெல்லாம் லாயக்கு!! அப்படின்னு சொல்லிட்டு, என் கன்னத்தை கிள்ளிட்டு என் தோள் தொட்டு என் உள்ளாடையை சரிசெய்தார்டி.

    நீயே சொல்லு, நான் ஏதோ அவருக்கு உதவி செய்ய சத்தம் கேட்டுப்போனேன். அவர் என்னடான்னா என்னைக் குற்றம் சொன்னதோடு நிற்காமல் அவர் பையனோடு என்னை அப்படி இப்படி இருக்கச் சொல்றாரே? இந்த ஷாக்கிலிருந்து நான் மீளவே எனக்கு 2 நாள் ஆனதுடி, இந்தக்கூத்தில் எனக்கு ரொம்ப நாளாத் தள்ளிப்போயிட்டே இருந்ததுடி, மாமா குடுத்த ஷாக்கில் முந்தானாலேருந்து நான் 3 நாள் லீவுடி!! அதான் வெளியேவே வரலே!!

  9. சிரிக்க வெச்ச பதிவு. உங்களின் இப்பதிவை வலைச்சரத்தில்
    இணைத்திருக்கிறேன். நன்றி.

    கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.

    http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_23.html

  10. இதுக்குப் பேர் தான் கம்யூனிகேஷன் கேப்பா – ம்ம்ம்ம் – இது மாதிரி நெரெய லெக்சர் கொடுத்தாச்சு – கேட்டாச்சு – இருந்தாலும் ரசிச்சேன் – நல்லாவே இருக்கு

  11. onga blogla mottai thatha kuttaila vizhundha kadhaiya pathi oruthar kettu irundhar. enakku andha kadhai theriyum, solren , aana aiyangargal kovichukka koodadhu.
    kumbakonathula oru kalathula ore theruvula thahachariarngara peroda rendu per irundha. oruthar kudumiyoda irundhathala, kudumith thathan. innoruhar mottaiya iruppar, adhunala mottai thathan. oru nal sarangapani kovil kolathula kulikka pona mottai thathachriar vazhukki vizhundhu sethu poittar.
    Therukkarargal ellam koodivittargal. vettanukku aal anuppi avanum vandhu vittan-marra oorgalil ulla sondhakkarargalukku seithi solla.
    seithiayi thayar panninavaro parama vaishnavar. avar thayaritha seithi;
    Thirukkudanthai thiru nagaril nithyavasam panni vandha ubaya vedhanthi sriman varadha venkata srinivasa kalyana parimala kasthuri ranga ramanuja thathacharirar swmigal inru athikalai, thirukkudandhai thirusarangapani thirukkulathil thiruneerada sendriruntha pothu, thirukkulathin thiruppadiyil iruntha thiruppasi vazhukki than thirumandaiyil adi pattu thiruvaikunda thirpprapthi adaindhr.
    idhaik ketta vettian thalaiyai sorindhan.
    sami, ivvalavu perisa irukke sami. idha nan eppadi thappu illama solve?
    kettukk kondirundha oruvar sonnar.
    idhellam onnum vendam. poi, mottai thathan kuttaile vizhundhan- nu sollu, ellarkum puriyum

  12. a sense of humour is working in every mind.Wao how many comments ,replies ,various style of thought .What I am feeling now is to see the cinemas of K.Balachandar direction with a dialogue by Anathu, and acted by Kamal.very nice.

  13. a good sense of humour.the training for communication and the story used ..good.see, many are loast in the story not in the essence . as a friend replied, any communication needs verbal as well the context and bodylanguage to understand the real intentions. many times we face arguments between close relatives and friend due the lack of body language/context. good posting Jawhar

எதுவா இருந்தாலும் எழுதுங்க!